திருப்பூர் மாவட்ட டூர்.. இவ்வளவு சுற்றுலாதலங்கள் இருக்கா?

Tourist Spots in Tiruppur: கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் இருந்து பிரிக்கப்பட்ட திருப்பூர் மாவட்டம் இந்தியாவின் பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் ஆறாவது பெரிய நகரமான திருப்பூர் தமிழகத்தில் டாலர் சிட்டி என்று அழைக்கப்படுகிறது. கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருப்பூரில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

திருப்பூர் மாவட்ட டூர்.. இவ்வளவு சுற்றுலாதலங்கள் இருக்கா?

திருமூர்த்தி அருவி (Photo Credit: Tamilnadu Tourism)

Published: 

04 Dec 2024 19:36 PM

திருப்பூர் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தொழில் நகரமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள பெரு நகரங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது. இந்தியாவின் பின்னலாடை நகரம் என்று அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் பத்தாயிரம் கோடிக்கும் மேலாக அந்நிய செலவாணியை ஈட்டுத்தரும் மாவட்டமாக திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க திருப்பூரில் பார்க்க வேண்டிய முக்கியமான சுற்றுலா தலங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

அமராவதி அணை:

1957 ஏழாம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அமராவதி அணை உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள இந்திரா காந்தி வனவிலங்கு தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. உபரி நீரை சேமிப்பதற்காக கட்டப்பட்ட இந்த அணையில் தற்போது மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த அணையில் ஆண்டுக்கு 110 டன் மீன்கள் பிடிக்கப்படுகிறது.

இங்கு மக்கர் வகை முதலைகள் இயற்கை முறையில் வளர்க்கப்படுகிறது. இந்த அணைக்கு அருகே 1976 ஆம் ஆண்டு அமராவதி சாகர் முதலைப்பண்ணை தொடங்கப்பட்டது. மேலும் இந்த அணைக்கு அருகில் அழகான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவும் முதலைப் பண்ணையும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். இது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

திருமூர்த்தி அருவி:

இது மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி மலையில் அமைந்துள்ளது. இந்த அருவி மூலிகை குணம் நிறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பஞ்சலிங்கம் அருவி என்றும் அழைக்கப்படுகிறது. இதன் அருகிலேயே திருமூர்த்தி சிவன் கோயிலும் திருமூர்த்தி அணையும் அமைந்துள்ளது. மலையேற்றம் செய்ய விரும்புவர்கள் திருமூர்த்தி மலைக்கு சென்று வரலாம். இந்த மலையில் ஏராளமான தமிழ் மலையாளம் கன்னட தெலுங்கு திரைப்படங்கள் காட்சியாகப்பட்டுள்ளது. இது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: வியக்க வைக்கும் விருதுநகர் மாவட்ட சுற்றுலாதலங்கள்…

திருமூர்த்தி அணை:

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் 1967ஆம் ஆண்டு பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இந்த அணையின் நீர்த்தேக்கத்தில் படகு சவாரியும் செய்யலாம். இது உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

உப்பாறு அணை:

உப்பாறு ஓடையில் குறுக்கே இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டுள்ளது. இங்கு கல்லணை மற்றும் களிமண் ஆகியவை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த்தேக்கத்தின் கசிவு நீரை தேக்கி வைப்பதற்காக இந்த அணை பயன்படுகிறது. உப்பாறு அணையை சுற்றியுள்ள பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் வலசை வருகிறது. குறிப்பிட்ட பருவ காலங்களில் பல வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து செல்கிறது.

திருப்பூர் குமரன் நினைவுத்தூண்:

சுதந்திரப் போராட்டத்தில் கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரனின் நினைவாக நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பூங்கா

இந்த பூங்கா திருப்பூர் நகரில் அமைந்துள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நேரம் செலவழிக்க ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. நீர் விளையாட்டுகள், ராட்டினங்கள் என பல பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.

ஆண்டிப்பாளையம் ஏரிப் பூங்கா:

58 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அழகிய பூங்கா குடும்பங்களோடு வந்து நேரம் செலவழிக்க இது ஒரு சிறந்த இடமாக திகழ்கிறது. இங்கு படகு இல்லம், உணவகம், சிற்றுண்டி நிலையம், சிறுவர் பூங்கா என பல்வேறு அம்சங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது.

திருமூர்த்தி சிவன் கோயில்:

திருமூர்த்தி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளதே அமணலிங்கேஸ்வரர் கோவில். இந்த கோவிலில் பிரம்மன், விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று கடவுள்களும் ஒன்றாக அமைந்துள்ளதால் தமிழக அளவில் பிரசித்தி பெற்ற கோயிலாக விளங்குகிறது. குழந்தை இல்லாதவர்கள் இந்த தளத்தில் நீராடி சப்த கன்னிகளை வழிபட குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

பாறையை குடைந்து கருவறை அமைக்கப்பட்டு இருக்கிறது .வட திசையை நோக்கிய லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள பாறை தான் அமண லிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பாறையில் மூர்த்திகளின் வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

Also Read: கரூர் மாவட்ட டூர்.. சுற்றுவட்டார பகுதிகளில் பார்க்க வேண்டிய சுற்றுலாதலங்கள்!

சிவன்மலை முருகன் கோவில் :

இந்த கோவில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகில் உள்ள சிவன்மலையில் அமைந்துள்ளது. அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்ற பெருமை கொண்ட முருகன் கோவிலாக இந்த தலம் விளங்குகிறது. காங்கேயத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இந்த சிவன்மலை முருகன் கோவில் அமைந்துள்ளது.

சிவன்மலை மீதுள்ள கோவிலை நடை பயணமாக‌அடைய 496 படிகள் கொண்ட மலைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் மூலம் கோயிலுக்கு செல்லவும் தனிப்பாதையும் உள்ளது. கோவில் நிர்வாகத்தினரால் மலை மீதுள்ள கோவிலுக்கு பேருந்து வந்து செய்யப்பட்டுள்ளது. தனியார் வாகனங்களிலும் இந்த கோவிலுக்கு நாம செல்லலாம்.

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?