5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Facial Hair: அழகை கெடுக்கிறதா முகத்தில் இருக்கும் முடி..? பெண்களே! இதை செய்து எளிதாக நீக்குங்க!

Beauty Care: பெண்கள் முகத்தில் இருக்கும் முடிகளை அகற்ற ரேஸர் மற்றும் பல இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றன. இது சில சமயங்களில் அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்தவகையில் இன்று பெண்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி அகற்றலாம் என்பதை பார்ப்போம்.

Facial Hair: அழகை கெடுக்கிறதா முகத்தில் இருக்கும் முடி..? பெண்களே! இதை செய்து எளிதாக நீக்குங்க!
அழகு குறிப்புகள் (Image: Freepik)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 05 Oct 2024 19:38 PM

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகள் யாருக்கும் பிடிக்காது. பலருக்கு முகத்தில் இருக்கும் முடிகள் தூரத்தில் இருந்து தெளிவாக தெரிந்து அசிங்கமாக தோற்றமளிக்கும். இந்த தொல்லையில் இருந்து விடுபட பெண்கள் பல்வேறு முயற்சிகளை பயன்படுகின்றனர். அதாவது இந்த முடிகளை அகற்ற பெண்கள் ரேஸர் மற்றும் பல இரசாயன பொருட்களை பயன்படுத்துகின்றன. இது சில சமயங்களில் அவர்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அந்தவகையில் இன்று பெண்கள் முகத்தில் இருக்கும் தேவையில்லாத முடிகளை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு எப்படி அகற்றலாம் என்பதை பார்ப்போம்.

ALSO READ: Exclusive: மழைக்காலத்தில் ஆஸ்துமா இவ்வளவு ஆபத்தானதா..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

காபி மற்றும் மஞ்சள்:

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை அகற்ற சமையலறையில் இருக்கும் காபி மற்றும் மஞ்சள் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக நீங்கள் பார்லருக்கு சென்று அதிக செலவு செய்ய தேவையில்லை. சிறிதளவு தண்ணீரில் 1 டீஸ்பூன் காபி பவுடரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். இதன் பிறகு இதனுடன் மஞ்சள் சேர்க்கவும். பின் அதில் உங்களது தேவைக்கேற்ப தண்ணீரை சேர்த்து, பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் முடி கொஞ்சம் கொஞ்சமாக மறையும். இந்த கலவை உங்கள் முகத்தில் காய்ந்ததும், தேங்காயை எண்ணெயை கைகளில் தடவி முகத்தை மசாஜ் செய்து, அதன்பின் கழுவுங்கள்.

உப்பு மற்றும் அரசி மாவு:

முகத்தில் காணப்படும் தேவையற்ற முடிகளை நீங்க ஒரு சிட்டிகை உப்பு எடுத்து, அதில் சிறிதளவு அரிசி மாவு மற்றும் தயிர் போட்டு கலந்து கொள்ளவும். இதை முகத்தில் சமமாக தடவி உலர விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு மூன்று முறை செய்தால் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடியின் வளர்ச்சியை குறைத்து, சிறிது நேரம் கழித்து முடி காணாமல் போய்விடும்.

சர்க்கரை மற்றும் எலுமிச்சை சாறு:

முகத்தில் இருக்கும் முடிகளை பார்லருக்கு சென்று அகற்ற அதிக செலவாகும். அந்தவகையில், சர்க்கரை மற்றும் எலுமிச்சையை கொண்டு வீட்டிலேயே எளிதாக அகற்ற முடியும். ஒரு சிறிய கடாயில் சிறிது சர்க்கரை, எலுமிச்சை சாறு தண்ணீர் கலந்து லேசாக சூடாக்கவும். மிதமான சூடு இருந்தாலே போதுமானது. இதை முகத்தில் தடவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

அரிசி மாவு மற்றும் கடுகு எண்ணெய்:

அரிசி மாவு, கடுகு எண்ணெய் எல்லார் வீட்டிலும் எளிதில் கிடைக்கும் பொருட்கள். 1 தேக்கரண்டி அரிசி மாவில் ஒரு ஸ்பூன் மஞ்சள் மற்றும் சிறிது கடுகு எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். இவற்றை முடி இருக்கும் இடத்தில் தேய்த்து வந்தால் விரைவில் முடிகள் நீங்கும்.

வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ்:

ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் எடுத்து, அதில் பழுத்த வாழைப்பழத்தை பிசைந்து கலவையை தயார் செய்யவும். இப்போது இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சிறிது காய்ந்ததும் முகத்தை 10 நிமிடம் மசாஜ் செய்யவும். இப்படி செய்வதால் முடி படிப்படியாக உதிர தொடங்கும்.

பப்பாளி மற்றும் வாழைப்பழம்:

இரண்டு ஸ்பூன் பப்பாளி கூழ், அரை ஸ்பூன் மஞ்சள் மற்றும் மூன்று ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து, அவற்றைக் கலந்து பேஸ்ட் செய்யவும். இவற்றை முகத்தில் தடவி, காய்ந்ததும் முடி வளர்ச்சிக்கு எதிர் திசை உரித்தால் முடிகள் வெளியேறும்.

ALSO READ: Benefits of Salt in Tea: டீயில் சர்க்கரைக்கு பதில் உப்பு கலந்து குடிச்சு பாருங்க.. உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!

தேன் மற்றும் சர்க்கரை பாகு:

ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேன் மற்றும் ஒரு ஸ்பூன் தண்ணீர் கலந்து 30 விநாடிகள் சூடுபடுத்தவும். முழுவதுமாக உருகியதும் முகத்தில் மெழுகு போல் பூசவும். அதன்பின், அந்த பேஸ் மாஸ்கை மெல்ல மெல்ல உரித்து முடிகளை நீக்கவும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News