Railway Bridges: எல்லாமே பிரம்மாண்டம்.. இந்தியாவின் பிரமிப்பூட்டும் ரயில் பாலங்கள் லிஸ்ட்! - Tamil News | know the famous railway bridges in india details in tamil | TV9 Tamil

Railway Bridges: எல்லாமே பிரம்மாண்டம்.. இந்தியாவின் பிரமிப்பூட்டும் ரயில் பாலங்கள் லிஸ்ட்!

Famous Railway Bridge: இந்திய ரயில்வே துறை பல்வேறு இடங்களை இணைக்க அதிகமான பாலங்களை இந்தியா முழுவதும் கட்டி இருக்கிறது. அசாதாரணமான இடங்களில் கூட ரயில் பாலங்களைக் கட்டி சாதனை செய்து இருக்கிறது. ரயில் பயணிகளுக்கு இந்தப் பாலங்களில் பயணம் செய்யும்போது புதுவித அனுபவத்தை இந்தியாவில் இருக்கும் புகழ் மிக்க ரயில் பாலங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.

Railway Bridges: எல்லாமே பிரம்மாண்டம்.. இந்தியாவின் பிரமிப்பூட்டும் ரயில் பாலங்கள் லிஸ்ட்!

பாம்பன் பாலம் (Photo Credit: Pinterest)

Published: 

14 Oct 2024 07:56 AM

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் இந்தியாவில் தான் உள்ளது. இந்திய ரயில்வேயின் மொத்த பாதை 68,856 கிலோ மீட்டருக்கு மேல் உள்ளது. மேலும் ரயில் பாதையின் நீளம் 1,26,366 கிலோமீட்டர் ஆகும். ஒரே நிர்வாகத்திற்கு கீழ் இயக்கப்படும் உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கின்ற கின்னஸ் உலக சாதனையை இது பெற்றுள்ளது. இந்தியாவில் பல ரயில்வே பாலங்கள் கடல், ஆறு, ஏரி, பாலைவனம் போன்றவற்றை கடந்து செல்கிறது. இது ரயில் பயணிகளை மிகவும் வியப்படையச் செய்கிறது. இதில் சில ரயில் பாலங்கள் மிக முக்கியமானதாகவும் புகழ்மிக்கதாகவும் இருக்கிறது. அவை என்னென்ன பாலங்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.

பாம்பன் பாலம்:

சுமார் 2.3 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலம் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கடல் பாலம் ஆகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த பாலம் இராமேஸ்வர தீவையும் இராமநாதபுரம் நிலப்பரப்பையும் இணைக்கிறது. 1914 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் நூற்றாண்டுகளைக் கடந்து இராமநாதபுரத்தின் அடையாளமாக மாறி இருக்கிறது.

பெரிய கப்பல்கள் செல்வதற்கு ஏதுவாக இந்த பாலம் கத்திரிக்கோல் வடிவில் ‌தூக்கும் காட்சி சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வந்தது. 2022 ஆம் ஆண்டு இந்தப் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் அருகே புதிய பாம்பன் பாலம் கட்டப்பட்டு திறக்கும் தருவாயில் இருக்கிறது.

இந்தியாவில் முதல் தூக்கு ரயில் பாலம் என்ற பெருமையை இந்த புதிய பாலம் பெற்றிருக்கிறது.

வேம்பநாடு ரயில் பாலம்:

வேம்பநாட்டு ஏரியின் மீது கட்டப்பட்ட இந்த பாலம் சுமார் 4.62 கிலோமீட்டர் நீளமுள்ளது. இந்தப் பாலம் கட்டப்படுகையில் இந்தியாவின் மிக நீளமான பாலமாக இருந்தது. இந்த இந்தப் பாலமானது கேரள மாநிலத்தின் கொச்சியில் உள்ள எடப்பள்ளி மற்றும் வல்லார் பாதம் ஆகிய இடங்களை இணைக்கிறது.

இது தற்பொழுது இந்தியாவின் நீளமான ரயில் பாலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Also Read: UNESCO: தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய சின்னங்கள்… யுனெஸ்கோ அறிவித்த இடங்கள்!

செனாப் ரயில்வே பாலம்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்த பாலம் செனாப் நதியின் மீது கட்டப்பட்ட இருப்புப் பாதை பாலம் ஆகும். ஆற்று படுக்கையில் இருந்து 1,056 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாலம் உலகிலேயே மிக உயரமான வளைவு ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.‌

17 வளைவுகளுடன் 1315 மீட்டர் இருக்கும் இந்த பாலம் கடந்த 2010 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.‌ இது காஷ்மீரை மற்ற மாவட்டங்களுடன் இணைக்கிறது.

ஜுவாரி பாலம்:

வடக்கு கோவா மற்றும் தெற்கு கோவாவிற்கு இடையே அமைந்துள்ள இந்த ஜுவாரி பாலம் கொங்கன் ரயில்வே பாலம் என்று அழைக்கப்படுகிறது. ஜுவாரி ஆற்றுக்கு மேல் கட்டப்பட்டிருக்கும் இந்த பாலம் சுமார் 4,019 அடி நீளம் உள்ளது. இந்தப் பாலம் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

ஜூபிலி பாலம்:

மேற்குவங்க மாநிலத்தில் அமைந்திருக்கும் இந்த ஜூபிலி பாலம் ஹூக்ளி ஆற்றில் மீது கட்டப்பட்டிருக்கிறது. நைஹாட்டி மற்றும் பந்தல் இடையே இருக்கும் இந்த பாலம் கரிஃபா ரயில் நிலையம் மற்றும் ஹூக்ளி காட் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய இணைப்பாக இருக்கிறது.

இந்தப் பாலம் விக்டோரியா மகாராணியின் பொன் ஆண்டு விழாவின்போது 1885 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்தப் பாலம் சுமார் 129 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்து வந்தது. அதன் பிறகு புதிய ஜூப்லி பாலம் 2016ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.‌

ஷராவதி‌ பாலம்:

இந்தப் பாலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹொன்னவரில் அமைந்துள்ளது. 2,060 நீளம் கொண்டு இந்த பாலம் பாலம் ஷராவதி‌ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. 1994 இல் திறக்கப்பட்ட இந்த பாலம் தேசிய  விருதுகளுக்கான போட்டியில் சிறந்த பாலம் ‌ என இரண்டாம் பரிசு பெற்றது.‌

போகி பீல் பாலம்:

அசாம் மாநிலம் டிப்ருகட் மாவட்டத்தில் உள்ள இந்த பாலம் 2018 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. 4.94 கி.மீ நீளமுள்ள இந்த பாலம் பிரம்மபுத்திரா ஆற்றில் மேல் கட்டப்பட்டிருக்கிறது.

இந்தப் பாலம் அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் இரு மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.‌ இது சாலை மற்றும் ரயில் போக்குவரத்து ஒன்றாக இருக்கும் பாலங்களில் மிகப்பெரியதாகும்.

Also Read: செங்கல்பட்டு சுற்றுவட்டார மினி டூர்.. இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?