கரூர் மாவட்ட டூர்.. சுற்றுவட்டார பகுதிகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாதலங்கள்!
Tourist Spots in Karur: ஏறத்தாழ 2000 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த கரூர், தமிழ்நாட்டின் மிக பழமையான நகரங்களில் ஒன்று. சங்ககாலத்தில் சேரர்களின் தலைநகரமாக விளங்கியது. முன்னர் கரூர் ஒரு போர்க்களமாகும் விளங்கி இருக்கிறது. மரக்கூல் பயன்படுத்தாமல் காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவில் முதலில் இங்குதான் அமைக்கப்பட்டது. இத்தகைய சிறப்பு மிக்க கரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் அதிக அளவில் பேருந்து உற்பத்தி கரூர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. மேலும் இங்கு நிறைய கனிம வளங்கள் நிறைந்திருக்கிறது. கொங்கு நாட்டின் ஒரு பகுதியாக இருந்த கரூர் முன்னர் கோயம்புத்தூர் மாவட்டத்துடனும் பின்னர் திருச்சி மாவட்டத்துடனும் செயல்பட்டு வந்தது. பின்னர் 1996 ஆண்டு முதல் தனி மாவட்டமாக இயங்கி வருகிறது.
மாயனூர் கதவனை:
கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மாயனூர் கதவணை ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இது காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் நேரத்தை செலவிட இது ஒரு நல்ல இடமாக திகழ்கிறது. இங்கு அணையில் இருந்து பிடிக்கப்படும் மீன் உணவுகளை சுவைத்து மகிழலாம். இந்த தடுப்பணை 2013 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இது கரூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
திருமுக்கூடலூர்:
காவேரி, அமராவதி, மணிமுத்தாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடமே இந்த திருமுக்கூடலூர். இங்கு சோழ காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இது கரூரிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பொன்னணியாறு அணை:
1975 ஆம் ஆண்டு கட்டப்பட்ட அணை 313 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. செம்மலையின் அடிவாரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த அணை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்கிறது. இதன் உயரம் 51 அடிகளாகும். அணையின் அருகில் ஒரு பூங்காவும் அமைக்கப்பட்டிருக்கிறது. இது கரூரில் இருந்து 61 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
Also Read: Travel Tips: வியக்க வைக்கும் விருதுநகர் மாவட்ட சுற்றுலாதலங்கள்…
அய்யர் மலை:
குளித்தலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த அய்யர் மலை. இந்த திருக்கோவிலில் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் வீற்றிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் பிரமோற்சவம் திருவிழா 15 நாட்கள் நடைபெறுகிறது. அதுமட்டுமில்லாமல் சித்திரை திருவிழா, தைப்பூச திருவிழா, கார்த்திகை திருவிழா, பங்குனி உத்திரம் திருவிழா, தெப்ப திருவிழா ஆகியவை இங்கு பிரம்மாண்டமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஐயர் மலையின் உச்சிக்கு செல்வதற்கு மொத்தம் 1017 படிகள் ஏற வேண்டும்.
கரூர் அரசு அருங்காட்சியகம்:
இந்த அருங்காட்சியத்தில் வெண்கல சிலைகள், உலோகப் பொருட்கள், இசைக் கருவிகள், நாணயங்கள், பாறைகள், படிமங்கள், தாவரவியல் மாதிரிகள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு சங்க கால சேர சோழ பாண்டியர்கள் பயன்படுத்திய காசுகள் மற்றும் பல்வேறு அரசர்கள் பயன்படுத்திய காசுகள் உட்பட பல வரலாற்று சிறப்புமிக்க பொருட்களை இங்கு நாம் பார்க்கலாம். இது கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 700 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
ரங்கமலை:
3500 அடி உயரம் கொண்ட இந்த மலை மலையற்றம் செய்வதற்கு ஒரு சிறந்த இடமாக ஏறுகிறது. செங்குத்தாக இருக்கும் இந்த மலைக்கு முறையான படிக்கட்டுகள் எதுவும் அமைக்கப்படுவதில்லை. எனவே இது மலையேற்றம் செய்யும் பிரியர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும். இந்த மலையில் நிறைய மூலிகை நிறைந்திருப்பதால் இந்த மழையில் தங்கி இருந்தால் நோய்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த மலையில் மல்லீஸ்வரர் சிவன் கோயில் அமைந்துள்ளது. இது கரூரிலிருந்து 44 கிலோ மீட்டர் தொலைவில் திண்டுக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்:
சோழ காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் சிவபெருமானுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலமாகவும் கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோயில் விளங்குகிறது. இந்த கோயில் அமராவதி ஆற்றங்கரையில் கரூர் நகர மையப் பகுதியில் அமைந்துள்ளது.
Also Read: Travel Tips: சிலிர்க்க வைக்கும் சிவகங்கை மாவட்ட சுற்றுலா தளங்கள்…
அமராவதி வாக் & ஜாக் பாலம்:
அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் சேதமடைந்ததால் போக்குவரத்திற்காக புதிதாக பாலம் கட்டப்பட்டது. பழைய பாலத்தை இடித்து விட்டு புதிதாக மீண்டும் அமராவதி ஆற்றின் மீது பாலம் கட்டப்பட்டு அது பொழுது போக்கிடமாக மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு மக்கள் நடை பயிற்சி மேற் கொள்வதற்காக பல வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் பாலத்தின் தொடக்கத்தில் சிறிய பூங்கா ஒன்று அமைந்திருக்கிறது. குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது. சிறந்த முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்த பொழுதுபோக்கு பாலம் மக்களை வெகுவாக கவர்க்கிறது.