Know Yourself: உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘C’ – யா..? நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்!

Name Starts With C: C யில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் படைப்பாற்றல், விசுவாசம், பகுப்பாய்வு மற்றும் எப்போதாவது பிடிவாதமாக இருக்கலாம். மற்றவர்களைப் போலவே அவர்கள் தங்கள் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தக்கட்ட திட்டத்தை திட்டமிட்டு எளிதாக கடந்து செல்வார்கள். மேலும், C என்ற எழுத்து கொண்டவர்கள் பொதுவாக அனைவராலும் மிகவும் விரும்பப்படுபவர்களாகவும், மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள்.

Know Yourself: உங்கள் பெயரின் முதல் எழுத்து C - யா..? நீங்கள் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள்!

கோப்பு புகைப்படம்

Published: 

10 Aug 2024 15:26 PM

எழுத்து ராசி: இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு குழந்தை பிறந்தவுடன் பெயர் சூட்டுவது வழக்கம். அதன்படி குடும்ப உறுப்பினர்கள் பிறந்த தேதி மற்றும் பிறந்த நேரத்தை பொறுத்து குழந்தையின் பெயரின்முதல் எழுத்தை தீர்மானிக்கின்றன. இதன்மூலம், முதல் எழுத்துக்கும் அவர்கள் வாழும் வாழ்விற்கு சம்பந்தம் இருக்கும் என பெற்றோர்கள் நினைக்கின்றன. முதல் எழுத்திற்கு அடுத்த இரண்டு எழுத்தில் இருந்து பெயரின் உச்சரிப்பு தொடங்குவதால், இது மற்றவர்களை ஆளுமை செய்யக்கூடிய திறமையை கொண்டிருக்கும். ‘C’ என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்கள் சில தனித்துவ பண்புகளை பெற்றவராக இருப்பர். அந்த வகையில் உங்களின் பெயர் ‘C’ என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் எப்படிப்பட்ட குணாதியங்களை கொண்டிருப்பவர்கள் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Know Yourself: உங்கள் பெயர் “B”-ல் ஆரம்பிக்கிறதா? – நீங்க எப்படிப்பட்டவர் தெரியுமா?

‘C’ என்ற எழுத்து:

எழுத்துக்களின் வரிசையில், ‘C’ எழுத்து மூன்றாவதாக வருகிறது. எனவே இது எண் 2 க்கு அருகில் இருக்கும்போது பலம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே, C என்ற எழுத்து கொண்டவர்கள் எப்போதும் வெற்றி பெற வேண்டும் என்ற உள்ளார்ந்த ஆசை கொண்டவர்களாக இருப்பார்கள். பெயர்கள் C இல் தொடங்கும் நபர்களும் மிகவும் படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருக்கலாம் . C என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்கள் கலை மற்றும் புதுமையை அதிகம் விரும்புபவர்களாக இருக்கலாம். இதன் காரணமாக, இவர்களுக்கு இசை, எழுதுதல், ஓவியம் அல்லது பிற படைப்புகள் இயல்பான திறமையாக வெளிப்படும். மேலும், அதிக கற்பனைத்திறன் உடையவர்களாகவும், அதிக சிந்திக்கும் திறன் கொண்டவர்களாகவும் இருக்கலாம்.

படைப்பாற்றல்:

C யில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்கள் படைப்பாற்றல், விசுவாசம், பகுப்பாய்வு மற்றும் எப்போதாவது பிடிவாதமாக இருக்கலாம். மற்றவர்களைப் போலவே அவர்கள் தங்கள் குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், அடுத்தக்கட்ட திட்டத்தை திட்டமிட்டு எளிதாக கடந்து செல்வார்கள். மேலும், C என்ற எழுத்து கொண்டவர்கள் பொதுவாக அனைவராலும் மிகவும் விரும்பப்படுபவர்களாகவும், மதிக்கப்படுபவர்களாகவும் இருப்பார்கள். இயற்கையான வசீகரத்தையும் கவர்ச்சியையும் கொண்டு அனைவரிடம் எளிதாக பழகி அன்பை பெறுவார்கள். இதன் காரணமாக, தேவைப்படும்போது அவர்களுக்கு உதவவும், தனக்கு உதவி தேவைப்படும்போது பெற்றுக்கொள்ளவும் தயங்கமாட்டீர்கள்.

சிக்கலை எளிதாக முடிப்பீர்கள்:

C என்ற எழுத்தில் தொடங்கும் நபர்கள் மிகவும் துல்லியமாக யோசிக்கும் திறனை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன்மூலம், எவ்வளவு பெரிய சிக்கல்களையும் எளிதில் சரியாக்கி தீர்வை கொண்டு வருவீர்கள். அதனால்தான் என்னவோ C என்ற எழுத்து தொடங்குபவர்கள் அறிவியல், பொறியியல் மற்றும் கணிதம் போன்ற துறைகளில் அதிகமாக காணப்படுவார்கள்.

அன்பு:

உங்கள் பெயர் C யில் தொடங்கினால் இரக்கத்தின் மறுவடிவமாக இருப்பீர்கள். இதனால், கஷ்டப்படுபவர்களுக்கு ஆறுதல் மற்றும் ஆதரவை வழங்குவதில் திறமையானவர்களாக இருப்பீர்கள். விசுவாசம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் வலுவான உணர்வுக்காகவும் நீங்கள் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். அக்கறையுள்ள நபர்களுக்கு ஆதரவளிக்க நீங்கள், எந்த எல்லைக்கு செல்ல தயாராக இருப்பீர்கள்.

ALSO READ: Know Yourself: உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்குகிறதா? – கட்டாயம் இதை படிங்க!

பிடிவாதம்:

பெயர்கள் C இல் தொடங்கும் நபர்களும் பிடிவாதம் மற்றும் வளைந்துகொடுக்காத தன்மையைக் கொண்டிருக்கலாம். உங்களுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால், அந்த வழியில் எப்போதும் நடக்க மாட்டீர்கள். இதன் காரணமாகவே, நீங்கள் புதிய சூழ்நிலைகள் அல்லது யோசனைகளுக்கு ஏற்ப பழகிக்கொள்ள நேரம் எடுத்து கொள்வீர்கள்.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?