5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: வியக்க வைக்கும் விருதுநகர் மாவட்ட சுற்றுலாதலங்கள்…

Tourist Spots in Virudhunagar: ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 1985 ஆம் ஆண்டு பிரிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த நகரம் பாண்டியர்கள், விஜயநகர பேரரசு, ஆற்காடு நவாப், பிரித்தானியா கிழக்கு இந்திய கம்பெனி, ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது. இது வியாபார நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க விருதுநகர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Travel Tips: வியக்க வைக்கும் விருதுநகர் மாவட்ட சுற்றுலாதலங்கள்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் (Photo Credit: Pinterest)
mohamed-muzammil
Mohamed Muzammil | Updated On: 11 Nov 2024 13:14 PM

மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவிலார் மற்றும் பெரியார் அணை‌ என இரண்டு பிரிவுகளாக இருக்கிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை இந்த அணையில் தண்ணீர் நிரம்பும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்களில் இதுவும். இந்த அணை 3 திசைகளில் மழையால் சூழப்பட்டுள்ளது.‌ இங்கு சகல வசதிகளுடன் கூடிய சிறுவர் பூங்கா ஒன்று உள்ளது. இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

குல்லூர் சந்தை நீர்த்தேக்கம்:

இந்த நீர்த்தேக்கம் அர்ஜுனா ஆற்றின் கிளை நதியான கௌசிகா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மலை ஏற்றம், படகு சவாரி போன்றவற்றை அனுபவிக்கலாம். புலம்பெயர் பறவைகளை பார்க்க இங்கு ஏராளமான மக்கள் வருகை தருகிறார்கள்.‌ ஆகஸ்ட் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்த இடத்திற்கு செல்லலாம். இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயம்:

இந்த சரணாலயம் 480 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இது சாம்பல் நிற அணில் வனவிலங்கு சரணாலயம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சாம்பல் நிற அணில் தவிர யானை, வேங்கை புலி, சிறுத்தை, வரையாடு, நீலகிரி கருமந்தி, தேவாங்கு, முள்ளம்பன்றி போன்ற உயிரினங்கள் வாழ்ந்து வருகிறது. இங்கு பொலிகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் இதை புலிகள் சரணாலயமாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

Also Read: Travel Tips: சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்கள்…

செண்பக தோப்பு:

செண்பகத் தோப்பு மலையேற்றத்திற்கு சிறந்த வனப் பகுதியாகும். இங்கு செல்வதற்கு சரியான பேருந்து வசதி இல்லை. இருசக்கர வாகனம் அல்லது சைக்கிள் மூலம் இந்த இடத்திற்கு செல்லலாம். இங்கு பல்வேறு வகையான மிருகங்கள் பறவைகளை கண்டு கழிக்கலாம். இங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் குளித்து மகிழலாம். இங்குள்ள நதியும் அருவியும் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 45 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

காமராஜர் நினைவு இல்லம்:

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று பார்வையிடலாம். அங்கு அவர் பயன்படுத்தி பொருட்கள், எழுதிய கடிதங்கள் ஆகியவை பாதுகாக்கப்பட்டு வருகிறது. இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சதுரகிரி மலைப்பயணம்:

சதுரகிரி மலைப்பயணம் ஒரு சிறந்த மலையற்ற அனுபவத்தை கொடுக்கிறது. கரடு முரடான நிலப்பரப்பு, அழகிய காட்சி, மலை முழுவதும் பசுமை என கம்பீரமான மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மலையற்றம் செய்வதற்கு ஒரு சிறந்த இடம். இங்கு 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுந்தர மகாலிங்கம் மற்றும் சந்தான மகாலிங்கம் கோயில்கள் இங்கு உள்ளது. இங்கு உள்ள வன சோதனை சாவடியில் ரூ.10 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ராக்காச்சி அம்மன் அருவி:

இந்த அருவி ராஜபாளையத்தில் அமைந்துள்ளது. இங்கு ராக்கச்சி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனசரக கட்டுப்பாட்டில் கீழ் உள்ளது. இந்த அருவிக்கு மே மாத இறுதியில் சென்றால் ஆனந்த குளியல் போட்டு மகிழலாம். இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

சஞ்சீவி மலைக் குன்று:

ராஜபாளையத்தில் அமைந்துள்ள இந்த மனதை கவனம் குன்று இராமாயணத்தில் பலமுறை குறிப்பிடப்பட்டுள்ளது. பல மருத்துவ மூலிகையில் அடங்கிய புனித மலையாக இரது கருதப்படுகிறது. ஆன்மீகம் தவிர்க்கு இந்த மலைகள் அடர்ந்த காடுகள், பசுமையான தாவரங்கள் மற்றும் அமைதியான சூழலால் மக்களை கவர்ந்து வருகிறது. இது விருதுநகர் பேருந்து நிலையத்திலிருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: அரியலூரில் அசர வைக்கும் சுற்றுலா தளங்கள்… இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

அய்யனார் அருவி:

இது காட்டுப் பகுதிக்குள் அமைந்திருப்பதால் இங்கு செல்வதற்கு முறையான அனுமதி வாங்க வேண்டும். இங்கு சாஸ்தா கோயில் அருவி அணை என அனைத்தையும் ஒரு சேர கண்டுகளிக்கலாம். இது மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் ஒரு அருமையான சுற்றுலா தளம். இது ராஜபாளையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Latest News