Jaipur Travel Tips: மழைக்காலத்தில் குடும்பத்துடன் செல்ல சிறந்த சுற்றுலா தலம்.. அன்புடன் அழைக்கும் ஜெய்ப்பூர்!
Travel Tips: ஜெய்ப்பூர் அதன் அழகுக்காக பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இதற்காக ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முந்தைய கால அரசர்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்த பல பகுதிகளை இங்கு கண்டுகளிக்கலாம். நீங்கள் ஜெய்ப்பூரை பார்க்க வருகிறீர்கள் என்றால், நீங்கள் பார்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை இங்கே காணலாம். அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய்ப்பூர் டூர்: குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்தில் மழைக்காலத்தில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால், நீங்கள் தாமதிக்க வேண்டாம். இப்படியான சூழ்நிலையில், நீங்கள் சுற்றுலா செல்ல சிறந்த இடம் ஜெய்ப்பூர். ஜெய்ப்பூர் அதன் அழகுக்காக பெயர் பெற்ற ஊர்களில் ஒன்று. இதற்காக ஜெய்ப்பூர் பிங்க் சிட்டி என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முந்தைய கால அரசர்கள் மற்றும் அரசர்கள் வாழ்ந்த பல பகுதிகளை இங்கு கண்டுகளிக்கலாம். நீங்கள் ஜெய்ப்பூரை பார்க்க வருகிறீர்கள் என்றால், நீங்கள் பார்க்க ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களை இங்கே காணலாம். அவற்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஜெய்ப்பூரில் ஜெய்ப்பூர் அரண்மனை, அமர் கோட்டை, ஜல் மஹால், ஹவா மஹால், நஹர்கர் சோக்கி தானி, ராம்பாக் அரண்மனை, மோதி துங்ரி, பிர்லா கோயில் உள்ளிட்ட பல இடங்கள் உள்ளன.
ALSO READ: Bengaluru Tour: பெங்களூரை சுற்றி பலரும் அறியாத இடங்கள்.. வார இறுதியில் ஜாலியா டூர் போங்க!
ஜெய்ப்பூர் அரண்மனை:
ஜெய்ப்பூரில் அமைந்துள்ள அமைந்துள்ள இந்த ஜெய்ப்பூர் அரண்மனை, நகரத்தின் மையத்தில் ராஜஸ்தானி மற்றும் முகலாய அரசர்கள் தங்கியிருந்த இல்லமாகும். இந்த அரண்மனை பழுப்பு நிற பளிங்கு தூண்கள் மற்றும் வண்ணக் கற்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். இரண்டு செதுக்கப்பட்ட பளிங்கு யானைகள் நுழைவாயிலில் காவலாளிகள் போல் காட்சியளிக்கும். ஜெய்ப்பூர் அரண்மனை குடும்பத்துடன் பார்க்க ஒரு சிறந்த இடமாகும். சமீபத்தில், படே மியான் சோடே மியான் படத்தின் சுபனல்லாஹ் பாடல் இங்கு படமாக்கப்பட்டது.
அமர் கோட்டை:
அமர் கோட்டை என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமரில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். அமர் கோட்டை என்பது 4 சதுர கிலோமீட்டர் (1.5 சதுர மைல்) பரப்பளவை கொண்டுள்ளது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து 11 கிலோமீட்டர் (6.8 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மலையின் மீது அமைந்துள்ள இது ஜெய்ப்பூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமாகும். ஜோதா அக்பர் போன்ற முக்கிய படங்கள் இந்த அமர் கோட்டையில்தான் படமாக்கப்பட்டது.
சோமு அரண்மனை:
ஜெய்ப்பூரின் சோமு அரண்மனைக்கு குடும்பத்துடன் சுற்றுலா செல்ல சிறந்த இடம். இங்கு இதுவரை பல பாலிவுட் திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
வளைவு:
ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர் வட்டத்தில் வெள்ளை பளிங்கு கற்களால் ஆன வளைவு உள்ளது. இதை கட்டிடக் கலைஞர் அனூப் பர்தாரியாவால் கட்டப்பட்டது. இதை இவர் சுமார் 2 ஆண்டுகளுக்கு மேல் கட்டி முடித்தார். 34.1 அடி உயரமும் 104 மீட்டர் நீளமும் கொண்டு, 5 மாடி கட்டிடங்களாக உள்ளது. இது, சுற்றுலாப் பயணிகளை வரவேற்பது மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் நல்ல நினைவுகளை தரும்.
ALSO READ: Hyderabad Tour: குடும்பத்துடன் செல்ல சிறந்த சுற்றுலா தலம்.. ஜாலியாக ஹைதராபாத் சுற்றி வரலாம்!
அரச தோட்டம்:
இந்த அரச தோட்டம் மகாராஜா சவாய் ஜெய் சிங் தனது இரண்டாவது ராணி சிசோடியாவுக்காக 1728 இல் கட்டப்பட்டது. சிசோடியா ராணி கார்டன் ராதா-கிருஷ்ணா காதல் கதை அழகிய சுவர் ஓவியங்களால் எடுத்து கூறப்பட்டு இருக்கும். இந்த பசுமையான அரச தோட்டத்தை சுற்றி புல்வெளிகள், அழகான நீரூற்றுகள், காட்சியங்கள் மற்றும் ஓவியங்கள் இடம் பெற்றிருக்கும்.