Lip Care: ரோஜா இதழை போன்ற உதடு வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..

Lips Care: உதடுகள் தான் ஒருவரின் அழகை வெளிகாட்டும். சிலரது உதடுகள் மென்மை இழந்து, கருமை அடைந்து, தோல் உரிந்து காணப்படும். சூரியக்கதிர்களின் தாக்கம், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினால் இவ்வாறு ஏற்படுகிறது. அதனை மென்மையாக்கும் இயற்கை முறைகளை தெரிந்து கொள்ளுங்கள்

Lip Care: ரோஜா இதழை போன்ற உதடு வேண்டுமா? இதை செய்து பாருங்கள்..

கோப்பு படம் (Photo Credit: Pinterest)

Updated On: 

10 Oct 2024 18:03 PM

உதடு பராமரிப்பு: ரோஜா போன்ற இதழ்கள் வேண்டுமென்று ஒவ்வொருவரும் நினைப்பதுண்டு. அந்த உதடுகளை மென்மையாகவும் சிவப்பாகவும் மாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆண்கள் சிகரெட் பிடிப்பதால் உதட்டின் நிறம் சற்று கருப்பாக மாறும். உதடுகள்தான் ஒருவரின் அழகை வெளிகாட்டும். சிலரது உதடுகள் மென்மை இழந்து, கருமை அடைந்து, தோல் உரிந்து காணப்படும். சூரியக்கதிர்களின் தாக்கம், புகைப்பிடித்தல் போன்ற காரணங்களினால் இவ்வாறு ஏற்படுகிறது. இதையெல்லாம் சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கிளிசரின்:

சிறிது பஞ்சை எடுத்து அதை தரமான கிளிசரினில் நனைத்து உதடுகளிலும் உதடுகளை சுற்றிலும் தடவுவதன்மூலம், இது அந்தப் பகுதி முழுவதையும் நீரேற்றமாக வைத்திருக்கும். மேலும், ஒரு நல்ல மாய்சரைசராகவும் செயல்படும். அதுமட்டுமில்லாமல் உதடு பகுதியை சுற்றியுள்ள கருமையை குறைக்கவும் கிளிசரின் உதவுகிறது.

வாழைப்பழ மாஸ்க்:

ஒரு பாத்திரத்தில் வாழைப்பழம், தயிர் மற்றும் தேன் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். உதடுகளை சுற்றி தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால் கருமையான தோல் அல்லது கருமையான உதடுகள் குறைய வாய்ப்பிருக்கிறது.‌ இதை தொடர்ந்து பயன்படுத்தினால் எளிதில் பலன் கிடைக்கும்.

கன்சீலர்:

உதடுகளை சுற்றி உள்ள கருவளையங்களை மறைக்க மற்றொரு சிறந்த வழி, கொஞ்சம் கன்சீலரை பயன்படுத்துவதுதான். இது மிகவும் திறன் பட செயல்படுகிறது. உங்கள் சரும நிறத்துடன் பொருந்துகிறது.

மாதுளை:

மாதுளைச் சாறுகளை இரவு தூங்குவதற்கு முன்பாக உதட்டில் தடவி விட்டு படுக்க வேண்டும்.‌ இப்படி தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி உதடு விரைவில் அழகு பெறும்.

Also Read: Green Peas Benefits: மூட்டு வலி முதல் எடை குறைப்பு வரை.. சிறந்த பலனை தரும் பச்சை பட்டாணி!

எலுமிச்சைச் சாறு:

எலுமிச்சைச்சாறு அமிலப்பண்புகள் அதை ஒரு சிறந்த பிளீச்சிங் ஏஜெண்டாக மாற்றுகிறது. எனவே உதடு நிறத்தை மெருகேற்ற இதை பயன்படுத்தலாம். உதடு மற்றும் அதைச் சுற்றிலும் தொடர்ந்து எலுமிச்சைச் சாறை தடவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சள்:

மஞ்சள் மற்றும் பெசரா பிந்தியை பாலில் கலந்து மென்மையான பசை போல் ஆக்கி உதடு மற்றும் உதடுகளைச் சுற்றித் தடவினால் நாளடைவில் சருமத்தின் நிறம் மாறும். இது இப்பகுதியில் உள்ள கருப்பு நிறமிகளை நீக்குகிறது. இந்த பசையை தொடர்ந்து தடவி வந்தால் உதட்டின் கருமை படிப்படியாக குறையும்.

பன்னீர் ரோஜா மற்றும் பால்:

பன்னீர் ரோஜா இதழ்களை 20 கிராம் எடுத்து அரைத்து பசுவின் பால் ஒரு தேக்கரண்டி சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலந்து தினமும் உதடுகள் மேல் தடவி வந்தால் நாளடைவில் நல்ல நிறம் பெறும்.

பாதாம்:

உதடு அதைச் சுற்றியுள்ள கருமையான சருமத்தை ஒளிர செய்யும் திறன் பாதாமுக்கு உள்ளது. அருமையான உதடுகளிலும் உதடுகளை சுற்றிலும் பாதாம் எண்ணையை தடவினால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல 4-6 பாதாமை எடுத்து பாலில் போட்டு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். அதை காலையில் விழுது போல் அரைத்து கடுமையான உதடுகளிலும் உதடுகளை சுற்றிலும் தடவினால் நாளடைவில் மாற்றம் தெரியும்.

கற்றாழை:

கற்றாழை ஜெல்லை இரவு படுக்கும் போது தடவி இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் கருமை நீங்கி உதடு அழகு பெறும்.

பீட்ரூட்:

பீட்ரூட்டை நறுக்கி குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பின்பு அது நன்றாக குளிர்ந்த பின்னர் பீட்ரூட்டை எடுத்து உதட்டில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 10 முதல் 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

Also Read: Tamarind Benefits: ஆரோக்கிய குணங்களின் பொக்கிஷம் புளி.. இதை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா..?

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!