Know Yourself: உங்கள் பெயர் D ல் ஆரம்பிக்கிறதா? நிச்சயம் இப்படி பட்டவர்களாகதான் இருப்பீர்கள்..!
D Letter: D என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைதியையும் பாதுகாப்பையும் அதிகம் விரும்புபவர்கள். இதற்காக இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை இலக்குகளை நோக்கி மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையை பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது எப்படி என்று தெரியும்.
எழுத்து ராசி: உங்கள் பெயரின் முதல் எழுத்து உங்கள் குணாதிசயங்களை சொல்லும். ஜோதிட ரீதியாக, உங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை கணிக்கும் சக்தி கொண்டது. உங்கள் பெயரின் முதல் எழுத்தின் அடிப்படையிலான விரிவான ஆளுமை கணிப்பு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். D என்ற எழுத்து சுதந்திரம், தன்னம்பிக்கை, சிந்தனை, நம்பகத்தன்மை ஆகியவை கொண்டிருக்கும். இந்த நபர்கள் அதிக தன்னம்பிக்கை கொண்டவர்களாக இருக்கலாம். இந்தநிலையில், உங்கள் பெயர் D என்று தொடங்கினால், நீங்கள் வைத்திருக்கும் சக்தியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
D என்ற எழுத்தில் தொடங்கும் பெயரைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் அமைதியையும் பாதுகாப்பையும் அதிகம் விரும்புபவர்கள். இதற்காக இவர்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை இலக்குகளை நோக்கி மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையை பற்றி முன்கூட்டியே திட்டமிடுவது எப்படி என்று தெரியும்.
எண் கணிதத்தின் படி, D எழுத்து நான்காவதாக வருகிறது. இதனால் இவர்களுக்கு பக்தி, விசுவாசம் மற்றும் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும்.
அனுதாபம்:
D என்ற எழுத்தின் தொடங்கும் பெயர்களை உடையவர்கள் இயல்பிலேயே அனுதாபம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஒருவரின் பிரச்சனைகள் பற்றி தெரிந்தால், அவர்களுக்கு எந்த பலனையும் எதிர்பார்க்காமல் உதவ முயற்சி செய்வீர்கள். இதன் காரணமாக, இந்த பண்பு கொண்டவர்களை மக்கள் தங்கள் தேவைக்காக பயன்படுத்தி கொள்கிறார்கள்.
கடின உழைப்பாளி:
D என்ற எழுத்தில் தொடங்கும் பெயரை கொண்டவர்கள் தங்கள் இலக்குகளை முடிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள். மிகவும் கடின உழைப்பாளி என்பதால், வெற்றி D என்ற எழுத்தில் தொடங்குபவர்களுக்கு மிகவும் எளிதாக கிடைக்கும்.
நேர்மையானவர்கள்:
D என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் கொண்டவர்கள் நிறைய பேருக்கு பிடிப்பதற்கு, அவர்களின் அடக்கமும், நேர்மையும் ஒரு காரணம். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பீர்கள். யாரோ ஒருவர் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டால், அவர்களை உற்சாகப்படுத்த தங்களால் இயன்றவரை முயற்சி செய்வார்கள். தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையையும், வேலை விஷயத்தையும் தனித்தனியே பிரித்து பார்க்க தெரிந்தவர்கள்.
ALSO READ: Relationship Tips: நீங்கள் விரும்பும் பெண் உங்களை விரும்புகிறாரா இல்லையா..? இப்படி தெரிஞ்சுகோங்க..!
D என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் பெரும்பாலும் லட்சியவாதிகளாக இருப்பார்கள். லட்சியம் மட்டுமல்ல, அவர்களுக்கு போட்டி போட்டு வெற்றிபெறவும் அதிகமாக போராடுவார்கள். ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். இருப்பினும், வெற்றியின் தேவை மற்றும் வெற்றிபெற வேண்டிய அவசியம் அவர்களுக்குள் ஆழமாக பதிந்திருக்கும். ஆரம்ப வருடங்கள் போராட்டத்தால் நிரம்பியிருக்கலாம், ஆனால் இறுதியில் அவர்களின் கடின உழைப்பு மற்றும் கவனத்தின் காரணமாக அவை வெற்றிகரமானவர்களாக இருப்பார்கள்.
D என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் கொண்டவர்கள் யாரையாவது காதலிக்கிறார்கள் என்பது உறுதியான பிறகு, அவர்கள் அந்த உறவை எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.