5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Acne Tips: 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருகிறதா? இவை காரணங்களாக இருக்கலாம்!

Skin Care Tips: 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்காலம். இப்போதெல்லாம், தங்கள் அழகை பராமரிக்க சிறு வயதிலேயே பல வகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றன. இந்த வகை ரசாயனங்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இந்தியாவில் சுற்றுசூழல், வெப்பம் மற்றும் மாசுப்பாடு காரணமாக முகத்தில் பருக்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

Acne Tips: 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருகிறதா? இவை காரணங்களாக இருக்கலாம்!
முகப்பரு (Image: GEETY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 04 Oct 2024 17:03 PM

இளமை பருவத்தில் முகத்தில் பருக்கள் தோன்றுவது இயல்பான ஒரு விஷயம்தான். இவை இளமை காலத்தை கடந்து உங்களுக்கு வந்து தொல்லை கொடுத்தால், நீங்கள் கவனம் பெறுவது முக்கியம். 30 வயதுக்கு பிறகும் முகத்தில் பருக்கள் வருவது ஏன் என்ற கேள்வி மக்களிடையே உள்ளது. இதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்காலம். இப்போதெல்லாம், தங்கள் அழகை பராமரிக்க சிறு வயதிலேயே பல வகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகின்றன. இந்த வகை ரசாயனங்கள் முகத்திற்கு தீங்கு விளைவிக்கிறது. இந்தியாவில் சுற்றுசூழல், வெப்பம் மற்றும் மாசுப்பாடு காரணமாக முகத்தில் பருக்கள் வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். 30 வயதிற்கு பிறகு முகத்தில் பருக்கள் தோன்றுவதற்கு, இவைகள் காரணமாக இருக்கலாம்.

ALSO READ: Food Recipes: ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ​​சிக்கன் வெள்ளை பிரியாணி.. 15 நிமிடத்தில் சூப்பர் டிஸ் தயார்..!

ஹார்மோன் மாற்றம்:

நம் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்வது இயல்பான ஒரு விஷயம் ஆகும். இதன் காரணமாகவே முகத்தில் பருக்கள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். பலர் கடைகள் மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் அழகு சாதன பொருட்களை கொண்டு பருக்களை குணப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதனால், இவர்களுக்கு பெரிய அளவில் தீர்வுகள் கிடையாது. மருத்துவரிடம் சென்று ஹார்மோன் தொடர்பான சோதனை மேற்கொள்வது நல்லது. இதன்மூலம், பரு வருவதற்கான காரணம் என்னவென்று தெரியும்.

மோசமான உணவு:

மோசமான உணவு பழக்கம் நம் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, சருமத்தையும் பாதிக்க செய்யும். அதிகளவில் சர்க்கரை, பால், பனீர் மற்றும் எண்ணெய் உணவுகள் போன்றவற்றை சாப்பிடுவது நம் சருமத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நவீன வாழ்க்கை முறையில் வெளியில் சாப்பிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இது ஆரோக்கியம் மற்றும் சருமம் என இரண்டையும் பாதிக்க செய்கிறது. வறுத்த எண்ணெய் உணவுகளை அதிகளவில் சாப்பிடும்போது உச்சந்தலையில் எண்ணெய் பசையாகி, முகத்தில் கூடுதல் எண்ணெய் கூட உருவாகிறது. இத்தகைய சூழ்நிலையில், அழுக்கு சேர்ந்தால் முகத்தில் பருக்கள் தோன்றும்.

மாசு:

வானிலை மாறினாலும் சரி, காற்று மாசு அடைந்தாலும் சரி இவை முதல் நமது சருமத்தையே சேதப்படுத்தும். மாசுக்கள் சருமத்தில் இருக்கும் இயற்கை எண்ணெயுடன் சேர்ந்து முகத்தில் இருக்கும் துளைகளில் குவிந்து விடுகிறது. துளைகள் அடைக்கப்பட்டால், சிறிது நேரம் கழித்து பருக்கள் தோன்றும். எனவே, முகத்தை அவ்வப்போது கழுவுவது நல்லது. இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் பருக்கள் வராமல் தடுக்கலாம்.

வைட்டமின் பி7 குறைபாடு:

வைட்டமின் பி7 பயோட்டின் என்றும் அழைக்கப்படுகிறது. உடலில் வைட்டமின் பி7 குறைபாடு இருந்தாலும், முகத்தில் அழற்ஜி மற்றும் பருக்கள் தோன்றலாம். இதன் குறைபாட்டை தவிர்க்க அசைவ உணவுகளை எடுத்து கொள்ளலாம். நீங்கள் அசைவம் சாப்பிடாதவர்களாக இருந்தால், ஆரோக்கியமான சைவ உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

ALSO READ: Cauliflower Benefits: காலிஃபிளவர் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இவ்வளவா..? ஆரோக்கியத்திற்கு சிறந்தது..!

பருக்கள் அதிகரிக்காமல் இருக்க என்ன செய்யலாம்..?

  • உங்கள் சருமத்தில் முகப்பரு வந்தால், அதை அழுத்தவோ, தேய்க்கவோ வேண்டாம். இது முகத்தில் மேலும் பருக்களை உண்டாக்க செய்யும்.
  • ஒரு நாளைக்கு ஒரு முறை லேசான ஃபேஸ் வாஷ் மற்றும் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுவது நல்லது. இதற்கு மேல் பரு மீது எந்த அழுத்தத்தையும் தரக்கூடாது. ஏனென்றால், அழுத்தி தேய்க்கும்போது பரு உடைந்து முகப்படு அதிகம் வர வாய்ப்புள்ளது.
  • உங்கள் முகத்திற்கு அருகில் வைக்கப்படும் பொருட்களை தூய்மையாக வைத்து கொள்வது மிக முக்கியம். அதாவது, தலையணை, மேக்கப் பிரஷ், மொபைல் போன்றவற்றை சுத்தமாக வைத்து கொள்வது நல்லது.
  • நீங்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போதெல்லாம், உங்கள் முகத்தில் எண்ணெய் படியாமல் இருக்க சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது. இது சூரிய ஒளியில் இருந்து உங்கள் முகத்திற்கு தேவையான பாதுகாப்பை தரும்.
  • தலைமுடியில் பொடுகு, பேன் இருந்தாலும் முகத்தில் முகப்பரு ஏற்படலாம். எனவே, உங்கள் தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். அதேபோல், அதிகப்படியான எண்ணெயும் உங்கள் முகத்தில் பருக்களை உண்டாக்கலாம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News