Travel Tips: பெரம்பலூரில் பார்க்க வேண்டிய அட்டகாசமான சுற்றுலா தளங்கள் இதோ! - Tamil News | important tourist spots to visit in perambalur details in tamil | TV9 Tamil

Travel Tips: பெரம்பலூரில் பார்க்க வேண்டிய அட்டகாசமான சுற்றுலா தளங்கள் இதோ!

Perambalur Tourist Spot: தமிழ்நாட்டின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் பெரம்பலூர் மாவட்டம் 1995ஆம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டது. தமிழகத்தில் மக்காச்சோளம் அதிகமாக பயிரிடப்படும் இந்த மாவட்டம்‌ விவசாயத்தை பிரதானமாகக் கொண்டு இயங்குகிறது. இந்த மாவட்டத்தில் இருக்கக்கூடிய முக்கிய சுற்றுலா தளங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Travel Tips: பெரம்பலூரில் பார்க்க வேண்டிய அட்டகாசமான சுற்றுலா தளங்கள் இதோ!

ரஞ்சன்குடி கோட்டை (Photo Credit: Pinterest)

Published: 

12 Oct 2024 22:02 PM

கனிம வளம் செழிப்பாக இருக்கும் இந்தப் பெரம்பலூர் மாவட்டம் 1995ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்டது. பல ஏரிகள், அருவிகள் மற்றும் அணைகளைக் கொண்ட இந்த மாவட்டத்தின் பிரதான தொழில் உளவு ஆகும். திப்பு சுல்தானின் ஆட்சிக்குக் கீழ் இருந்த பெரம்பலூர் திப்பு சுல்தானின் இறப்பிற்கு பின் ஆங்கிலர்கள் வசம் சென்றது. இத்தகைய சிறப்புமிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய சுற்றுலாத் தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

ரஞ்சன்குடிக் கோட்டை:

பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த சிறிய கோட்டை கிபி 14 ஆம் நூற்றாண்டில் விஜய் பேரரசின் நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. இது பின்னர் ஆற்காடு நவாப் ஜகின்தார் என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. ஆங்கிலேயருக்கும் பிரெஞ்ச் படையினருக்கும் இடையே நடைபெற்ற வாலிகுண்டா போர் நடைபெற்ற புகழ்மிக்க இடம். இந்த கோட்டையில் மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக்கம்பம் ஆகியவை உள்ளன.‌ இது பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

விசுவக்குடி அணை:

கல்லாறு ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணிக்கு பச்சைமலை செம்மலை ஆகிய மலைகளில் பெய்யும் மழை நீர் கல்லாற்று நீரோடை வழியாக இந்த அணைக்கு வருகிறது. இந்த அணை 665 மீட்டர் நீளமும் 10.3 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. இது பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கோரையாறு அருவி:

அக்டோபர் முதல் டிசம்பர் வரை இந்த அருவியின் சீசன் நாட்களாகும். பச்சைமலை இது அமைந்திருக்கும் இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல‌ ஒரு ஆற்றைக் கடந்து 3 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.‌ இந்த அருவி பாறைகள் சூழ்ந்த 60 அடி ஆழம் கொண்ட நீர்த்தேக்கத்திற்குள் கொட்டுகிறது. இது பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: Wagamon: 125 நாட்களுக்குப் பின்பு மீண்டும் பயன்பாட்டிற்கு வந்த வாகமன் கண்ணாடி பாலம்!

தேசிய கல்மர பூங்கா:

சாத்தனூர் கிராமத்தில் அமைந்துள்ள இந்த புகழ்பெற்ற தேசிய கல்மர பூங்கா 1940 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்கால மரம் சுமார் 120 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என நம்பப்படுகிறது.‌ இந்த புதை படிமம் 18 மீட்டர் நீளம் உள்ளது. பார்வையாளர்கள் சாத்தனூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இந்த பூங்காவிற்கு மிதிவண்டிகளில் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மீது பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மயிலூற்று மற்றும் மங்களம் அருவி:

இந்த இரண்டு அருவிகளும் பச்சை மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிகளுக்கு செல்ல சற்றே கரடு முரடான பாதையை கடந்து செல்ல வேண்டும். செப்டம்பர் முதல் நவம்பர் மாதங்கள் வரை இந்த அருவி செழிப்புற்று இருக்கும். மயிலூற்று அருவி‌ பெரம்பூர்பெரம்பலூர்நிலையத்திலிருந்து 21.5 கிலோ மீட்டர் தொலைவிலும் மங்களம் அருவி‌ பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில்:

சிலப்பதிகார காவிய நாயகியான கற்புடைய தெய்வம் கண்ணகி தன் கணவருக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டு கோபத்தினால் மதுரையை எரித்துவிட்டு மன அமைதி இன்றி அலைந்து திரிந்து கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கோயிலுக்கு வந்து அமைதி கொண்டால் என்று கூறப்படுகிறது. வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டுமே இந்த கோவில் திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இந்தக் கோயில் பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

பெரியார் பூங்கா:

நகரத்தின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் இந்த பூங்கா ஒரு சிறந்த பொழுதுபோக்கிடமாக தெரிகிறது. மரங்கள் நிறைந்த பசுமையான பூங்காவில் குழந்தைகள் ஓடி விளையாட சிறந்த இடமாக இருக்கிறது. இது பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

Also Read: World Longest Train: தனிப்பாதை, எட்டு இன்ஜின்கள், 682 பெட்டிகள்… பிரமிக்க வைக்கும் உலகின் மிகப்பெரிய ரயில்!…

ஆனைகட்டி அருவி:

செக்காத்திப்பாறை அருவி என்று அழைக்கப்படும் இந்த அருவி கிழக்கு தொடர்ச்சி மலையான பச்சை மாலையில் சற்று அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. அக்டோபர் – நவம்பர் மாதங்களில் செழிப்புற்று இருக்கும் இந்த அருவி பெரம்பலூர் பேருந்து நிலையத்திலிருந்து 18.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

கிவி பழம் தினசரி சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
வெறும் வயிற்றில் பால் குடிக்கலாமா? அப்படி குடித்தால் என்ன ஆகும்?
டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
Exit mobile version