5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Ginger Benefits: ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இஞ்சி.. பாலியல் சக்தியை அதிகரிக்கும்!

Health Tips: மழைக்காலத்தில் இஞ்சியை உட்கொள்வதன்மூலம் தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி பல வகைகளில் இஞ்சி பல நன்மைகளை தந்தாலும், ஆண்களில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இஞ்சி சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு பிரச்சனையையும் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

Ginger Benefits: ஆண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் இஞ்சி.. பாலியல் சக்தியை அதிகரிக்கும்!
இஞ்சி (Image: Getty)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 20 Oct 2024 16:26 PM

இஞ்சி உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். மக்கள் மழை மற்றும் குளிர் காலத்தில் இஞ்சி சாப்பிடுவதன் மூலம் பல நன்மைகளை பெறுவார்கள். இஞ்சியில் பொட்டாசியம், நார்ச்சத்து, சோடியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி ஆகியவை உள்ளன. மழைக்காலத்தில் இஞ்சியை உட்கொள்வதன்மூலம் தொண்டை வலி, சளி, இருமல் போன்ற பல நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி பல வகைகளில் இஞ்சி பல நன்மைகளை தந்தாலும், ஆண்களில் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் என்று கூறப்படுகிறது. இஞ்சி ஆண்களின் பாலியல் சக்தியை அதிகரிக்கும். மேலும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கிறது.

ALSO READ: Heart Attack: மாரடைப்பு வரும் முன் தோன்றும் அறிகுறிகள்.. இதை புறக்கணிக்காதீர்கள்!

ஆண்களுக்கு பல நன்மைகளை தரும் இஞ்சி:

பாலியல் சக்தியை அதிகரிக்கும்:

ஆண்களின் பாலியல் சக்தியை அதிகரிக்க இஞ்சி பெரிதும் உதவுகிறது. இஞ்சியை தினமும் உட்கொள்வதன் மூலம், முன்கூட்டியே விந்துதள்ளுதல் போன்ற பாலியல் பிரச்சனைகளை குறைக்கும். மேலும், இது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். இஞ்சி சாப்பிடுவதன் மூலம் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு பிரச்சனையையும் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருவுறுதலை ஊக்குவிக்கும்:

இஞ்சி சாப்பிடுவதன்மூலம் ஆண்களின் கருவுறுதல் பிரச்சனையை சரி செய்யும். இஞ்சியானது ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரிக்கும். மேலும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும். இதன் காரணமாக, ஆண்களின் விந்தணுக்களின் தரமும் அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம்:

ஆண்களின் உடலில் இரத்த ஓட்டம் சீராக இயங்க, இஞ்சியை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்களுக்கு பாலியல் தொடர்பான பிரச்சனைகள் குறைவு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து இஞ்சி நிவாரணம் அளிக்கும்.

அஜீரண பிரச்சனையை சரிசெய்யும்:

வயிற்றில் ஏற்படும் அஜீரண பிரச்சனையை போக்க இஞ்சி பெரிதும் உதவி செய்யும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு இஞ்சி ஒரு சிறந்த மருந்தாகும். அதன்படி, இஞ்சியை அதிகமாக எடுத்துக்கொள்ளாமல், குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.

சர்க்கரை நோய்:

தினசரி சிறிதளவு இஞ்சியை உட்கொள்வதன்மூலம் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இதையடுத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடில்லாமல் இருப்பவர்கள் தங்கள் உணவு மற்றும் டீ உள்ளிட்டவற்றில் சேர்த்துக்கொள்ளலாம்.

குமட்டல் பிரச்சனையை குறைக்கும்:

குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகளை அவதிப்படுபவர்களுக்கு இஞ்சி உதவுகிறது. கீமோதெரபியால் ஏற்படும் குமட்டலைத் தடுக்கவும், கர்ப்ப காலத்தில் ஏற்படும் குமட்டலையும் குறைக்கவும் இஞ்சி உதவி செய்யும்.

ALSO READ: Vitamin E Benefits: உடலுக்கு வைட்டமின் ஈ ஏன் முக்கியமானது? இவ்வளவு நன்மைகளை தருமா?

மேலும் சில நன்மைகள்:

  • இஞ்சி வைட்டமின் சியின் நல்ல மூலமாகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, நோய்களை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கிறது.
  • இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இயற்கையான டையூரிடிக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.
  • இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுவலி, கீல்வாதம் மூட்டுவலி நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்.
  • இஞ்சி பல வகையான புற்றுநோய்களுக்கு மாற்று மருந்தாக ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • இஞ்சியை உட்கொள்வது மன அழுத்தத்தை குறைத்து, மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அல்சைமர் போன்ற மனநோய்களைத் தடுக்க உதவுகிறது.
  • இஞ்சியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது.
  • இஞ்சி எல்.டி.எல் அளவைக் குறைப்பதற்கும், எச்.டி.எல் அளவை அதிகரிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், இது இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்யும்.
  • இஞ்சியில் ஜின்சோல் என்ற கலவை உள்ளது. இந்த மூலப்பொருளானது கருப்பை, புரோஸ்டேட் மற்றும் கணைய புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை நிறுத்துகிறது.
  • புட் பாய்சன், லூஸ் மோஷன், சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளில் இருந்து இஞ்சியை உட்கொள்வதால் நிவாரணம் கிடைக்கும். இஞ்சியை தொடர்ந்து உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
  • இஞ்சியில் அதிகளவில் வைட்டமின் கே உள்ளது. இது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் இஞ்சி பயனுள்ளதாக இருக்கும்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News