Fruits Washing Tips: பழங்களை சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய மறக்காதீங்க! - Tamil News | | TV9 Tamil

Fruits Washing Tips: பழங்களை சாப்பிடுவதற்கு முன் இதை செய்ய மறக்காதீங்க!

Updated On: 

01 Jul 2024 12:47 PM

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் பல வகையான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். அவற்றில் பழங்கள் மூலம் கிடைக்கு நன்கைமள் ஏராளம். பழங்களை நம் தினசரி சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

1 / 6உடல்

உடல் ஆரோக்கியத்திற்காக நாம் பல வகையான உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். அவற்றில் பழங்கள் மூலம் கிடைக்கு நன்கைமள் ஏராளம். பழங்களை நம் தினசரி சாப்பிடுவதன் மூலம் அவற்றில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் போன்றவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும், உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது.

2 / 6

ஆனால், பழங்களை சாப்பிடும் சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது, இப்போது பழங்களில் அதிகளவில் பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. பூச்சிக்கொல்லி மற்றும் இதர மருந்துகள் படிந்த பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல.

3 / 6

எனவே, பழங்களை சாப்பிடும்முன் குறைந்தது 30 விநாடிகளுக்கு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது பழங்களின் மேற்பரப்பில் அழுக்கு மற்றும் சில பூச்சிக்கொல்லிகளை அகற்ற உதவுகிறது.

4 / 6

ஆப்பிள் மற்றும் சிட்ரஸ் போன்ற சில பழங்களின் தோலை உரிப்பது பூச்சிக்கொல்லிகளை அகற்றும். மேலும், ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி எலுமிச்சை சாறை பிழியவும். அதன்பின், இந்த தண்ணீரில் பழங்களை கழுவ வேண்டும். பூச்சிக்கொல்லியின் இருப்பை குறைந்த இந்த நீரில் கழுவவும்.

5 / 6

ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடோவை இரண்டு கப் தண்ணீரில் கலக்கவும். இந்த கரைசலில் பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

6 / 6

ஒரு பெரிய கிண்ணத்தில் தண்ணீர் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து கரைத்து அதில் பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு நன்கு கழுவவும். உப்பு நீர் பூச்சிக்கொல்லிகளை அகற்ற உதவுகிறது. இதேபோன்று வினிகரையும் சேர்த்து பழங்களை கழுவலாம்.

Follow Us On
டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version