5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Stain Removal Tips: சமையலறை முதல் படுக்கை அறை வரை.. பிடிவாதமான கறைகளை நீக்க செம டிப்ஸ்கள்..!

Kitchen Oil Stains: சமையலறை டைல்ஸ்களில் உள்ள எண்ணெய் கறைகளை உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால் அகற்றுவது அசிங்கமாகவும் சவாலாகவும் இருக்கும். எவ்வளவு முறை தண்ணீர் ஊற்றி, ஈர துணியால் சுவரைத் தேய்த்தாலும், எண்ணெய் கறை வெள்ளை டைல்ஸ்களில் இருந்து போகாது. இதனால் சமையலறை அசிங்கமாக காட்சி அளிக்கும். இதை நினைத்து கவலை படாதீர்கள். அதற்கான சில தீர்வுகளை இங்கே பார்க்கலாம். 

Stain Removal Tips: சமையலறை முதல் படுக்கை அறை வரை.. பிடிவாதமான கறைகளை நீக்க செம டிப்ஸ்கள்..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 Aug 2024 13:07 PM

எண்ணெய் கறை: சமையலறையில் இருக்கும் பிடிவாதமான எண்ணெய் கறை அல்லது குழந்தைகளின் குறும்புகளால், வீட்டின் சுவர்களில் கிறுக்கல் இருக்கிறதா? இதை எவ்வளவு சுத்தமாக துடைத்தாலும் போகவில்லை என்ற கவலை உங்களுக்கு இருக்கிறதா? இந்த கறை மற்றும் எண்ணெய் கறை எப்படி சுத்தம் செய்வது? வெள்ளை டைல்ஸ்களில் படிந்த எண்ணெய் கறையை எப்படி அகற்றுவது உள்ளிட்ட சில டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம். சமையலறை டைல்ஸ்களில் உள்ள எண்ணெய் கறைகளை உடனடியாக சுத்தம் செய்யாவிட்டால் அகற்றுவது அசிங்கமாகவும் சவாலாகவும் இருக்கும். எவ்வளவு முறை தண்ணீர் ஊற்றி, ஈர துணியால் சுவரைத் தேய்த்தாலும், எண்ணெய் கறை வெள்ளை டைல்ஸ்களில் இருந்து போகாது. இதனால் சமையலறை அசிங்கமாக காட்சி அளிக்கும். இதை நினைத்து கவலை படாதீர்கள். அதற்கான சில தீர்வுகளை இங்கே பார்க்கலாம்.

ALSO READ: Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!

வினிகர்:

ஒரு பாத்திரத்தில் வெள்ளை வினிகரை எடுத்து கொள்ளவும். அந்த வினிகரில் ஒரு பஞ்சை ஊற வைக்கவும். சில நொடிகள் கழித்து பாத்திரத்தில் இருந்து பஞ்சை எடுத்து சிறிது புழிந்து கொள்ளுங்கள். இப்போது வினிகரில் ஊறவைத்த பஞ்சை எண்ணெய் படிந்த இடத்தில் தேய்க்கவும். சிறிது ஸ்க்ரப்பிங் செய்தால் உங்கள் வீட்டு சமையலறை வெள்ளை டைல்ஸ்களில் உள்ள எண்ணெய் கறைகள் நீங்கும்.

சோள மாவு:

ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து அதில் மூன்று ஸ்பூன் சோள மாவு கலக்கவும். அது பேஸ்ட் ஆகும் வரை ஒரு கரண்டியால் நன்றாக கலக்கி கொள்ளுங்கள். எண்ணெய் கறை அல்லது குழந்தைகள் வரைந்த வண்ண பென்சில் கறை மீது பேஸ்ட்டை சிறிது தடவுங்கள். சில நிமிடங்கள் கடந்த பின்னர், சுத்தமான வெள்ளை துணியால் பேஸ்ட்டை அழுத்தி துடைத்து, ஸ்க்ரப் மூலம் சிறிது ஸ்க்ரப்பிங் செய்தால், பிடிவாதமான எண்ணெய் கறைகள் நீங்கிவிடும்.

பேக்கிங் சோடா:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை சுவரில் உள்ள எண்ணெய் கறையின் மீது தடவி சில நிமிடங்கள் விட்டு சுத்தமான வெள்ளை துணியால் தேய்க்கவும். அங்கிருந்த எண்ணெய் கறைகள் அனைத்தும் சில நிமிடங்களில் காணாமல் போய்விடும்.

பாத்திரம் கழுவும் திரவம்:

ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் 2 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீர் எண்ணெய் கறைகளை நீக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கலவையில் நனைத்த ஸ்க்ரப் மூலம் கறை படிந்த இடங்களை துடைக்கவும். இறுதியாக, ஒரு சுத்தமான துண்டை தண்ணீரில் நனைத்து, துடைத்தால் கறைகள் இருக்காது.

ALSO READ: Home Cleaning Tips: வீட்டை இப்படி க்ளீன் பண்ணுங்க.. நாள் முழுவதும் நறுமணம் வீசும்!

எலுமிச்சை:

எலுமிச்சையை பாதியாக வெட்டி, கறை படிந்த இடங்களில் அழுத்தி தேய்ந்து கொள்ளுங்கள். அதன் பிறகு,  பேக்கிங் சோடா கலந்த நீரில் நனைத்த துணியால் அந்த இடத்தை அழுத்தி துடைக்கவும். சுத்தம் செய்யப்பட வேண்டிய பகுதியின் அளவைப் பொறுத்து தேவையான எலுமிச்சைகளின் எண்ணிக்கையை எடுத்து கொள்ளுங்கள். அதன்பிறகு, நீரை ஊற்றி துடைத்தால் கறை போய்விடும்.

Latest News