5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Know Yourself: உங்கள் பெயர் “B”-ல் ஆரம்பிக்கிறதா? – நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா?

Astrology: பொதுவாக B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்ட நபர்கள் சாகச உணர்வு மற்றும் புதிய அனுபவங்களை பெறுவதில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள்.இத்தகைய நபர்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகம் விரும்புவார்கள். இந்த பண்பு மற்றவர்களிடத்தில் நற்பெயரை பெற்றுக் கொடுக்கிறது.

Know Yourself: உங்கள் பெயர் “B”-ல் ஆரம்பிக்கிறதா? – நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா?
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Updated On: 26 Jul 2024 17:47 PM

எழுத்து ராசி: ஒவ்வொரு பெயரின் முதல் எழுத்துக்கும்  ஒவ்வொரு விதமான பலன்கள் ஜாதகத்தில் கணிக்கப்பட்டுள்ளது. அது ஆங்கிலமாக இருந்தாலும் சரி. தமிழ் எழுத்துகளாக இருந்தாலும் சரி, இத்தகைய பலன்கள் நம் தலையெழுத்தை எழுதக்கூடிய ஒன்றாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் B என்ற ஆங்கில எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்டவர்கள் வாழ்க்கையில் எத்தகைய குணங்களை பெற்றிருப்பார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. பொதுவாக B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்ட நபர்கள் சாகச உணர்வு மற்றும் புதிய அனுபவங்களை பெறுவதில் அதிக விருப்பம் கொண்டிருப்பார்கள்.இத்தகைய நபர்கள் மற்றவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அதிகம் விரும்புவார்கள். இந்த பண்பு மற்றவர்களிடத்தில் நற்பெயரை பெற்றுக் கொடுக்கிறது.

எதற்கும் பயப்பட மாட்டார்கள்

புதிதாக முயற்சி,உற்சாகம் நிறைந்த பயணங்கள் என பல்வேறு வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். வாழ்க்கையில் தைரியமான மற்றும் அச்சமற்ற அணுகுமுறையைக் கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.எதற்கும் பயப்பட மாட்டார்கள்.மேலும் இவர்கள் ஒரு விஷயத்தில் மிகவும் ஆக்கப்பூர்வமானவர்களாகவும் கற்பனைத் திறன் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இசை, எழுதுதல், ஓவியம் அல்லது பிற படைப்புகளுக்கான திறமைகளை இயற்கையாகவே பெற்றிருப்பார்கள்.

B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் கொண்ட நபர்கள், மிகவும் திறமையான சிந்தனையாளர்களாக இருப்பார்கள். சிக்கலான சிக்கல்களைத் தீர்ப்பதில் வல்லவர்கள். அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளை தேர்வு செய்து படிப்பார்கள்.

விஸ்வாசம் மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு

B என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் மிகவும் ஆழமான தொடர்பு வைத்திருக்க விரும்புவார்கள்.  இந்த நபர்கள் ஒவ்வொரு உறவுகளின் மீதும் அதிக மதிப்பை வைத்திருக்கிறார்கள். மேலும் தன் மீது அக்கறை கொண்டவர்களுக்கு அதிகளவில் வாழ்க்கையில் இடம் கொடுப்பார்கள். அவர்களுக்காக எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் வாழ்க்கையில் பயணம் செய்ய தயாராயிருப்பார்கள்.

அன்பாகவும் நட்பாகவும் இருக்கும் அதே சமயத்தில் இளகிய மனப்பான்மை கொண்டவர்களாகவும் திகழ்கிறார்கள்.  ஆளுமை கொண்ட இவர்கள்.  மற்றவர்களின் தேவைகளுக்காக பயன்பட்டாலும் இந்த நபர்களின் விஸ்வாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை மிகப்பெரிய குணங்களில் ஒன்றாக உள்ளது.  குடும்பம், நண்பர்கள் அல்லது காதல் இணை என யாராக  இருந்தாலும் சரி, தங்கள் உறவுகளில் மிகவும் உறுதியாக இருப்பார்கள்.

அதேசமயம் இந்த எழுத்தில் தொடங்கும் பெயர்களை கொண்ட நபர்கள் பிடிவாதம் மற்றும் வளைந்துகொடுக்காத தன்மை ஆகிய பண்பை கொண்டிருப்பார்கள். மேலும் எந்த விஷயத்திலும் அவர்கள் எப்போதும் சமரசம் செய்யவோ அல்லது தங்கள் மனதை மாற்றவோ தயாராக இருக்க மாட்டார்கள். ஆனால் சில நேரங்களில் சில விஷயங்களை முழுமையாக சிந்திக்காமல் அவசர முடிவுகளை எடுத்தும் பிரச்னையில் சிக்குவார்கள்.

(Disclaimer : இந்தக் கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி பொதுவான கருத்துக்களை கொண்டு மட்டுமே எழுதப்பட்டது. எந்த ஒரு அறிவியல் ஆதாரமும் விளக்கமும் இதற்கு இல்லை)

Latest News