5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Health Tips: உடலுறவுக்குள் இந்த விதிகளை பின்பற்றுவது மிக முக்கியம்.. இது இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

Healthy Physical Relationship: நீங்கள் புதிதாக திருமணம் செய்து முதல் முறையாக உடலுறவு கொள்ள போகிறவர்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே திருமணமானவர்களாக இருந்தாலும் சரி. இந்த விதிகள் அனைவருக்கும் பொதுவானதுதான். இது உடல் ரீதியாக இருக்கும் ஒவ்வொரு ஜோடிக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உடலுறவு வாழ்க்கைக்கு இந்த விதிகள் உங்களை தயார் படுத்தும். 

Health Tips: உடலுறவுக்குள் இந்த விதிகளை பின்பற்றுவது மிக முக்கியம்.. இது இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!
உடலுறவு ஆரோக்கியம் (Image: GETTY)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Aug 2024 21:00 PM

உடலுறவு விதிகள்: உடலுறவு கொள்ளும்போது ஒரு குறிப்பிட்ட சில விதிகளை பின்பற்றுவது மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன்மூலம், உடலளவிலும், மனதளவிலும் இது உங்களையும், உங்களது பார்ட்னரை இணைக்கும். நீங்கள் புதிதாக திருமணம் செய்து முதல் முறையாக உடலுறவு கொள்ள போகிறவர்களாக இருந்தாலும் சரி, ஏற்கனவே திருமணமானவர்களாக இருந்தாலும் சரி. இந்த விதிகள் அனைவருக்கும் பொதுவானதுதான். இது உடல் ரீதியாக இருக்கும் ஒவ்வொரு ஜோடிக்கும் தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான உடலுறவு வாழ்க்கைக்கு இந்த விதிகள் உங்களை தயார் படுத்தும்.

ALSO READ: Health Tips: உடலுறவில் உச்சக்கட்டத்தை அடைய எளிய வழிகள்.. இவை இருவருக்கும் மகிழ்ச்சியை தரும்!

முதல் விதி: வரம்புகளை மீறாதீர்கள்

திருமண வாழ்க்கையில் எப்போதும் ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்துகின்ற சூழ்நிலை நிலவி வருகிறது. உங்கள் துணை உங்களுக்கு எப்போதும் அடிமை, செக்ஸ் பொம்மையும் கிடையாது. இதை எப்போதும் மனதில் வைத்து கொள்ளுங்கள். உங்கள் துணைக்கு உடலுறவு கொள்ள விருப்பம் இல்லையென்றால், அவர்களை வலுக்கட்டாயம் செய்யாதீர்கள். இப்படி செய்யும் உங்களுக்கும், பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாகவே, கட்டாய உடலுறவும் திருமண பாலியல் வன்கொடுமை என்று கூறுகிறார்கள்.

அதன்படி, ஆடைகளை கிழிக்காதீர்கள், கட்டாயப்படுத்தாதீர்கள், வெறி பிடித்ததுபோல் கடித்து துன்புறத்தல் செய்யாதீர்கள்.

இரண்டாவது விதி: கொச்சையாக பேசாதீர்கள்

காதல் மற்றும் காமத்தின்போது அழகான வார்த்தைகளை வெளிப்படுத்துவதே எதிர்பாலினத்தவருக்கு நல்ல நினைவுகளை தரும். ரொமாண்டிக்காக பேசுகிறேன் என்ற பெயரில், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். தவறான வார்த்தைகளை பயன்படுத்தும்போது, அவர்களை மனதளவில் பாதிக்க செய்யலாம். இது உங்கள் திருமண வாழ்க்கையையும் பாதிக்க செய்யும்.

மூன்றாவது விதி: உங்கள் துணையை ஆபாச நடிகைகளாக கருத வேண்டாம்

உங்களை பற்றி நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்து கொள்ளுங்கள். ஆனால், உங்களை துணையை ஆபாச நடிகர், நடிகைகளாக நினைக்காதீர்கள். பலர் ஆபாசப் படங்களை பார்த்தும், ஆபாச படங்களை தங்கள் துணைக்கும் காண்பித்து, படங்களில் வருவதுபோல் செய்ய சொல்கிறார்கள். இது நிஜ வாழ்க்கையில் எல்லோராகும் அப்படி செய்வது சாத்தியமில்லை.

ALSO READ: Health Tips: ஆண்களின் விந்தணு எண்ணிக்கை குறைய இதுதான் காரணமா..? தெரிஞ்சும் இந்த தப்பு செய்யாதீங்க!

நான்காவது விதி: ஈடுபாடு அவசியம்

உடலுறவில் இரண்டு பேரும் முழுதாக ஈடுபடுவது முக்கியம். இருவரும் முழுமையாக ஈடுபடாத வரை, உடலுறவு இருவருக்கும் திருப்தியை தராது. இந்தியாவில் இருக்கும் ஆண்களால் 70% பெண்களுக்கு உச்சக்கட்டத்தை தரமுடியவில்லை என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

குறிப்பு: இந்த செய்தியானது ஆபாசத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவோ எழுதப்படவில்லை. பலர் இது போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களும் இதுபோன்ற பிரச்சனைகளில் இருந்து வெளிவர வேண்டும் என்ற நோக்கத்திற்காவே எழுதுகிறோம். இதை படிப்பவர்களுக்கு பாலியல் பற்றிய தெளிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தினந்தோறும் குறிப்பிடுகிறோம்.

Latest News