Travel Tips: தஞ்சாவூர் சுற்றுலாத் தலங்கள்… இவ்வளவு இடங்கள் இருக்கா? - Tamil News | important tourist spots in tanjore check places distance and fares in tamil | TV9 Tamil

Travel Tips: தஞ்சாவூர் சுற்றுலாத் தலங்கள்… இவ்வளவு இடங்கள் இருக்கா?

Updated On: 

26 Sep 2024 22:25 PM

Tanjore Trip: தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர், தமிழகத்தின் கிழக்கு திசையான டெல்டா பகுதியில் அமைந்துள்ளது. சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கிய தஞ்சாவூர், பின் நாயக்கர் மற்றும் மராத்திய அரசுகளின் தலைநகரமாக விளங்கியது. காவேரி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் தஞ்சாவூரில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Travel Tips: தஞ்சாவூர் சுற்றுலாத் தலங்கள்... இவ்வளவு இடங்கள் இருக்கா?

தஞ்சை பெரிய கோயில் (Photo Credit: Mohamed Muzammil)

Follow Us On

தஞ்சாவூரின் மகுடமாக திகழ்கிறது இந்த பெரிய கோயில். தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றான இந்த கோயில் பொது ஆண்டு பத்தாம் நூற்றாண்டில் புகழ்பெற்ற சோழ பேரரசர் முதலாம் ராஜராஜ சோழன் இந்த கோயிலை கட்டினார். 1987 ஆம் ஆண்டு UNESCO இதை உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இந்த கோயில் 216 அடி உயரம் கொண்டது. இந்த பிரம்மாண்ட கோயில் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இந்த கோயில் தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து 5 கிமீ தொலைவிலும் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

தஞ்சாவூர் அரண்மனை:

பல அரிய சுவடுகளை சுமந்து நிற்கும் இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின் இந்த அரண்மனை மராட்டிய கால அரசுக்கு உட்பட்ட இருந்தது. இந்த அரண்மனைக்குள் மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என நான்கு பகுதியில் உள்ளது. இதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இது தஞ்சாவூர் பேருந்து நிலையத்திலிருந்து 6.5 கி.மீ தொலைவிலும் ரயில்வே நிலையத்திலிருந்து 2 கிமீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

ராஜராஜ சோழன் நினைவு மண்டபம்:

1995 ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் சங்க மாநாட்டின் போது இந்த மணிமண்டபம் கட்டப்பட்டது. இந்த மணி மண்டப உச்சிவரை செல்லலாம். இதற்கு அருகிலேயே குழந்தைகள் பூங்காவும் இருக்கிறது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது. இது கோயிலில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது.

மனோரா கோட்டை:

1814 ஆம் ஆண்டு நெப்போலியுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் போரில் வெற்றி பெற்றதை பாராட்டும் வகையில், அப்பொழுது தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி மனோரா என்ற நினைவு சின்னத்தை கட்டினார். இது 75 அடி உயரம் கொண்டது. இதன் அருகில் குழந்தைகள் பூங்காவும் உள்ளது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.

Also Read: Travel Tips: மலைகளின் இளவரசி.. கொடைக்கானலில் ஒரே நாளில் என்னவெல்லாம் பார்க்கலாம்?

சிவகங்கை பூங்கா:

இந்தப் பூங்காவானது தஞ்சை பெரிய கோவிலின் அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பொழுதுபோக்கு பூங்காவாகும். 1871 ஆண்டு பொதுமக்களுக்காக இந்த பூங்கா உருவாக்கப்பட்டது. பொம்மை ரயில், மோட்டார் படகு வசதி மற்றும் சிறு தோட்டம் அமைந்துள்ளது. இங்கு ஒரு நூலகமும் அமைந்துள்ளது.

தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம்:

இந்த நூலகம் ஆசியாவின் மிகப் பழமையான நூலகமாகும். இங்கு தமிழ், தெலுங்கு, சமஸ்கிருதம், ஆங்கிலம், இலத்தின் கிரேக்கம் ஆகிய மொழிகளில் உள்ள ஓலைச்சுவடிகளும் கையெழுத்துப் பிரதிகளும் அச்சு பிரதிகளும் உள்ளன.

தமிழ்ப் பல்கலைக்கழகம்:

உலகில் தமிழுக்கு என்று உருவாக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.‌ 972 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பல்கலைக்கழகம் தமிழ் மொழி, தமிழர் பண்பாடு போன்றவற்றின் முதன்மையான உயர் ஆய்வை நோக்கமாகக் கொண்டது.‌ தமிழ் பல்கலைக்கழகத்தில் எழுப்பப்பட்டுள்ள கட்டடங்கள் உருவ அமைப்பில் “தமிழ்நாடு” என்ற சொல்லின் எழுத்துக்களை போன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.

சுவார்ட்ஸ் தேவாலயம்:

1779 ஆம் ஆண்டு சுவார்ட்ஸ் என்பவரால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. பிறகு 1807 ஆம் ஆண்டு மன்னர் சரபோஜியின் வேண்டுகோளுக்கு இணங்க லண்டனை சார்ந்த ஜான் பிளாக்ஸ்மேன் என்ற சிற்பியின் மூலமாக இந்த தேவாலயத்திற்கு சிலைகள் செதுக்கப்பட்டு வைக்கப்பட்டது. இப்பொழுது இந்த தேவாலயம் தஞ்சை பெரிய தேவாலயம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

தென் பெரம்பூர் அணை:

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே அமைந்துள்ளது இந்த அணைக்கட்டு. நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்த அணையில் இருந்து வெண்ணாறு, வெட்டறு, வடவாறு என மூன்று ஆறுகளாக பிரிந்து செல்கிறது. இந்த அணையின் அருகிலேயே இருபுறமும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. ஜம்பு காவிரி பாசன வாய்க்காலில் எந்தவித ஆபத்தும் இல்லாமல் குளிக்கும் மகிழலாம்.

Also Read: Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

ஃபிரிட்ஜில் வைத்து மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கூடாத உணவுகள்
ப்ரை சிக்கன் கர்ப்பிணிகள் சாப்பிடலாமா?
இந்த பிரச்சனை இருப்பவர்கள் இளநீர் குடிக்கவே கூடாதாம்..!
இந்தியாவின் பசுமையான சுற்றுலா இடங்கள் என்னென்ன தெரியுமா?
Exit mobile version