5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kesar Kulfi Ice Cream: கேசர் பிஸ்தா குல்ஃபி ஐஸ் க்ரீம்.. இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்..

குல்ஃபி என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும், ஏனென்றால் அதன் க்ரீமியர் தன்மை மற்றும் அதன் தனித்துவமான சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும். குல்ஃபி ஐஸ் க்ரீமை வீட்டிலேயே செய்யலாம் என்று பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால், கடைகளில் வாங்குவது போல் கெட்டியாக வராமல் போய்விடும். அதனால் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்போம். இருப்பினும், கீழ்க்காணும் முறையை பின்பற்றினால், இனி வீட்டிலேயே சுவையான கெட்டியான குல்ஃபி ஐஸ் க்ரீமை சுலபமாக செய்துவிடலாம்.

Kesar Kulfi Ice Cream: கேசர் பிஸ்தா குல்ஃபி ஐஸ் க்ரீம்.. இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்..
கேசர் பிஸ்தா குல்ஃபி ஐஸ் க்ரீம்
Follow Us
intern
Tamil TV9 | Published: 27 Jul 2024 16:29 PM

குல்ஃபி என்ற பெயரை கேட்டாலே நாவில் எச்சில் ஊறும், ஏனென்றால் அதன் க்ரீமியர் தன்மை மற்றும் அதன் தனித்துவமான சுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சுண்டி இழுக்கும். குல்ஃபி ஐஸ் க்ரீமை வீட்டிலேயே செய்யலாம் என்று பலரும் முயற்சி செய்திருப்போம். ஆனால், கடைகளில் வாங்குவது போல் கெட்டியாக வராமல் போய்விடும். அதனால் கடைகளிலேயே வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்போம். இருப்பினும், கீழ்க்காணும் முறையை பின்பற்றினால், இனி வீட்டிலேயே சுவையான கெட்டியான கேசர் பிஸ்தா குல்ஃபி ஐஸ் க்ரீமை சுலபமாக செய்துவிடலாம். 

தேவையான பொருட்கள்:

  • முழு கொழுப்பு பால் – 3 கப்
  • சோள மாவு – 2 ஸ்பூன்
  • சர்க்கரை – 1/4 கப்
  • குங்குமப்பூ – 1 சிட்டிகை
  • ஏலக்காய் தூள் – 1/4 ஸ்பூன்
  • பிஸ்தா – 15
  • பாதாம் – 15
  • ரோஸ் வாட்டர்- 1 ஸ்பூன்
  • நறுக்கிய நட்ஸ் – 5 ஸ்பூன்

குல்ஃபி செய்முறை:

முதலில் ஒரு அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சிக் கொள்ளவும். அதை மிதமான தீயில் வைத்து 20 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும். அடிப்பிடிக்காமல் இருக்க அடிக்கடி கிளறி விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 

இதற்கிடையில், மிக்ஸி ஜாரில் குங்குமப்பூ, பாதாம் மற்றும் பிஸ்தா ஆகியவற்றை சேர்த்த கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். மிகவும் மென்மையாக அரைக்கக் கூடாது. இதை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

சோள மாவை 3 ஸ்பூன் பாலில் கட்டி இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்களுக்கு பால் கெட்டியாக வெந்திருக்கும், அந்த சமயத்தில் சர்க்கரையை சேர்த்து 5 நிமிடம் நன்றாக கலந்துவிடவும்.

பிறகு, கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசலை பாலில் சேர்த்து, கட்டிகள் எதுவும் இல்லாமல் தொடர்ந்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். 5 நிமிடங்களுக்கு பிறகு பால் கெட்டியானது, அதில் ஏலக்காய் தூள், பொடித்த பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்க்கவும்.

1 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, அதில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்துவிடவும். இப்போது பாலை முழுவதுமாக ஆறவிடவும். நன்றாக ஆறியதும் அதை குல்ஃபி மோல்டு இருந்தால் அதில் ஊற்றிக் கொள்ளலாம்.

இல்லையென்றால், சதுர வடிவ கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய நட்ஸை மேலே தூவிவிட்டு, அலுமினிய தாளைப் பயன்படுத்தி மூடிக் கொள்ளவும். இதை 8-9 மணிநேரம் ஃப்ரீட்சரில் வைத்து உறைய வைக்கவும்.

குல்ஃபி நன்றாக செட் ஆனதும், அதை கண்ணாடி அல்லது மர தட்டிற்கு மாற்றி, வெட்டி சாப்பிடவும். வெயிலுக்கு ஜில் ஜில் குல்ஃபி ரெடி!

Latest News