Hair Growth Tips: நல்லெண்ணெயை இப்படி பயன்படுத்துங்க முடி அடர்த்தியா வளரும்..
முடி உதிர்வை தடுப்பதற்காக நாமும் பல ஷாம்புகளை வாங்கி பயன்படுத்திருப்போம். ஆனால், அவை அனைத்துமே தற்காலிமாக தான் பலனை தரும். நல்லெண்ணெயை கூந்தலுக்கு இப்படியெல்லாம் பயன்படுத்துவதன் கூந்தல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்ல முடியும். சரி, வாங்க நல்லெண்ணெயை எப்படி பயன்படுத்துவது என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்குமே முடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. இந்த முடி உதிர்வை தடுப்பதற்காக நாமும் பல ஷாம்புகளை வாங்கி பயன்படுத்திருப்போம். ஆனால், அவை அனைத்துமே தற்காலிமாக தான் பலனை தரும். நல்லெண்ணெயை கூந்தலுக்கு இப்படியெல்லாம் பயன்படுத்துவதன் கூந்தல் சார்ந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் குட் பை சொல்ல முடியும். தேங்காய் எண்ணெய் போலவே நல்லெண்ணெயிலும் முடிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. தற்போது இந்த நல்லெண்ணெயை எப்படியெல்லாம் பயன்படுத்தினால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்று பார்ப்போம்.
Also Read: விளக்கெண்ணெய் நிஜமாகவே எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால் என்ன ஆகும்?
கறிவேப்பிலை – நல்லெண்ணெய்
3 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 கொத்து கறிவேப்பிலையை பறித்து போட்டு, லேசாக சூடாக்கவும். ஆறிய பிறகு, அதை வடிகட்டி உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை நன்றாக தடவி மென்மையாக மசாஜ் செய்து, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு, எப்பவும் போல ஷாம்பு போட்டு தலையை அலசி கொள்ளவும். இது, முடி வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளம்வயதிலேயே முடி நரைப்பதைத் தடுக்கிறது.
வெந்தயம் – நல்லெண்ணெய்
2 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து 5 நிமிடங்கள் நன்றாக சூடாக்கிக் கொள்ளவும். அதை வடிகட்டி, ஆறவைத்து உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை தடவிக் கொள்ளவும். ஒரு டவலை சூடான தண்ணீரில் நனைத்து தலை மற்றும் முடியை சுற்றி கட்டிக்கொள்ளவும். இதை 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் எப்பவும் போல கொஞ்சமாக ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளவும். இது தலையில் பேன் இருந்தால் உடனே போக்குகிறது. பொடுகை நீக்கி, முடி உதிர்வை தடுக்கிறது.
நல்லெண்ணெய் – அவகேடோ பழம்
நன்றாக பழுத்த அவகேடோ பழத்தை நன்றாக மசித்து, அதில் 3 ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல கலந்துக்கொள்ளவும். இதை தலையில் தடவி 30-40 நிமிடங்கள் ஊறவிட்டு, தலையை ஷாம்பு போட்டு கழுவிக் கொள்ளவும். இது உச்சந்தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதோடு, முடி வளர்ச்சியையும் தூண்டுகிறது. கூந்தலும் மென்மையாக இருக்கும்.
கற்றாழை ஜெல் – நல்லெண்ணெய்
2 ஸ்பூன் கற்றாழை ஜெல்லை, 3 ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து பேஸ்ட் போல தயாரித்துக் கொள்ளவும். இதை உச்சந்தலையில் தடவி 30 ஊறவிட்டு, ஷாம்பு போட்டு தலையை அலசிக் கொள்ளவும். இது உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்கவும், முடியை வறட்சியில்லாமல் வைத்துக் கொள்ளவும் உதவும். வாரத்திற்கு இரண்டு முறை முயற்சிக்கலாம்.
Also Read: Grey Hair: நரை முடி தொந்தரவா..? இந்த வைத்தியங்களை வீட்டில் செய்யுங்க.. கருமை கரைபுரளும்!
தேங்காய் எண்ணெய் – நல்லெண்ணெய்
தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயை சமஅளவு கலந்து, உச்சந்தலை மற்றும் முடியின் வேர் வரை நன்றாக தடவி மெதுவாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 30-40 நிமிடங்கள் அப்படியே விட்டு, எப்பவும் போல ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு முடியை அலசிக் கொள்ளவும். இது வலுவிழந்த முடியை வலிமையாக்குகிறது. முடியை கண்டிஷன் செய்யவும் உதவுகிறது. தலைக்கு குளிக்கும்போதெல்லாம் இந்த செயல்முறையை பின்பற்றி வரலாம்.