Winter Season: குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லதா..? பக்கவிளைவுகளை தருமா..?

Hot Water: காலையில் எழுந்தவுடன் வேலைக்கும் போக வேண்டும் என்பதற்காக சுடு தண்ணீர் வைத்து குளிப்போம். ஏனென்றால், குழாய்களில் வரும் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருப்பதால், அதற்கு பயந்து சுடுதண்ணீர் தீர்வு என்று மாறுவோம்.

Winter Season: குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பது நல்லதா..? பக்கவிளைவுகளை தருமா..?

சுடுதண்ணீர் குளியல் (Image: freepik)

Published: 

04 Dec 2024 15:55 PM

கோடைக்காலம் முடிந்து மழை மற்றும் குளிர்காலம் வந்துவிட்டது. இதனால், பகல் நேரம் மிக குறைவாகவும், இரவு நீண்ட நேரமாகவும் நமக்கு தோன்றும். நாள்முழுவதும் வெப்பநிலை குறையும்போது, இரவு நேரம் அதிக குளிர்ச்சியாக இருக்கும். இதனால், காலையில் எழுந்தவுடன் வேலைக்கும் போக வேண்டும் என்பதற்காக சுடு தண்ணீர் வைத்து குளிப்போம். ஏனென்றால், குழாய்களில் வரும் தண்ணீர் அதிக குளிர்ச்சியுடன் இருப்பதால், அதற்கு பயந்து சுடுதண்ணீர் தீர்வு என்று மாறுவோம். அந்தவகையில், இன்று குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Kitchen Tips: வெங்காயத்தையும் உருளைக்கிழங்கையும் ஒன்றாக வைக்கக் கூடாது! ஏன் தெரியுமா?

சுடுதண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குடிப்பது உடலுக்கு, மனதிற்கு அமைதியை தரும். அதாவது, சுடுதண்ணீரில் குளிக்கும்போது, நமக்கு ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் குறைந்து அமைதி கிடைக்கும். மேலும், சுடு தண்ணீரில் குளித்தால் உடல் சோர்வி நீங்கும், மூளையில் ஏற்பட்டிருக்கும் மன அழுத்தம் குறைந்து தளர்வு ஏற்படும். இதன் காரணமாகவே, மன அழுத்தம் நிறைந்த வேலைகள் உள்ளவர்கள் குறைக்க சூடான நீரில் குளிக்கிறார்கள். இது உடலை ரிலாக்ஸ் அடைய செய்யலாம்.

சுடுதண்ணீரில் குளிப்பதன் மூலம் ரத்த ஓட்டம் சீராகி, உடலில் அனைத்து பாகங்களுக்கும் இரத்த சீராக செல்லும். மேலும், இது உடலின் செல்கள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உதவுகிறது.

உடல் வலிக்கு நிவாரணம்:

தசைகளில் வலி இருந்தாலோ அல்லது வீக்கம் இருந்தாலோ, சூடான நீரில் குளிப்பது சிறந்த தீர்வை தரும். இதனால், தசைகள் தளர்வடைந்து, ஓய்வு கிடைக்கும். சுடு தண்ணீரில் குளிப்பதன்மூலம், உங்கள் சருமம் குளிர்ச்சி பிரச்சனையால் அவதிப்பட்டால், உடலின் அழுத்தமான சருமத்தை மென்மையாக்க உதவும். சூடான தண்ணீரில் குளிக்கும்போது, சருமத்தின் துளைகளை திறந்து, அழுக்குகளை வெளியேற்றி சுத்தம் செய்யும்.

சுடுதண்ணீரில் குளிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

குளிர்காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதில் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது. சுடுதண்ணீரில் தினமும் குளிப்பது சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதாவது, மிகவும் சூடான தண்ணீரில் குளிக்கும்போது, சருமத்தின் மென்மையை குறைத்து, சருமத்தை உலர வைக்கும். இதனால், தோல் வெடிப்பு பிரச்சனை மற்றும் அரிப்பு பிரச்சனை ஏற்படும். மேலும், தோல்களில் காயத்தை ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. அந்தவகையில், உங்களுக்கு உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், சுடு தண்ணீர் பல பக்க விளைவுகளை உண்டாக்கும். எனவே, சருமத்தின் மென்மையை பராமரிக்க மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவது நல்லது.

சொரியாசிஸ் பிரச்சனை:

சுடுதண்ணீரில் குளிப்பது தோலின் மேல் அடுக்கை சேதப்படுத்தும் என்று கூறப்படுகிறது. உங்களுக்கு மிகவும் உணர்திறன் வாய்ந்த சருமம் இருந்தால், சூடான நீரால் தோல் சிவந்துவிடும். மேலும், இது அரிப்பு மற்றும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இது தொடர்ந்து, அதிகரித்தால் எக்ஸிமா, சொரியாசிஸ் போன்ற பிரச்சனைகளும் வரலாம்.

ALSO READ: Estrogen Hormone: ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை உண்டாக்கும் ஈஸ்ட்ரோஜன்.. இவ்வளவு பிரச்சனையை தருமா?

அதிக சூடான நீரில் குளிக்கும்போது கவனம்:

குளிர்காலத்தில் குளிக்கும்போது நாம் குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் கவனம் செலுத்துவது நல்லது. அதன்படி, நீரின் வெப்பநிலையானது அதிக சூடாகவும், மிகவும் குளிராகவோ இருக்கக்கூடாது. எனவே, நீங்கள் குளிக்கும் தண்ணீர் வெதுவெதுப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். உங்களுக்கு உடலுக்கு ஏற்ற வகையில் தண்ணீர் வெப்பநிலையை கொண்டு வாருங்கள். சுடுதண்ணீரில் குளிக்கும்போது தண்ணீர் அதிக சூடுடன் இருக்காமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனெனில், சுடுதண்ணீர் சருமத்தில் எரிச்சலை கொடுக்கும். அதேபோல், சுடுதண்ணீரில் குளித்தபிறகு, நல்ல மாய்ஸ்சரைசரை பயன்படுத்துங்கள். இது உங்கள் சருமத்தை மென்மையாக மாற்ற உதவும்.

சுடுதண்ணீர் வைக்க வாட்டர் ஹூட்டர் போன்றவற்றை பயன்படுத்தும்போது அதிக கவனமுடன் கையாள்வது நல்லது. ஸ்விட்ஸ் மற்றும் பிளெக்களை கழட்டிய பிறகு தண்ணீரில் கை வைத்து பாருங்கள். உங்களுக்கு மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

உடலுக்கு சுறுசுறுப்பு தரும் 7 சூப்பர் உணவுகள் - லிஸ்ட் இதோ!
மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவற்றை பின்பற்றுங்கள்!
புஷ்பா 2 படத்திற்காக வித்யாசமான புரமோஷன் செய்த ராஷ்மிகா
கீர்த்தியை பெண் கேட்ட பிரபல நடிகரின் குடும்பம்.. யார் தெரியுமா?