Health Advice: உங்கள் உடலுறவு ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? இந்த விஷயங்களில் கவனம் தேவை..!
Health Tips: பாதுகாப்பு மற்றும் சில தகவல்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்படும் உடலுறவு உங்களுக்கு மகிழ்ச்சியான செக்ஸ் அனுபவத்தை அளிக்கும். உடலுறவின்போது ஆரோக்கியமற்ற பாலியல் நடத்தை உடல், உணர்ச்சிகள் மற்றும் சமூகம் என அனைத்திலும் உங்கள் மதிப்பை கெடுத்துவிடும். இது உங்கள் பாலியல் வாழ்க்கைக்கும் பல சிக்கல்களை தந்துவிடும். உடலுறவில் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளாதபோது பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ), தேவையற்ற கர்ப்பம், உடலுறவில் விருப்பம் இல்லாமை போன்ற பக்க விளைவுகளையும் தரலாம்.
பாலியல் வாழ்க்கை: நீங்கள் ஈடுபடும் பாலியல் செயல்பாடுகளின் வகையை பொறுத்து, உடலுறவு கொள்வது நன்மைகள் மற்றும் தீமைகளை தரும். பாதுகாப்பு மற்றும் சில தகவல்களை மனதில் வைத்து மேற்கொள்ளப்படும் உடலுறவு உங்களுக்கு மகிழ்ச்சியான செக்ஸ் அனுபவத்தை அளிக்கும். உடலுறவின்போது ஆரோக்கியமற்ற பாலியல் நடத்தை உடல், உணர்ச்சிகள் மற்றும் சமூகம் என அனைத்திலும் உங்கள் மதிப்பை கெடுத்துவிடும். இது உங்கள் பாலியல் வாழ்க்கைக்கும் பல சிக்கல்களை தந்துவிடும். உடலுறவில் சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொள்ளாதபோது பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ), தேவையற்ற கர்ப்பம், உடலுறவில் விருப்பம் இல்லாமை போன்ற பக்க விளைவுகளையும் தரலாம்.
ALSO READ: Health Tips: தம்பதிக்குள் உடல் நெருக்கம் அதிகரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் சாப்பிடுங்க!
பாதுகாப்பு:
பாதுகாப்பான பாலியல் செயல்பாடுகளை மேற்கொள்ளாமல் உடலுறவு கொள்வது பாலியல் பரவும் நோய்கள் மற்றும் எதிர்பாராத கர்ப்பத்தின் அபாயத்தை பல மடங்கு அதிகரிக்க செய்யும். இத்தகைய சூழ்நிலையில், உடலுறவு கொள்ளும்போது எப்போதும் ஆணுறையை பயன்படுத்துவது நல்லது. அப்படி இல்லையென்றால், கர்ப்பத்தை தடுக்க பாதுகாப்பான கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்வது நல்லது.
ஒன்றுக்கு மேற்பட்ட பாலியல் துணை:
உடலுறவு சுகத்திற்காக ஒரு சில ஆண்கள் தினசரி ஒரு பெண்ணை தேடி செல்கிறார்கள். இப்படி பட்டவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. ஏனெனில் இவ்வாறு செய்வதன் மூலம் பாலியல் பரவும் நோய்த்தொற்றுகள் (எஸ்.டி.ஐ) ஏற்படும் ஆபத்து மிக அதிகம். மேலும் இது எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்கள் பரவும் அபாயத்தையும் கொடுக்கும். முடிந்தவரை உங்கள் துணையுடன் மட்டுமே உடலுறவு கொள்வது ஆரோக்கியமானது, பாதுகாப்பானது. நீங்கள் பிற பெண்களை தேடி செல்லும்போது அது இந்த சமூகத்தில் உங்கள் பெயரை கெடுக்கும்.
கட்டாய உடலுறவு:
எப்போதும் உங்கள் துணையின் சம்மதத்துடன் உடலுறவு மேற்கொள்வது நல்லது. உங்கள் மனைவியாகவே இருந்தாலும், அவருக்கு விருப்பம் இல்லையெனில், அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு மேற்கொள்வது தவறானது. இது சட்ட ரீதியாகவும் குற்றமாக பார்க்கப்படுகிறது. மேலும், உங்கள் துணைக்கு உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். மனதளவில் உங்கள் துணை பாதிக்கப்பட்டால், உங்களுக்கு நல்ல முறையில் உடலுறவு இருக்காது.
உற்சாகத்தில் சுயநினைவு இழப்பது:
உடலுறவின்போது சில உற்சாகம் அடைந்து ஏதாவது செய்கிறார்கள். இது உங்கள் துணைக்கு வாழ்நாள் முழுவதும் பயத்தையும், பதட்டத்தையும் கொடுக்கும். இத்தகைய சூழ்நிலையில், உங்கள் துணையுடன் உடல் உறவில் ஈடுபடும்போது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகவும் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது.
நிபுணரின் உதவியை நாடுங்கள்:
உடலுறவின்போது இதுபோன்ற ஆரோக்கியமற்ற பாலியல் நடத்தைகளுடன் பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது. பாலியல் தொடர்பான அடிப்படை சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் ஆரோக்கியமான பாலியல் பழக்கங்களை வளர்ப்பதற்கும் இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுகாதாரம்:
தினமும் இருமுறை குளிப்பது நல்லது. பிறப்புறுப்பு பகுதிகளை வெதுவெதுப்பான நீரில் சுத்தம் செய்ய வேண்டும். பிறப்புறுப்பு பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் தொற்று ஏற்படுவதை தடுக்க, முன்னிருந்து பின்னோக்கி தண்ணீரால் சுத்தம் செய்ய வேண்டும். இது, வீக்கம், எரிச்சல், அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்துவதை தடுக்கும். உடலுறவுக்கு முன் குளிக்கவும், உடலுறவுக்குப் பிறகு அந்தரங்க உறுப்புகளை சுத்தம் செய்வது முக்கியம். இதற்காக, லேசான சோப்பைப் பயன்படுத்தலாம். பிறப்புறுப்புகளில் தோல் உணர்திறன் அல்லது ஏதேனும் தொற்று இருந்தால், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
ALSO READ: Health tips: ஆண்களுக்கு ஆண்மைக்குறைவு ஏற்பட காரணங்கள் என்ன? முழு விவரம் இங்கே!
ஆரோக்கியமான உணவு:
மாதுளம் பழச்சாறு குடிப்பதால் உடலுறவின்போது மனநிலை மேம்படும். இரத்த ஓட்டம் மேம்படும் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்க உதவும். அதேபோல், சாக்லேட் சாப்பிடுவதால் செரோடோனின் என்ற ஹார்மோனை உற்பத்தி செய்து மனநிலையை மேம்படுத்துகிறது.
வழக்கமான உடற்பயிற்சி:
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சி உதவுகிறது .வழக்கமான உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. ஆண்கள் வாரத்திற்கு குறைந்தது 3 மணி நேரம் வியர்வை மற்றும் உடற்பயிற்சி செய்வது நல்லது. இது பாலுணர்வை அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தையின்மை பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கும்.