வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் சென்னை.. பாரம்பரிய இடங்கள் தெரியுமா?

Historical Places in Chennai: சென்னை பல வரலாற்று நினைவுகளை சுமந்து நிற்கிறது. இந்த நகரம் பல்வேறு ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. உலகின் மிகவும் பழமையான மாநகராட்சிகளில் இதுவும் ஒன்று. ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்ட மிகவும் பழமையான பாரம்பரிய இடங்களை பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்

வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கும் சென்னை.. பாரம்பரிய இடங்கள் தெரியுமா?

சென்னைப் பல்கலைக்கழகம் (Photo Credit: Wikipedia)

Published: 

23 Nov 2024 17:28 PM

ஆங்கிலேயர்கள் காலத்தில் சென்னை நகரில் கட்டப்பட்ட பல வரலாற்று கட்டிடங்கள் உள்ளன.‌ அது பல வரலாற்று சுவடுகளை தாங்கி நிற்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சில வரலாற்று சிறப்புமிக்க பழமையான இடங்களில் தகவல்கள் இதோ.

புனித ஜார்ஜ் கோட்டை:

ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை. இது 1639 ஆம் ஆண்டு பிரான்சிஸ் டே மற்றும் ஆண்ட்ரூ கோகன் ஆகிய இருவரின் முயற்சியால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்த கோட்டை தமிழக அரசின் தலைமை செயலகமாக இயங்கி வருகிறது. இந்த வளாகத்திற்குள் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த அருங்காட்சியகத்தில் ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய சீருடைகள், ஆயுதங்கள், மெடல்கள், நாணயங்கள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இங்கு கிளைவ், கார்ன்வாலிஸ் பிரபு ஆகியோரின் சிலைகள் உள்ளன. மேலும் நாட்டின் மிகப்பெரிய கொடிமரம் இங்கு உள்ளது. இதன் உயரம் 150 அடியாகும். மேலும் இந்த வளாகத்திற்குள் நாமக்கல் கவிஞர் மாளிகை, புனித மேரி தேவாலயம் அமைந்துள்ளது.

ரிப்பன் மாளிகை:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த ரிப்பன் மாளிகை 1913 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம் லோகநாத முதலியார் என்பவரால் கட்டப்பட்டது. உள்ளாட்சி நிர்வாகத்தில் பல சீரமைப்புகளை செய்த ரிப்பன் பிரபுவின் நினைவாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்திற்கு ரிப்பன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்பொழுது சென்னை மாநகராட்சியின் தலைமை இடமாக செயல்பட்டு வருகிறது.

மெட்ராஸ் போர்க் கல்லறை:

சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள இந்த போர் கல்லறை 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. சுமார் 2.75 ஏக்கரில் அமைந்துள்ள இந்த கல்லறையில் எந்த உடல்களும் அடக்கம் செய்யப்படவில்லை. இரண்டாம் உலகப்போரில் மரணத்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக அவர்கள் பெயர் தாங்கிய கல்லறை மட்டுமே இங்கு இருக்கிறது.

இங்கு 1914 – 1918 போர் நினைவு சின்னமும் உள்ளது. இங்கு முதலாம் உலகப் போரில் மரணித்த 1039 வீரர்களின் பெயர்களை கொண்ட கல்லறைகளும் உள்ளது. உலகப் போர்களில் மரணித்தவர்களின் பெயர்கள் என்றென்றும் நிலைத்திருப்பதற்காக இந்த கல்லறை அமைக்கப்பட்டுள்ளது.

Also Read: Tourist Spots: இந்தியாவில் உள்ள ஏரிகளின் நகரங்கள் எது என்று தெரியுமா?

சாந்தோம் பேராலயம்:

மயிலாப்பூரில் அமைந்துள்ள இந்த பேராலயம் 16-ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களால் தோமாவின் கல்லறை மீது கட்டுப்பட்டதாகும். பின்னர் 1893 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இதனை விரிவாக்கம் செய்தனர். 1521 ஆம் ஆண்டுகளில் இந்த தேவாலயம் இஸ்லாமியர்களின் கண்காணிப்பில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சாந்தோம் தேவாலயத்தின் பெரிய கோபுரம் 155 உயரம் கொண்டதாகும்.

தேவாலயத்தின் உட்புறம் 112 அடி நீளமும் 33 அகலமும் கொண்டது. 2006 ஆம் ஆண்டு இது தேசிய வழிபாட்டு தலமாக அறிவிக்கப்பட்டது. இந்த தோமா என்பவர் இயேசு தமது நற்செய்தியை பரப்புவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 திருத்தூதர்களில் ஒருவர் ஆவார். புனித தோமா கிபி 52 ஆம் ஆண்டு இயேசுவின் நற்செய்தியை பரப்பதற்காக இந்தியா வந்தார் என்று கூறப்படுகிறது.

சென்னைப் பல்கலைக்கழகம்:

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக்கழகம் ஒன்று. 1857 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பல்கலைக்கழகம் ஆரம்பத்தில் மருத்துவம், பொறியியல், சட்டம், என அனைத்து துறைகளையும் கொண்டு இருந்த ஒரே பல்கலைக்கழகமாகும். பின்னர் கலைத் துறையை தவிர மற்றத்துறைகள் பிற பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்டது.

இந்தப் பல்கலைக்கழகம் தென்னிந்தியாவின் தாய் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் நூலகம் இந்திய – ஆங்கிலேய வகையில் அமைக்கப்பட்டது. தேம்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ள லண்டன் பல்கலைக்கழகத்தின் மாதிரியாக கூவ நதிக்கரையில் இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகம் ஐந்து இந்திய ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்:

சென்னை பாரிஸில் அமைந்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் 1862 ஆண்டு நிறுவப்பட்டது. இது உலகில் இரண்டாவது மிகப்பெரிய நீதிமன்ற வளாகம் என்று கருதப்படுகிறது. தந்தை பெரியார் மீது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ந்த வழக்கு, பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நடத்திய வழக்கு, நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக அண்ணாதுரை மீது தொடரப்பட்ட வழக்கு என இந்த நீதிமன்றத்தில் நடைபெற்ற குறிப்பிடத்தக்க பல வழக்குகள் உள்ளன.

அரசு அருங்காட்சியம்:

சென்னை எழும்பூரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் 1851 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 16.25 ஏக்கரில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தில் தொல்லியல், நாணயவியல், விலங்கியல், இயற்கை அறிவியல், சிற்பம் ஆகிய துறையில் சேர்ந்த ஏராளமான பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 1853 ஆம் ஆண்டு இங்கு ஒரு பொது நூலகமும் தொடங்கப்பட்டது. இங்கு ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Also Read: Travel: மறக்காம போங்க.. இந்தியாவின் அழகான 5 கிராமங்கள்!

நேப்பியர் பாலம்:

கூவம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் மெரினா கடற்கரை மற்றும் புனித ஜார்ஜ் கோட்டையை இணைக்கிறது. 1869 ஆம் ஆண்டு பிரான்சிஸ் நேப்பியர் என்பவரால் கட்டப்பட்ட மிகப் பழமையான பாலமாகும். சென்னையில் நடந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்வின்போது இந்த பாலம்‌ சதுரங்க பலகையின் தோற்றத்தில் வர்ணம் பூசப்பட்டிருந்தது பலரையும் வெகுவாக கவர்ந்தது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?