5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips:‌ கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!

Kallakuruchi Travel: காலாண்டு விடுமுறை தொடங்கியுள்ளது. இந்த விடுமுறையில் எங்கே செல்வது என்பது பலரின் தேடலாக இருக்கும். தூர தொலைவுக்கு செல்ல முடியாதவர்கள் அருகிலேயே சுற்றிப் பார்க்க நினைப்பார்கள். வரலாற்று சுவடுகளை சுமந்து நிற்கும் கள்ளக்குறிச்சியை சுற்றி இருந்தால் அங்குள்ள சுற்றுலா தளங்களுக்கு ஒரு விசிட் அடியுங்கள்.

Travel Tips:‌ கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்!
மணி முக்தா அணை
Follow Us
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Updated On: 30 Sep 2024 09:37 AM

தமிழகத்தின் 34 வது மாவட்டமான கள்ளக்குறிச்சி, பண்டைய காலங்களில்,இப்பகுதி சோழர்கள், பல்லவர்கள் மற்றும் திருக்கோவிலூர் மன்னர் மலையமான் போன்ற பல்வேறு உள்ளூர் தலைவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. சோழநாடு மற்றும் தொண்டைநாடு இடையே அமைந்திருப்பதால், இப்பகுதி நடுநாடு (நடுநிலம்) என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், இது செஞ்சி நாயக்கர்கள், ஆற்காடு நவாப்களின் கைகளுக்கு இடையே சென்றது.

இயற்கை எழில் கொஞ்சும் மலைகள், புகழ்பெற்ற கோவில்கள் மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகள் கள்ளக்குறிச்சிக்கு ஒரு தனிச்சிறப்பு அளிக்கிறது. இத்தகைய சிறப்புமிக்க கள்ளக்குறிச்சியில் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

கல்வராயன் மலை:

கள்ளக்குறிச்சி மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த கல்வராயன் மலை. இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கோமுகி அணை, கரிய கோயில் நீர்த்தேக்கம், அதை ஒட்டிய அழகிய பூங்கா, மான் கொம்பு நீர்வீழ்ச்சி, மேக அருவி, பெரியார் அருவி, பண்ணிய பாடி அருவி போன்றவை காணப்படுகின்றன.

குளியலறை வசதிகளும் அருவிக்கு அருகில் செய்யப்பட்டுள்ளது. இங்கு படகு சவாரி செய்யலாம். காட்டுப்பன்றி, செந்நாய், மான், கரடி போன்ற விலங்குகளை காணும் வாய்ப்பு கிடைக்கும். இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வெள்ளிமலை:

தமிழகத்தில் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று ஏராளமான மலைப் பிரதேசங்கள் இருக்கிறது. ஆனால் வெளியே தெரியப்படாமல் நிறைய மலைப்பிரதேசங்கள் தமிழகத்தில் நிறைந்திருக்கிறது. அதில் ஒன்றுதான் கிழக்கு தொடர்ச்சி மலை கல்வராயன் பகுதியில் அமைந்துள்ள வெள்ளிமலை மலை கிராமம். கரடு முரடாக மலைப் பிரதேசங்கள், ரம்மியமான காட்சிகள், நீர்வீழ்ச்சிகள், சுவையான காபி கொட்டைகள், மிளகுத் தோட்டங்கள், சாசகங்கள் என சுற்றுலாப் பயணிகளை கட்டிப் போடுகிறது.

இந்த மலையின் இயற்கை தன்மை காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. வெள்ளி மலையில் கூடாரம் போட்டு தங்குவது சிறந்த அனுபவத்தை தருகிறது. மீன் பிடித்தல், மலையேற்றம் போன்றவற்றில் ஈடுபடலாம். இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: தஞ்சாவூர் சுற்றுலாத் தலங்கள்… இவ்வளவு இடங்கள் இருக்கா?

மணி முக்தா அணை:

கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் கொள்ளளவு கொண்டது மணிமுக்தா அணை. இந்த அணையின் மீது ஏறி இயற்கை அழகை ரசிக்கலாம். இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோமுகி அணை:

கல்வராயன் அடிவாரத்தில் அமைந்துள்ளது கோமுகி அணை. கல்வராயன் மலைப்பகுதியில் பெய்யும் மழை நீர் முழுவதும் பல ஆறுகளின் வழியாக இந்த அணைக்கு வருகிறது. கோமுகி அணியின் மொத்த கொள்ளளவு 46 அடி ஆகும். பல சிலைகள், கண்கவர், விளக்குகள், காட்சி மேடைகள் பூங்கா என இந்த அணையை சுற்றி பல பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

தியாகதுருகம் மலை:

தியாகதுருகம் குன்றின் மீது ஒரு கோட்டை கட்டப்பட்டுள்ளது. இதனை கிபி 1760 ஆண்டு முதல் ஹைதர் அலி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அதன் பின் ஆங்கிலேயர் வசம் வந்ததை எடுத்து திப்பு சுல்தான் போர் புரிந்தார். எனினும் அங்கு ஆங்கில ஆட்சியை நிலையானது. இந்த கோட்டை ராணுவ தளங்களாக செயல்பட்டு வந்தது. அதற்கான வரலாற்று சுவடுகள் அங்கே காட்சிகளாக இருக்கிறது.

இந்த மலையின் மீது நிறைய குகைகள், சுனை நீர்க்கிணறு, மண்டபம் என அமைந்துள்ளது. இந்த மலையின் மீது ஏறி நின்று பார்த்தால் ஊரின் மொத்த அழகும் தெரியும்.‌ இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 12.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருக்கோயிலூர் உலகளந்த பெருமாள் கோவில்:

கடல் மட்டத்திலிருந்து சுமார் 124 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். இந்தக் கோயிலில் பெருமாள் ஒரு காலில் நிண்ட நிலையில் ஒரு காலில் மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கிறார். கோயில் அமைந்துள்ள திருக்கோவிலூர் மாநகரம் தென்பெண்ணை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திலிருந்து 44 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

 

Latest News