5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Heart Attack: மாரடைப்பு வந்துவிடும் என்று பயமா..? தினமும் இதை செய்தாலே போதும்! ஹார்ட் அட்டாக் வராது..

Healthy Heart: மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் படிக்கட்டுகளை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் இதய நரம்புகள் வலுப்பெறும் என நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. துலேன் பல்கலைக்கழக ஆய்வின்படி, தினமும் 50 படிகள் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், மற்றவர்களை விட படிக்கட்டு ஏறுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது.

Heart Attack: மாரடைப்பு வந்துவிடும் என்று பயமா..? தினமும் இதை செய்தாலே போதும்! ஹார்ட் அட்டாக் வராது..
கோப்பு புகைப்படம்
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Updated On: 27 Jul 2024 14:17 PM

இதய ஆரோக்கியம்: ஆரோக்கியமான இருக்க உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்வது மிகவும் முக்கியம். நமது தினசரி பிஸியான வாழ்க்கையில் உடற்பயிற்சி, யோகா மட்டுமின்றி சிறு சுறு பழக்கங்கள் செய்தாலே போது நமது உடல் ஆரோக்கியமான இருக்கும். சமீப காலங்களில் 50 வயதை கடந்தவர்களுக்கு வரும் மாரடைப்பு பிரச்சனை, 35 முதல் 40 வயதுடையவர்களுக்கு வருகிறது. உங்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் வர கூடாது என்றால், மீன், அக்ரூட் பருப்புகள், சோயாபீன் மற்றும் பாதாம் உள்ளிட்ட பொருட்களை உணவாக எடுத்துகொள்வது நல்லது. இது தவிர பழக்க வழங்கங்களில் படிக்கட்டு ஏறுவதாலும் உங்களுக்கு வரக்கூடிய மாரடைப்பு தள்ளி போகும் என்றால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா..? ஆய்வின்படி, மருத்துவர்கள் உண்மை என்று கூறுகிறார்கள். படிக்கட்டு ஏறுவது உங்கள் தசைகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. குறிப்பாக மாரடைப்பு போன்ற ஆபத்தில் இருந்து விடுபட உதவுகிறது. அதனை பற்றிய முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.

Also read: Heart Attack: மாரடைப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் கவனிக்க வேண்டியவை..!

தினமும் எத்தனை படிக்கட்டுகள் ஏற வேண்டும்..?

மாரடைப்பு வராமல் தடுக்க தினமும் படிக்கட்டுகளை பயன்படுத்துவது நல்லது. இதன் மூலம் இதய நரம்புகள் வலுப்பெறும் என நியூ ஆர்லியன்ஸில் உள்ள துலேன் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. துலேன் பல்கலைக்கழக ஆய்வின்படி, தினமும் 50 படிகள் ஏறுவது இதய நோய் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், மற்றவர்களை விட படிக்கட்டு ஏறுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் குறைவு என்றும் தெரிவித்துள்ளது. உங்களுக்கு ஜிம் செல்லவோ அல்லது நீண்ட தூரம் நடக்க வைப்பு இல்லாதபோது படி ஏறுவது சிறந்தது. இது எளிய முறையில் உங்களது இதயத்தையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது.

படிக்கட்டுகளில் ஏறுவது இதயத்திற்கு ஏன் நல்லது..?

படிக்கட்டுகளில் ஏறுவது உடலில் நல்ல கொலஸ்ட்ரால் எனப்படும் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (HDL) அளவை அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், கெட்ட கொழுப்பு என்றும் அழைக்கப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதத்தின் (LDL) அளவு குறைகிறது. இதனால் இதயத்தில் ஏற்படும் அடைப்புகள் தடுக்கப்பட்டு, மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது.

உடல் பருமனையும் குறைக்கும்:

அலுவலகம் போன்ற இடங்களில் லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால், இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டம் நடைபெறும். மேலும், இது உங்களது உடல் பருமனை குறைக்க உதவி செய்வதுடன், உங்கள் மூட்டுகள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது.

Also read: Heart: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஸ்நாக்ஸ்.. இதை தெரிஞ்சுக்கோங்க!

இதுமட்டும் போதாது..!

மாரடைப்பை தடுக்க படிக்கட்டுகளில் ஏறினால் மட்டும் போதாது என்கின்றனர் மருத்துவர்கள். இதனுடன் சீரான உணவு, போதுமான தூக்கம் மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை ஆகியவை இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம். மேலும் புகைபிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், அதை முற்றிலுமாக நிறுத்த வேண்டியது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News