5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Home Tips: தினமும் துணிகளை அயர்ன் செய்யும் தொல்லையா? இப்படி செய்தால் இந்த கஷ்டம் இருக்காது!

Iron Box: நீங்கள் காலையில் அவசரமாக கிளம்பும்போது போடும் சட்டை மற்றும் ஆடைகளில் சுருக்கங்கள் இருப்பதை கண்டு வெறுப்படைவீர்கள். இதற்கு கூடுதலாக சில நிமிடங்கள் எடுத்துகொண்டு மாங்கு மாங்கு என்று அயர்ன் செய்ய வேண்டியதாக இருக்கும். இது உங்களுக்கு காலையிலே கடுப்பையும், சோர்வையும் தரும். இத்தகையை சூழ்நிலையில், துணிகளை துவைத்த பிறகு, துணிகளை அயர்ன் செய்யாமல் புதியதுபோல் போட சில டிப்ஸ் உள்ளது.

Home Tips: தினமும் துணிகளை அயர்ன் செய்யும் தொல்லையா? இப்படி செய்தால் இந்த கஷ்டம் இருக்காது!
அயர்ன் செய்யும் முறை (Image: FREEPIK)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 03 Oct 2024 14:09 PM

ஒவ்வொரு நாளும் துணிகளை துவைப்பது, மடிப்பது மற்றும் அயர்ன் செய்வது என்றே பெரும்பாலான நேரங்கள் கழிந்து விடுகிறது. நீங்கள் காலையில் அவசரமாக கிளம்பும்போது போடும் சட்டை மற்றும் ஆடைகளில் சுருக்கங்கள் இருப்பதை கண்டு வெறுப்படைவீர்கள். இதற்கு கூடுதலாக சில நிமிடங்கள் எடுத்துகொண்டு மாங்கு மாங்கு என்று அயர்ன் செய்ய வேண்டியதாக இருக்கும். இது உங்களுக்கு காலையிலே கடுப்பையும், சோர்வையும் தரும். இத்தகையை சூழ்நிலையில், துணிகளை துவைத்த பிறகு, துணிகளை அயர்ன் செய்யாமல் புதியதுபோல் போட சில டிப்ஸ் உள்ளது.

இதுபோன்ற தந்திரங்களை நீங்கள் பயன்படுத்தும்போது உங்களது குழந்தைகளின் சீருடையாக இருந்தாலும் சரி, உங்களது அலுவலக உடையாக இருந்தால் சரி அயர்ன் செய்ய தேவையில்லை. இதையடுத்து, நாங்கள் சொல்லும் சில தந்திரங்களை பயன்படுத்தி ஆடைகளை அப்படியே போட்டு அலுவலகம் செல்லுங்கள்.

ALSO READ: Monsoon Health Tips: மழைக்காலத்தில் படையெடுக்கும் நோய்கள்.. உங்களை பாதுகாத்து கொள்வது எப்படி..?

இப்போது கடைகளில் நீராவி அயர்ன் பாக்ஸ், கம்பியில்லா அயர்ன் பாக்ஸ், நீராவி ஜெனரேட்டர் அயர்ன் பாக்ஸ், டிராவல் அயர்ன் பாக்ஸ் என பல வகையான அயர்ன் பாக்ஸ் வரத் தொடங்கியுள்ளன. உங்கள் தேவைக்கு ஏற்ப எந்த அயர்ன் பாக்ஸ் வாங்கினாலும் பாதுகாப்பானதா, நீண்ட நாட்கள் வருமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

எளிய வழிமுறைகள்:

