Liver Health Tips: உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க.. இந்த உணவுகள் மிக சிறந்தது..! - Tamil News | iver health tips cleanse your liver naturally with these simple tips for tamil | TV9 Tamil

Liver Health Tips: உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க.. இந்த உணவுகள் மிக சிறந்தது..!

Healthy Liver: வெள்ளை சர்க்கரை, ஆல்கஹால், வறுத்த உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் அதிக அளவில் உட்கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்பட தொடங்குகிறது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துகொள்வதன் மூலம் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அவற்றை பாதுகாக்கலாம். இதையடுத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய  உணவு பொருட்களின் பட்டியல் இங்கே.

Liver Health Tips: உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க.. இந்த உணவுகள் மிக சிறந்தது..!

கோப்பு புகைப்படம்

Published: 

31 Jul 2024 13:40 PM

கல்லீரல் ஆரோக்கியம்: கல்லீரல் நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்று. அதை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளால் பலர் இறந்துள்ளனர். கல்லீரலை பாதுகாப்பாக கவனிக்காமல் விட்டால் மஞ்சள் காமாலை மற்றும் வயிற்று வலி போன்ற நோய்களை உண்டாக்கும். இதனால் கல்லீரல் செயலிழக்காமல் போகவும் வாய்ப்புகள் அதிகம். வெள்ளை சர்க்கரை, ஆல்கஹால், வறுத்த உணவுகள், அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவுகள் அதிக அளவில் உட்கொள்வதால் கல்லீரல் பாதிக்கப்பட தொடங்குகிறது. கார்போஹைட்ரேட், நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை எடுத்துகொள்வதன் மூலம் கல்லீரலில் உள்ள கொழுப்பைக் குறைத்து, அவற்றை பாதுகாக்கலாம். இதையடுத்து, கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய  உணவு பொருட்களின் பட்டியல் இங்கே.

ALSO READ: Egg Benefits: தினமும் ஒரு வேகவைத்த முட்டை போதும்.. உடலுக்கு அத்தனை நன்மைகள் கிடைக்கும்!

காபி:

நீங்கள் தினந்தோறும் காபி குடிக்கும் பழக்கம் உடையவராக இருந்தால் உங்களுக்கு இந்த குறிப்பு நல்ல செய்தியை தரும். தினந்தோறும் காபி எடுத்து கொள்வது கல்லீரல் நோய் அபாயத்தை குறைக்கும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பாலிபினால்கள் நிறைந்துள்ளதால், காபி கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

திராட்சைப்பழம்:

திராட்சைப்பழத்தில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளன. நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிப்பதோடு கல்லீரலில் நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. திராட்சைப்பழத்தை அவ்வபோது ஜூஸாகவும் எடுத்து கொள்வது நல்லது.

முட்களை கொண்ட கற்றாழை:

முட்களை கொண்ட கற்றாழையில் ஆல்கஹால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் கல்லீரலுக்கு மருந்ததாக செயல்படுகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இந்த கற்றாழைப் பழம் கல்லீரல் வீக்கத்தையும் குறைக்கிறது.

பீட்ரூட் ஜூஸ்:

பீட்ரூட் ஜூஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்கள் கல்லீரல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றி சுத்தப்படுத்துகிறது.

நட்ஸ்:

பாதாம், அக்ரூட் பருப்புகள், பிஸ்தா போன்ற நரட்ஸ்கள் புரதம், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்களால் நிறைந்துள்ளது. இது கல்லீரலில் உள்ள கழிவுகளை நீக்குவது மட்டுமின்றி, கல்லீரலில் சேரும் கொழுப்பு சேருவதையும் தடுக்கிறது.

ஆலிவ் எண்ணெய்:

ஆலிவ் எண்ணெயில் பல நன்மைகளை தரக்கூடிய பண்புகள் அதிகளவில் உள்ளது. ஆலிவ் எண்ணெயில் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் இருப்பதால் கல்லீரல் கொழுப்பைக் குறைப்பதிலும், இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதிலும், என்சைம் அளவை துரிதப்படுத்துவதிலும் இது நன்மை பயக்கும் என்று நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூண்டு:

பூண்டு நம் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமான ஒன்று. இது பருவகாலத்தில் ஒவ்வாமைகளிலிருந்து உங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.

பச்சை இலை காய்கறிகள்:

குழந்தைகளுக்கு சிறுவயது முதலே பச்சை இலை காய்கறிகள் வழங்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். ஏனெனில் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, காலிஃபிளவர் போன்ற பச்சை இலை காய்கறிகள் கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து, நச்சுகளை வெளியேற்றுகிறது.

ALSO READ: Beetroot Benefits: தினமும் ஒரு பிட்ரூட் போதும்.. உங்கள் உடலில் பல பிரச்சனைகள் தீரும்!

தேநீர்:

இந்திய மக்கள் தேநீரை காலையிலும், மாலையிலும் ஒரு பானமாக எடுத்துகொள்கின்றனர். இது தினமும் குடிப்பதால், உங்கள் கல்லீரல் கொழுப்பு அளவை சரிவர பயன்படுத்த உதவுகிறது.

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!