5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

AC Side Effects: ஏசி இல்லாமல் இருக்க முடியலையா..? இந்த பிரச்சனைகளை அன்போடு அழைக்கிறீர்கள்!

Health Tips: உங்கள் உடலில் உள்ள தோல், முடி, மூக்கு மற்றும் தொண்டை போன்ற உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி காற்று உறிஞ்சி விடுகிறது. இது எதிர்காலத்தில் உங்களை பிரச்சனையை ஏற்படுத்த தொடங்கிவிடுகிறது. அந்தவகையில், நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

AC Side Effects: ஏசி இல்லாமல் இருக்க முடியலையா..? இந்த பிரச்சனைகளை அன்போடு அழைக்கிறீர்கள்!
ஏசி (Image: GETTY)
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 06 Oct 2024 11:55 AM

ஏசி இல்லாமல் உங்களால் இருக்க முடியாது என்றால், சீக்கிரம் ஏசி இல்லாமல் இருந்து பழகி கொள்வது நல்லது. கோடை காலத்தில் வேறு வழியின்றி வெப்பத்தின் தாக்கத்தால் ஏசியை அதிகளவில் பயன்படுத்துகிறோம். இப்போது அக்டோபர் மாதம் வந்தால் கூட இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெப்ப நிலை அதிகமாகவே உள்ளது. இந்த மாதமும் மக்கள் அதிகளவில் ஏசியை பயன்படுத்துகின்றனர். வெப்பத்தில் இருந்து உங்களுக்கு ஏழி குளிர்ச்சியை தந்தாலும், அந்த காற்று உங்களுக்கு பல வகையில் தீங்கை தரும்.

உங்கள் உடலில் உள்ள தோல், முடி, மூக்கு மற்றும் தொண்டை போன்ற உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இருக்கும் ஈரப்பதத்தை ஏசி காற்று உறிஞ்சி விடுகிறது. இது எதிர்காலத்தில் உங்களை பிரச்சனையை ஏற்படுத்த தொடங்கிவிடுகிறது. அந்தவகையில், நீண்ட நேரம் ஏசியில் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: IND vs BAN 1st T20 Match Preview: இந்தியா – வங்கதேசம் இடையேயான முதல் டி20 போட்டி.. இன்று மழையால் போட்டி பாதிப்பா..?

நீண்ட நேரம் இருப்பதால் உடலுக்கு ஏற்படும் தீமைகள்:

நீரிழப்பு:

ஏசியில் அதிக நேரம் இருக்கும்போது உடலில் இருக்கும் நீர் மற்றும் ஈரப்பதத்தை குறைக்கிறது. இதன் காரணமாகவே தோல், முடி, மூக்கு, தொண்டை மற்றும் வாய் பகுதிகளில் இருக்கும் தண்ணீர் வறண்டு போய்விடுகிறது. இந்த நீர் வறட்சி உங்களுக்கு சளி போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இது நாளடைவில் மூளை சவ்வை பாதிக்க தொடங்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறையும்:

அதிக நேரம் ஏசியில் இருக்கும்போது உங்கள் உடல் இயற்கையாகவே எந்தவொரு பாக்டீரியா அல்லது வைரஸையும் எதிர்த்து போராடும் திறனை இழக்க செய்கிறது. இதன் காரணமாக, நீங்கள் அடிக்கடி சளி, இருமல், தலைவலி போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுவீர்கள். மேலும், ஏசி காற்று நோய் எதிர்ப்பு சக்தியையும் உங்கள் உடலில் பலவீனப்படுத்துகிறது.

மூச்சு விடுவதில் சிரமம்:

ஏசி காற்று உடலுக்கு குளிர்ச்சியை தருவது உண்மைதான். ஆனால், அதன் காற்று உங்களுக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். ஏசி காற்று உங்கள் உடலில் ஆக்ஸிஜன் குழாயில் வறட்சியை ஏற்படுத்துகிறது. மேலும், இது மூக்கிலும் வறட்சியையும் ஏற்படுத்துகிறது. இத்தகைய சூழ்நிலையில், இது உங்களுக்கு விரைவில் சுவாசிப்பதில் சிரமத்தை உண்டு செய்யும்.

கண்களில் வறட்சி:

ஏசி காற்று கண்களில் ஈரப்பதத்தை அதிகளவில் உறிஞ்சுகிறது. இது நாளடைவில் கண்களில் பல வகையான பிரச்சனைகளை உண்டு செய்யும். இது உங்களுக்கு கண்களில் அரிப்பு, எரிச்சல், மங்கலான பார்வை, கண் வலி, கண் சிவத்தல், கண் தொற்று போன்றவைகளையும் ஏற்படுத்தும்.

மூட்டு மற்றும் எலும்புகளில் வலி:

உடலில் எலும்புகள் மற்றும் தசைகளை ஏசி காற்று சேதத்தை ஏற்படுத்தும். மேலும், இந்த ஏசி காற்று மூட்டு வலி உள்ளவர்களுக்கு பிரச்சனையை அதிகரிக்கும். ஏசி காற்றானது உடலில் இரத்த ஓட்டத்தை குறைத்து, எலும்புகளில் வறட்சியை உண்டாக்குகிறது. இது எலும்புகளில் வலியை ஏற்படுத்தும்.

எண்ணெய் சுரப்பியில் பாதிப்பு:

ஏசி காற்றினால் உடலின் இயற்கையாக சுரக்கும் எண்ணெய் குறையத் தொடங்குகிறது. இதன் காரணமாக, உடலில் வியர்வை குறைய தொடங்கி, தோல் செல்கள் சேதமடையத் தொடங்குகின்றன. வறண்ட சருமம் அரிக்கும் தோலழற்சி அல்லது சொரியாசிஸ் போன்ற பல வகையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏசி காற்று சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் வயதான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே, நீங்கள் ஏசியில் இருக்கும்போது உங்கள் தோல் உடனே வறண்டு விடுகிறது.

ALSO READ: Exclusive: மழைக்காலத்தில் ஆஸ்துமா இவ்வளவு ஆபத்தானதா..? ஹோமியோபதி டாக்டர் ரெஹானா விளக்கம்!

ஒவ்வாமை:

ஏசி வீட்டிற்குள் இருக்கும் தூசி, மண் மற்றும் மாசு துகள்கள் வீட்டிற்குள் சுழல செய்கிறது. இவை காற்றில் பரவி உங்கள் தோல்களில் படிவதுடன் மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது. இது உங்கள் உடலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது தவிர, ஏசி காற்றில் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் உள்ளன. இவை தொற்றுநோயை ஏற்படுத்தும்.

முடி வறட்சி:

ஏசி காற்றில் முடியில் வறட்சியை ஏற்படுத்தி, உச்சந்தலையை பலவீனப்படுத்துகிறது, இது முடி உதிர்தல் மற்றும் பொடுகு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், ஏசி காற்று முடியில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, முடி வளரும் துளைகளை அடைக்க தொடங்குகிறது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News