  • துணிகளில் சுருக்கங்கள் தெரிந்தால், ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், பாதியளவு தண்ணீர் மற்றும் பாதியளவு வெள்ளை வினிகர் கலந்து கொள்ளுங்கள். துவைத்து உங்கள் துணியை உலர்த்தும் முன் சுருக்கங்கள் உள்ள இடத்தில் தெளிக்கவும். இப்போது, துணி முழுமையாக காய்ந்த பிறகு சுருக்கங்கள் தெரியாது.
  • துணிகளை துவைக்கும்போது வாஷின் மெஷினில் முதலில் பாதி துணிகளை போடுங்கள். அதன் மீது 7 முதல் 8 ஐஸ் கட்டிகளை போடுங்கள். மீண்டும், முழு துணிகளை போட்டு துவைத்து கொள்ளுங்கள். ட்ரையரில் போதும்போதும் சில ஐஸ் கடிகளை போட்டு துணியை ட்ரை செய்யுங்கள். நீங்கள் ட்ரையரில் ஐஸ் கட்டிகளை போடும்போது, அது வெப்பத்தால் ஐஸ் கட்டி நீராவியாக மாற தொடங்குகிறது. இந்த நீராவிகள் துணிகளில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • துவைத்து உலர்த்தியபின் துணிகளை வெறுமனே ரேக்கில் மடித்து வைக்காதீர்கள். இவற்றை நீண்ட நாட்கள் ரேக்கில் மடித்து வைக்கும்போது கறை படிந்து பல இடங்களில் சுருக்கங்கள் விழ வாய்ப்பு அதிகம். எனவே, இவற்றை தடுக்க, ஒரு ஹேங்கரில் தொங்கவிடுவது நல்லது. இதனால், கறையும் ஏற்படாது, சுருக்கங்களும் விழாது.
  • உங்களிடம் ஹேங்கர் இல்லை மடித்துதான் வைக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டால், சுருக்கங்கள் இல்லாமல் துணிகளை சரியாக மடித்து கனமான ஒன்றை அழுத்தி வைக்கவும். இதன்மூலம், உங்கள் சட்டை மற்றும் உடையில் சுருக்கங்கள் ஏற்படாது.

ALSO READ: Plastic Containers: எவ்வளவு கழுவினாலும் பிளாஸ்டிக் டப்பாவில் மஞ்சள் கறையா..? அகற்ற இந்த முறையே பயன்படுத்தலாம்!

உங்கள் துணியை அயர்ன் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் இதை பின்பற்றுங்கள்:

அயர்ன் பாக்ஸை பயன்படுத்துவதற்கான சில குறிப்புகள்:

  • அயர்ன் செய்வதற்கு முன், துணி மற்றும் துணியின் தரத்திற்கு ஏற்ப வெப்பநிலையை கூட்டவும், குறைக்கவும் செய்து பழகுங்கள்.
  • துணிகளை அயர்ன் செய்வதற்கு முன் எப்போதும் குறைந்த வெப்பத்துடன் தொடங்கவும். பின்னர் தேவைக்கேற்ப வெப்பத்தை அதிகரிக்கவும்.
  • ஒரு தட்டையான மேற்பரப்பில் வைத்து மட்டுமே துணியை அயர்ன் செய்யவும். மேடு, பள்ளம் மற்றும் கரடுமுரடான இடங்களில் உங்கள் துணிகளை அயர்ன் செய்யும்போது மேலும் சுருக்கங்களை மட்டுமே ஏற்படுத்தும்.
  • அதிகபடியான சுருக்கங்களை அகற்ற, சிறிதளவு தண்ணீரை தெளித்து அயர்ன் பாக்ஸை அதிக சூட்டில் வைத்து அழுத்தி தேய்த்தால் சுருக்கங்கள் காணாமல் போகும்.
  • கம்பளி அல்லது மிகவும் இலகுவான ஆடைகளில் நேரடியாக அயர்ன் பாக்ஸை பயன்படுத்த வேண்டாம். முதலில் அதை ஒரு பருத்தி துணியால் மூடி, பின்னர் அதை அயர்ன் செய்யவும்.
  • பருத்தி துணிகளை கடினமாக அயர்ன் செய்ய, அவற்றை லேசாக ஈரப்படுத்தவும்.

அயர்ன் பாக்ஸை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும், ஒருபோதும் ஸ்விட்ச் போர்டில் இருந்து அவிழ்க்காமல் அப்படியே விட்டு விடாதீர்கள். அப்போதும் அயர்ன் பாக்ஸை பயன்படுத்திய பிறகு சுவிட்ச் போர்டில் இருந்து கவனமாக அவிழ்த்து யார் கையும் படாத அளவிற்கு பத்திரமாக வையுங்கள்.

Latest News