Piles Problem: 3 நாட்களில் பைல்ஸ் நோய் சரியாக வேண்டுமா..? இதை பின்பற்றி பாருங்க! - Tamil News | Know how to cure piles in 3 days with home remedies; health tips in tamil | TV9 Tamil

Piles Problem: 3 நாட்களில் பைல்ஸ் நோய் சரியாக வேண்டுமா..? இதை பின்பற்றி பாருங்க!

Published: 

21 Sep 2024 21:33 PM

Food for Piles: உங்களுக்கு பைல்ஸ் நோய் இருந்தால் அதிக வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மற்றும் வறுத்த உணவு பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். இதில், சேர்க்கப்படும் மசாலா அமிலத்தன்மையை அதிகரித்து வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், ரொட்டி, பிரட் போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

Piles Problem: 3 நாட்களில் பைல்ஸ் நோய் சரியாக வேண்டுமா..? இதை பின்பற்றி பாருங்க!

பைல்ஸ் பிரச்சனை (Image: Freepik)

Follow Us On

மோசமான வாழ்க்கை முறை, உணவு உண்பதில் கவனக்குறைவு, தண்ணீர் குறைவாக அருந்துதல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல் போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்களுக்கு பைல்ஸ் பிரச்சனைகளை ஏற்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்க்காமல் இருப்பதால் கழிவுகள் அதிகளவில் உடலில் தேங்கிவிடுகின்றன. இதுவே, பைல்ஸ் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்களாக மாறி விடுகிறது. பைல்ஸ் என்று சொன்னால் அசிங்கம் ஆகிவிடும் என்று பயந்து பலர் இதுகுறித்து வெளியே சொல்வது கிடையாது. இது மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

ALSO READ: Health Tips: நீங்கள் நன்றாக தூங்க வேண்டுமா..? இந்த விஷயத்தை பாலோ பண்ணாலே போதும்!

அந்தவகையில், பைல்ஸ் பிரச்சனை 3 முதல் 5 நாட்களில் குணப்படுத்த முடியும். அதற்கு வீட்டிலேயேஈதை செய்தால் போதும். பைல்ஸ் இருந்தால் பறந்தோடிவிடும். இப்படியான பைல்ஸ் பிரச்சனைகளை குணப்படுத்த இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்.

பைல்ஸை குணப்படுத்தும் வழிகள்:

எலுமிச்சை:

கொதிக்க வைத்த பால் குளிர்ந்ததும் அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து குடிப்பதன்மூலம் பைல்ஸ் பிரச்சனையை குணப்படுத்தலாம். கொதிக்க வைத்து குளிர்ந்த பால் அல்லது வெறும் பாலை எடுத்துக் கொள்ளலாம். அதன்பிறகு 1 கப் பாலில் அரை எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் உடனடியாக குடிக்கவும். இப்படி 3 முதல் 7 நாட்கள் குடித்து வந்தால் குடல் அழற்சி குணமடைந்து பைல்ஸ் பிரச்சனை குணமாகும்.

கற்றாழை சாறு:

உங்களுக்கு பைல்ஸ் பிரச்சனை இருந்தால் தினமும் கற்றாழை சாறு குடிப்பதும் நல்ல பலன்களை தரும். கற்றாழையில் உள்ள நார்ச்சத்து பைல்ஸ் பிரச்சனையை நீக்க உதவி செய்யும்.

பழங்கள்:

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள் குடல் இயக்கத்தை சீராக்கும். ஆப்பிள், திராட்சை, கொடிமுந்திரி மற்றும் ப்ளாக்பெர்ரி போன்ற பழங்களை அவற்றின் தோலுடன் சேர்த்து சாப்பிடுவது பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இந்த பழங்கள் அனைத்தும் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை, அவை ஆரோக்கியத்திற்கும் நல்லது.

வாழைப்பழம்:

வாழைப்பழம் பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வை தரும். வாழைப்பழம் ஆசனவாய் வீக்கத்தை குறைத்து, குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. வாழைப்பழத்தில் உள்ள ஆன்டிபாக்டீரியல் பைல்ஸ் சிகிச்சைக்கு சிறந்த உணவாகும்.

தண்ணீர்:

பைல்ஸ் பிரச்சனை உள்ளவர்கள் அதிக தண்ணீரை எடுத்துகொள்வது மிக முக்கியம். இது குடல் இயக்கத்தை சீராக்குவது மட்டுமின்று மூல நோயிலிருந்து விடுபட உதவுகிறது. இது மட்டுமின்றி, உடலில் உள்ள நீர்ச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் தண்ணீர் சிறந்த தீர்வை தரும். பைல்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் தினமும் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும்.

பச்சை காய்கறிகள்:

பைல்ஸ் இருப்பவர்கள் பச்சை இலைக் காய்கறிகள் சாப்பிடுவதால் செரிமானத்தை எளிதாக்கும். பைல்ஸ் நோயாளிகள் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ், கேரட், காலிஃபிளவர் மற்றும் தக்காளி போன்ற காய்கறிகளை எடுத்து கொள்ளலாம். இந்த காய்கறிகளில் உள்ள நார்ச்சத்து பைல்ஸ் பிரச்சனையை அதிகரிக்க விடாமல் தடுக்கிறது.

ALSO READ: Exclusive: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் தள்ளும் என டாக்டர் எச்சரிக்கை!

பழச்சாறு:

உடலில் நீரேற்றத்துடன் இருக்க நாள் முழுவதும் பல்வேறு வகையான பழச்சாறுகளை எடுத்துக்கொள்வது நல்லது. இவை நச்சுக்களை வெளியேற்றுவது மட்டுமின்றி, இதில் உள்ள ஆன்டி – ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தையும் வலியையும் குறைக்கும். இதன் காரணமாக, புளூபெர்ரி, ப்ளாக்பெர்ரி மற்றும் செர்ரி போன்ற பழங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் உள்ள நரம்புகளை வலுப்படுத்த உதவி செய்யும். எனவே, இந்த பழங்களில் சாறுகளை தினமும் எடுத்து கொள்ளலாம்.

என்ன உணவுகளை சாப்பிடக்கூடாது..?

உங்களுக்கு பைல்ஸ் நோய் இருந்தால் அதிக வறுத்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. எண்ணெய் மற்றும் வறுத்த உணவு பொருட்களில் நிறைய கொழுப்பு உள்ளது. இது செரிமான அமைப்பை பலவீனப்படுத்தும். இதில், சேர்க்கப்படும் மசாலா அமிலத்தன்மையை அதிகரித்து வீக்கத்தை ஏற்படுத்தும். அதேபோல், ரொட்டி, பிரட் போன்ற உணவு பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். எனவே, பைல்ஸ் நோய் உள்ளவர்கள் பெரும்பாலும் ரொட்டு போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

உடலுக்கு பல நன்மைகளை தரும் பருப்பு வகைகள்..!
தண்ணீர் உடலுக்கு ஏன் முக்கியம் தெரியுமா..?
தினசரி காலையில் பாதாம் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
தென்னிந்தியாவின் மாஸ் நடிகை தான் இந்த சிறுமி
Exit mobile version