Vitamin D: மழை, குளிர் காலத்தில் அதிகரிக்கும் வைட்டமின் டி குறைபாடு… இந்த பிரச்சனையை தவிர்க்க என்ன செய்யலாம்?
Importance of vitamin D: வைட்டமின் டின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளியாகும். காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது, வைட்டமின் டி குறைபாட்டை குணமாகும். அதேபோல், சில உணவுகள் மூலமும் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யலாம்.
ஆரோக்கியத்தை பராமரிக்க அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை எடுத்துக்கொள்வது மிக முக்கியம். உடலின் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால், உடலில் உடனடியாக அறிகுறிகள் தோன்றும். வைட்டமின் டி என்பது உடலுக்கு தேவையான முக்கிய வைட்டமின்களில் ஒன்று. வைட்டமின் டி பெரும்பாலும் சூரிய கதிர்களில் இருந்து நமக்கு கிடைக்கும். வைட்டமின் டி நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. இது உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உறிஞ்சுவதற்கு உதவி செய்யும்.
இத்தகைய சூழ்நிலையில், மழை மற்றும் குளிர் காலத்தில் மேகம், மூடு பனி காரணமாக, பெரும்பாலான மக்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். வைட்டமின் டி குறைபாடு குழந்தைகள், வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான பிரச்சனை. வைட்டமின் டி குறையும்போது, சிறுநீரகம், கல்லீரல் நோய், கிரோன் நோய், சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
ALSO READ: Diabetes Food: சர்க்கரை நோயாளிகள் தேனும், வெல்லமும் சேர்க்கலாமா..? இவை பலன் தருமா..?
வைட்டமின் டின் முக்கிய ஆதாரம் சூரிய ஒளியாகும். காலையில் சூரிய ஒளியில் சிறிது நேரம் நிற்பது, வைட்டமின் டி குறைபாட்டை குணமாகும். அதேபோல், சில உணவுகள் மூலமும் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இவற்றை எடுத்துக்கொள்வதன் மூலமும் வைட்டமின் டி குறைபாட்டை சரி செய்யலாம்.
வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள்:
- தசை பலவீனம்
- தசை பிடிப்பு
- எலும்பு வலி
- கை, கால்களில் கூச்சம்
- உடல் சோர்வு
- மனசோர்வு
- படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவதில் சிரமம்
- நடப்பதில் சிரமம்
- முடி உதிர்தல்
வைட்டமின் டி குறைபாட்டை தவிர்க்க என்ன செய்யலாம்..?
ஆரஞ்சு பழம்:
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. அதேபோல். ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் டி சத்துகளும் உள்ளது. ஆரஞ்சு பழச்சாறு குடிப்பதால் வைட்டமின் டி கிடைப்பது மட்டுமின்றி உடலை நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுகிறது.
காளான்கள்:
காளான்களில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. அதாவது, காளானில் D2 (ergocalciferol) நிறைந்துள்ளது, இது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும்.
முட்டை:
தினந்தோறும் முட்டை சாப்பிடும் நபர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏற்படும் அபாயம் குறைவு. அதாவது, 2 முட்டைகளில் சராசரியாக 8.2 எம்.சி.ஜி வைட்டமின் டி இருப்பதாக ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. இது வைட்டமின் டி-ன் பரிந்துரைக்கப்பட்ட உணவு உட்கொள்ளலில் 82 சதவீதம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
ALSO READ: Treadmill Running: டிரெட்மில்லில் ஓடும் பழக்கம் கொண்டவரா..? நன்மை, தீமைகள் இவ்வளவு இருக்கு!
ப்ரோக்கோலி:
முட்டையை போன்று ப்ரோக்கோலியிலும் வைட்டமின் டி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில், நார்ச்சத்து மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற சத்துக்களும் உள்ளன. இதன் காரணமாக, மழைக்காலத்தில் தினசரி உணவில் வேகவைத்த ப்ரோக்கோலியை எடுத்துக்கொள்ளலாம்.
கீரை:
இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் கீரையை எடுத்துக்கொள்வதே கிடையாது. சத்து நிறைந்த கீரைகளில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. மேலும், கீரைகளில் இரும்பு – கால்சியம் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துகள் உள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை தரும்.
வைட்டமின் டி கேப்சுல் அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்:
- உடலில் வைட்டமின்-டி அதிகமாக இருப்பது நல்லதல்ல. அடிக்கடி வயிற்று வலி, பசியின்மை, வாந்தி, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை தரும்.
- வைட்டமின்-டியை அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உங்கள் செரிமான அமைப்பை பாதிக்கும்.
- வைட்டமின் டி அதிகமாக எடுத்துக் கொண்டால், அது உடலில் கால்சியம் படியத் தொடங்குகிறது. கால்சியம் படிவுகள் உங்கள் உடலில் எங்கும் ஏற்படலாம். மேலும், அதிக கால்சியம் சிறுநீரக கற்கள் உருவாவதற்கு வழிவகுக்கும்.
- நீங்கள் வைட்டமின் டி சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொண்டால், எப்போதும் ஒரு நிபுணரின் ஆலோசனையின் பேரில் மட்டுமே அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், அதன் மருந்தளவுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)