Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!
Bathroom Tips: எவ்வளவுதான் வெறும் கைகளில் பாத்ரூமில் இருக்கும் உப்புக் கரைகளை தேய்த்தாலும் போகவே போகாது. குளிக்கும்போது கீழே விழுகும் தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகும். இது உப்புக் கரையாக (கடின நீர் தாதுக்கள்) உருவெடுக்கும். லைம்ஸ்கேல் என்று அழைக்கப்படும் கடின நீர் கறைகளில் தாதுக்கள் அதிகமாக உள்ளன.
பாத்ரூமில் உப்புக் கரையை நீக்கும் முறை: என்னதான் வீடு மற்றும் சமையலறைகளை சுத்தம் வைத்துக்கொண்டாலும், பாத்ரூம் க்ளீனாக காட்சியளிக்க நாம் எடுத்தும் முயற்சிகள் பெரும்பாலும் தோல்விகளில் முடியும். அதிலும், இந்த உப்புக் கரை பிரச்சனை என்பது தீராத தலைவலியை மட்டுமே கொடுக்கும். எவ்வளவுதான் வெறும் கைகளில் பாத்ரூமில் இருக்கும் உப்புக் கரைகளை தேய்த்தாலும் போகவே போகாது. குளிக்கும்போது கீழே விழுகும் தண்ணீர் சிறிது நேரத்தில் ஆவியாகும். இது உப்புக் கரையாக (கடின நீர் தாதுக்கள்) உருவெடுக்கும். லைம்ஸ்கேல் என்று அழைக்கப்படும் கடின நீர் கறைகளில் தாதுக்கள் அதிகமாக உள்ளன. அவை பாத்ரூம் மேற்பரப்பில் சுண்ணாம்பு எச்சத்தை விட்டுச்செல்கிறது. இதுவே, பாத்ரூம் டைல்ஸ்கள், இரும்பு பைப்புகள், மார்பில்ஸ்களில் ஒட்டி கொள்கிறது. இந்த தொல்லையான கரைகளை எளிய முறையில் எப்படி நீக்கலாம் என்று பார்ப்போம்.
ALSO READ: Ant Infestation: வீட்டில் எறும்பு தொல்லையா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
டைல்ஸ் மற்றும் தரையில் உப்புக் கரையை நீக்கும் முறை:
உங்கள் பாத்ரூமில் இடம்பெற்றுள்ள உப்புக்கரை அளவிற்கு ஏற்ப, ஒரு பெரிய வட்டவடிவிலான பாத்திரம் அல்லது பிளாஸ்டிக் டப்பாவில் ஒரு கிலோ அளவிலான கோலப் பொடி போட்டு கொள்ளலாம். கோலப்பொடி பெரும்பாலும் கிராமம் முதல் நகரம் வரை அனைவரது வீட்டிலும் இருக்கும். இதில் கால் பாதி அளவு பேகிங் சோடாவை சேர்த்து கொள்ள வேண்டும்.
இதை நன்றாக கலந்துகொண்ட பின், பாத்ரூமில் எங்கெங்கு உப்புக் கரைகள் இருக்கிறதோ அவற்றின் மீது தண்ணீரை முதலில் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதன்பிறகு, கலந்து வைத்திருந்த இந்த பொடிகளை மேலே தூவி, தடவி கொள்ளவும். 5 நிமிடங்கள் இந்த பொடியானது ஊறியபின், துடைப்பம் அல்லது பாத்ரூம் கழுவும் பிரஷ் கொண்டு சிறிது அழுத்தி தேய்க்க வேண்டும். அப்போது நீங்கள் உப்புக்கரை நீங்குவதை முழுமையாக காணலாம். தொடர்ந்து தண்ணீர் ஊற்றி மீண்டும் கழுவி விட்டாது, பாத்ரூம் புதியது போல் ஆகிவிடும்.
பாத்ரூம் வாளிகள்:
ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கொலப்பொடியை வாளிகள் மீது தூவி கொள்ள வேண்டும். அதையும் சிறிது நேரத்திற்கு பின் தேய்த்து கழுவினால் பளிச்சென்று ஆகிவிடும்.
பாத்ரூம் பைப்புகளை க்ளீன் செய்ய..
ஒரு தட்டு அல்லது வேஸ்டான சிறிய டப்பா ஒன்றை எடுத்துகொள்ளவும். அதில் சிறிது அளவு பல் துலக்கும் பேஸ்டை எடுத்துகொள்ளவும். அதில், ஒரு பாதி அளவு எழுமிச்சை பழத்தின் சாறினை நன்றாக பிழிந்து ஆள்காட்டி விரலால் மிக்ஸ் செய்ய வேண்டும்.
அதன்பின், எழுமிச்சை தோலில் அந்த பேஸ்டை சிறிது எடுத்துகொண்டு பாத்ரூம் பைப்புகள் மீது தேய்த்தால் உப்புக்கரை அனைத்தும் சிட்டாக பறந்துவிடும். தேய்த்து முடித்தபின் தண்ணீர் ஊற்றி கழுவினால் பாத்ரூம் பைப்புகள் பளபளக்கும்.