Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

Trichy Trip: தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டம். காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த திருச்சிராப்பள்ளி முன்னோர் காலத்தில் முற்காலச் சோழர்களின் தலையிடமாக இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியை மாநிலத்தின் தலைநகரமாக்குவதற்கு பல முயற்சியில் நடைபெற்று வந்தது.

Travel Tips: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்...

திருச்சி மலைக்கோட்டை (Photo Credit: Tamilnadu Tourism)

Published: 

25 Sep 2024 21:36 PM

தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி மாவட்டம். காவேரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த திருச்சிராப்பள்ளி முன்னோர் காலத்தில் முற்காலச் சோழர்களின் தலையிடமாக இருந்திருக்கிறது. திருச்சிராப்பள்ளியை மாநிலத்தின் தலைநகரமாக்குவதற்கு பல முயற்சியில் நடைபெற்று வந்தது. அத்தகையை திருச்சியில் என்னென்ன சுற்றுலா தளங்களை கண்டு களிக்கலாம் என்பதை பார்க்கலாம்.

கல்லணை:

கரிகால சோழனால் ஒன்றாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட உலகின் பழமை வாய்ந்த அணை. முழுவதும் கற்களும் களி மண்ணும் கொண்டு கட்டப்பட்ட இந்த கல்லணை 2000 ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கிறது. இந்த கல்லணை திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 23 கிமீ தொலைவிலும் திருச்சிராப்பள்ளி ஜங்ஷனிலிருந்து 22 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

மலைக்கோட்டை:

சுமார் 3400 மில்லியன் பழமை வாய்ந்த பாறையின் மீது அமைந்துள்ள இந்த மலைக்கோட்டை திருச்சியின் அடையாளச் சின்னமாக திகழ்கிறது. இந்த மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகர் கோயிலும் இடையில் தாயுமானவர் கோயிலும் மேல் பகுதியில் உச்சிப் பிள்ளையார் கோயிலும் அமைந்திருக்கிறது. இங்கு பல்லவ கால குடைவரைக் கோயிலும் பாண்டிய கால குடைவரைக் கோயிலும் இருக்கிறது. இது அமைந்துள்ள மலை பாறை 273 அடி உயரம்கொண்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ‌ தொலைவிலும் ரயில்வே ஜங்ஷனிலிருந்து 5 கி.மீ‌ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

திருரங்கநாத சுவாமி கோயில்:

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான மிகப் பெரிய கோயில் ஆகும். காவேரி ஆறு இரண்டாக பிரிந்து காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருவரங்க தீவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் ராஜ கோபுரம் 236 அடி உயரத்தில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய கோபுரமாக விளங்குகிறது. சுமார் 136 ஏக்கரில் அமைந்திருக்கும் இந்த கோயில் தமிழகத்தில் இருக்க கூடிய மிகப்பெரிய கோயிலாக விளக்குகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் ரயில்வே ஜங்ஷனிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்திருக்கிறது.

Also Read: Travel Tips: அசர வைக்கும் தமிழகத்தின் 6 மலை பிரதேசங்கள்…

வண்ணத்துப்பூச்சி பூங்கா:

திருவரத்தில் மேலூர் அருகே அமைந்துள்ள இந்த வண்ணத்துப்பூச்சி பூங்கா தமிழ்நாடு அரசு வனத்துறையின் கண்காணிப்பு மற்றும் பராமரிப்பில் உள்ள பூங்காவாகும். இது ஆசியாவின் மிகப்பெரிய வண்ணத்துப்பூச்சி பூங்காவாகும். இங்கு குழந்தைகள் பூங்கா, படகு சவாரி, வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்க மையம் ஆகியவை உள்ளது. சிறுவர்களுக்கு ரூ.5 மற்றும் பெரியவர்களுக்கு ரூ.10 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 16 கி.மீ தொலைவிலும் ரயில்வே ஜங்ஷனிலிருந்து 15 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

முக்கொம்பு:

இது காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை. ஒரே ஆறாக வரும் காவேரி இங்கு மூன்று ஆறுகளாக பிரிந்து செல்லும் இடமாக இருப்பதால் முக்கொம்பு ஒரு அழகான சுற்றுலா தளமாக விளங்குகிறது. மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 19 கி.மீ தொலைவிலும் ரயில்வே ஜங்ஷனிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.‌

பச்சைமலை:

கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது இந்த பச்சை மலை. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு மங்களம் அருவி, மயிலூற்று அருவி என எண்ணற்ற அருவிகள் இருக்கிறது. மேலும் இயற்கை காட்சி முனைகளும் இருக்கிறது. பசுமை நிறைந்த வனப்பகுதியை கண்டு மகிழ்வதற்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 97 கி.மீ‌ தொலைவு பயணிக்க வேண்டும்.

ரயில் அருங்காட்சியம்:

இங்கு ரயில் தொடர்பான பழைய கலைப் பொருள்கள் மற்றும் புகைப்படங்கள் வருங்கால தலைமுறை தெரிந்து கொள்வதற்காக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு உட்புற காட்சி கூடத்தில் சுமார் 400 கலைப் பொருட்களும் 200 புகைப்படங்களும் இடம்பெற்றிருக்கிறது. இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புளியஞ்சோலை:

திருச்சி மாவட்டம் துறையூர் வனப்பகுதியில் அமைந்துள்ளது புளியஞ்சோலை சுற்றுலா தளம். இயற்கை எழில் கொஞ்சும் அழகிய மலை முகடுகள், அடர்ந்த மரங்கள், காடுகள், சிற்றோடைகள் என காண்போர் மனதை மயக்கும் இடங்கள் ஏராளமாக புளியஞ்சோலையில் உள்ளது. அங்கு ஓடிவரும் சிற்றோடைகளில் உல்லாச குளியல் போடலாம். இது திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 76 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Travel Tips: மலைகளின் இளவரசி.. கொடைக்கானலில் ஒரே நாளில் என்னவெல்லாம் பார்க்கலாம்?

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?