5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்கள்…

Tourist Spots in Sivaganga: சிவகங்கை மாவட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 1984 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டது. தமிழகத்திலேயே மிகப்பெரிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இங்கு உள்ளது. கவிஞர் கண்ணதாசன், வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள், கணியன் பூங்குன்றனார் போன்ற பெருமைமிகு மாந்தர்கள் பிறந்த இந்த சிவகங்கை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் சுற்றிப் பார்க்க சிறப்பான சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Travel Tips: சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்கள்…
கீழடி (Photo Credit: Pinterest)
mohamed-muzammiltv9-com
Mohamed Muzammil | Published: 03 Nov 2024 15:53 PM

17 ஆம் நூற்றாண்டில் இந்தப் பகுதி இராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்டிருந்தது. பின்பு வேலு நாச்சியாரின் ஆளுகைக்கு பட்டிருந்த இந்தப் பகுதி பல சிறப்பு சுற்றுலா தலங்களை கொண்டுள்ளது.‌

கீழடி அருங்காட்சியகம்:

இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அளவிலான அகழாய்வு. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு தொடர்புள்ள இந்த அகழாய்வு கிபி 6ஆம் நூற்றாண்டிற்கும் 5ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டது. இங்கு பத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள், சுடுமண் குழாய், கழிவுநீர் தொட்டிகள், உறைக் கிணறுகள், செங்கற் சுவர்கள், தமிழ் பிராமி எழுத்துக்கள், அணிகலன்கள், மண்பாண்டங்கள், அரிய தொல்பொருள்கள் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது பண்டைய தமிழரின் நாகரீக வாழ்க்கையை காட்டுகிறது. இங்கு கிடைக்கப்பட்ட பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்படுகிறது. இந்த அருங்காட்சியகம் சிவகங்கையில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவிலும் மதுரையிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சிவகங்கை அரண்மனை:

கௌரி விலாசம் என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை திருமலை நாயக்கர் கால கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த அரண்மனைக்குள் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் ஒன்று அமைந்துள்ளது.‌ இந்த அரண்மனை பல வரலாற்று சம்பவங்களுடன் தொடர்புடையதாகும். இந்த அரண்மனையில் அரசி வேலு நாச்சியார், வெள்ளச்சி நாச்சியார், ராணி காத்தம்ம நாச்சியார் ஆகியோர் வசித்துள்ளனர். 70களில் இந்த அரண்மனை பல தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது. இந்த அரண்மனை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 800 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வேலு நாச்சியார் மணிமண்டபம்:

ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்ட வீரமங்கை வேலுநாச்சியார் நினைவாக வேலு நாச்சியார் மணிமண்டபம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஹைதர் அலியிடம் உதவி பெற்ற வேலுநாச்சியார் 1780 ஆம் ஆண்டு குயிலியின் துணையோடு சிவகங்கை மீட்டார். எனவே குயிலின் தியாகத்தை போற்றும் வகையில் வேலு நாச்சியார் மணிமண்டபத்தில் குயிலுக்கும் நினைவுத்‌ தூண் அமைக்கப்பட்டிருக்கிறது. இது சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: தஞ்சாவூர் சுற்றுலாத் தலங்கள்… இவ்வளவு இடங்கள் இருக்கா?

ஆயிரம் ஜன்னல் வீடு:

காரைக்குடியின் முக்கிய அடையாளங்களின் ஒன்றாக திகழப்படுகிறது இந்த ஆயிரம் ஜன்னல் வீடு. சிமெண்ட் பயன்படுத்தாமல் சுண்ணாம்பு கற்களை பயன்படுத்தி கட்டப்பட்ட வீடாகும். 20,000 சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் இந்த வீட்டில் 25 பெரிய அறைகளும் 5 கூடங்களும் உள்ளன. ஆயிரம் ஜன்னலுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த வீடு காரைக்குடி பாரம்பரிய முறையில் கட்டப்பட்டுள்ளது. இது காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்:

திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் சுமார் 38 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்தப் பறவைகள் சரணாலயத்திற்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை பல்வேறு வகையான பறவைகள் வந்து செல்கின்றன. சாம்பல் ஹெரான்ஸ், டார்டர்ஸ், ஸ்பூன்பில்ஸ், ஒயிட் ஐபிஸ், ஏசியன் ஓபன் பில் ஸ்டோர்க்ஸ், நைட் ஹெரான்கள் மற்றும் பூர்வீக நிலப்பறவைகளான பெயிண்ட் நாரைகள், குட்டி கார்மோரண்ட்கள், பின்டைல் லிட்டில், லிட்டில் எக்ரெட்ஸ், ஈக்ரெட்ஸ், கவ் எக்ரெட்ஸ், காமன் டீல்ஸ், ஸ்பாட் பில் வாத்துகள் போன்ற பல பறவைகள் புலம் பெயர்ந்து‌ செல்கிறது.

இந்தப் பறவைகளின் நலன் கருதி இந்த கிராம மக்கள் பல ஆண்டுகளாக பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவதில்லை. இந்தப் பறவைகள் சரணாலயம் சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 41.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கானாடுகாத்தான் அரண்மனை:

செட்டிநாடு அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை 1990 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இந்த அரண்மனை செட்டிநாட்டின் பாரம்பரிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அலங்கார விளக்குகள், தேக்கு மர பொருட்கள், பளிங்கிக் கல், கண்ணாடிகள், போன்றவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும். 1912 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை சிவகங்கை இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவிலும் காரைக்குடியில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

Also Read: செங்கல்பட்டு சுற்றுவட்டார மினி டூர்.. இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

சங்கரபதிக்கோட்டை:

மருது பாண்டியரின் போர்பயிற்சி பாசறையாக திகழ்ந்த இந்த சங்கரபதிக் கோட்டை பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த கோட்டை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் இதனை சுற்றி நிறைய புள்ளி மான்கள் காணப்படுகின்றன. தமிழக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோட்டை தற்பொழுது மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

இது தவிர இந்த மாவட்டத்தில் கண்ணதாசன் நினைவிடம், ஆத்தங்குடி அரண்மனை, பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், மருது பாண்டியர்கள் நினைவிடம் போன்றவற்றை பார்க்கலாம்

Latest News