Kidney Disease: டயாலிசிஸ் என்றால் என்ன..? சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி..?
Dialysis: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், மக்கள் பல சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கு பொதுவாக காரணமாகின்றன. இதன் காரணமாக சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நம் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்கும் சில முக்கியமான செயல்பாடுகள் உள்ளன. இது உடல் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்குவதற்கு மிகவும் முக்கியமானது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் சிறுநீரகமும் முக்கிய பங்கு வகிக்கிறது. சிறுநீரகங்கள் உங்கள் உடலில் உள்ள இரத்தத்தில் இருந்து நச்சுகள் மற்றும் கழிவுப்பொருட்களை வடிகட்ட வேலை செய்கின்றன. மேலும் இந்த கழிவுப்பொருட்களை உடலில் இருந்து சிறுநீர் வடிவில் அகற்றுவதற்கும் பொறுப்பாகும். இதுபோன்ற சூழ்நிலையில், சிறுநீரகங்கள் வேலை செய்வதை நிறுத்தினால், உடலில் உள்ள நச்சு மற்றும் கழிவுப்பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால், மக்கள் பல சிறுநீரகக் கோளாறுகளுக்கு ஆளாகிறார்கள். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை சிறுநீரக செயலிழப்புக்கு பொதுவாக காரணமாகின்றன. இதன் காரணமாக சிறுநீரக நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சிறுநீரகங்கள் செயல்படாமல் போனால், டயாலிசிஸ் மூலம் ரத்தத்தைச் சுத்தப்படுத்தி, உடலில் இருந்து கழிவுப் பொருட்கள் வெளியேற்றப்படும். இத்தகைய சூழ்நிலையில், சிறுநீரக ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது, டயாலிசிஸ் என்றால் என்ன உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
டயாலிசிஸ் என்றால் என்ன..?
உடலில் உள்ள சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடு என்பது இரத்தத்தை வடிகட்டுவதும், உடலில் உள்ள அழுக்குகளை அகற்றுவதும் ஆகும். சில சமயங்களில் சிலரது சிறுநீரகம் செயலிழந்துவிடுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், டயாலிசில் செய்வது முக்கியம். டயாலிசிஸ் என்பது உடலில் இருந்து ரத்தத்தை வெளியேற்றி, அந்த ரத்தம் இயந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, மீண்டும் உடலுக்குள் செலுத்தும் முறையாகும்.
டயாலிசிஸ் யாருக்கு தேவை..?
சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்டவர்கள், கடைசிக்கட்ட சிறுநீரக நோய் உள்ளவர்களுக்கு டயாலிசிஸ் மேற்கொள்ளப்படும். உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் லூபஸ் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம். இது சிறுநீரக நோய்க்கு வழிவகுக்கிறது. அதேபோல், வேறு சிலருக்கு எந்த காரணமும் இல்லாமல் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. சிறுநீரக கோளாறு பாதிக்கப்பட்டு இருக்கும் நபர்களுக்கு சிறுநீரகம் அந்த இயல்பான செயல்பாட்டை குறைத்துகொண்டு 10 முதல் 15 சதவிகிதம் மட்டுமே வேலை செய்யும். இதுபோன்ற சூழ்நிலைகளில் பாதிக்கப்பட்டவர்கள் உயிர்வாழ டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பொருத்தமான சிறுநீரகம் கிடைத்தால் மட்டுமே மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டும். இது அமையாத சூழலில் நோயாளிகளுக்கு டயாலிஸிஸ் மட்டுமே ஒரே தீர்வு.
டயாலிசிஸ் செய்வதற்கான நேர இடைவெளி என்ன..?
ஒவ்வொரு நோயாளிக்கும் டயாலிஸி செய்வதற்காக நேர இடைவெளி மாறுப்படும். சிலருக்கு இது தினசரி தேவைப்படும் ஒன்றாகும். ஒரு சில நோயாளிகளுக்கு 1 அல்லது 2 நாட்கள் இடைவெளியில் டயாலிசிஸ் மேற்கொள்ளப்படும். டயாலிசிஸ் மூலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலின் ரத்தத்தை இயந்திரங்கள் மூலம் சுத்தம் செய்து, ரத்தத்தில் இருந்து கழிவுப் பொருட்கள் பிரிக்கப்படுகின்றன.
சிறுநீரகங்களை பாதுகாப்பது எப்படி..?
ஒரு மனிதன் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிக மிக முக்கியம். அந்தவகையில், சிறுநீரகத்தை தொற்று மற்றும் நோய்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.
தண்ணீர்:
தினசரி நிறைய தண்ணீர் குடிப்பதன்மூலம், இரத்தத்தில் இருந்து கழிவுப்பொருட்களை சுத்தப்படுத்தும். அதாவது, சிறுநீர் மூலம் நச்சுக்கள் வெளியேறும். அதேபோல், அதிக தண்ணீர் குடிப்பது சிறுநீர் பாதை தொற்றுநோய் தொடர்பான நோய்த்தொற்றுகளில் அபாயத்தையும் குறைக்கும்.
வலி நிவாரணி மருந்து:
அதிக அளவிலான வலி நிவாரணி மருந்துகளை உட்கொள்வது சிறுநீரகம் மற்றும் கல்லீரலில் மோசமான விளைவை உண்டாக்கும். எனவே, மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
ஆரோக்கியமான உணவு:
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், ஆரோக்கியமான உணவுகளை எடுத்துகொள்வது முக்கியம். எனவே, முடிந்தவரை கடைகளில் தயாரிக்கப்படும் துரித உணவுகளை சாப்பிடாதீர்கள். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைக்கும்.
புகை மற்றும் மது வேண்டாம்:
மது மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, முடிந்தவரை இந்த பழக்கங்களை தவிர்ப்பது நல்லது.