5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Workout Mistakes: உடற்பயிற்சி செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. ரொம்ப ஆபத்து..!

Mistakes during Exercise: உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்கிறார்கள். அது உடலை வலிமையாக்குவதற்குப் பதிலாக, பிரச்சனைகளில் கொண்டு வந்து விடுகிறது. உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய விஷயங்கள் தொடர்பான சிறிய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதும் முக்கியம். இதையடுத்து இந்த கட்டுரையில் உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் செய்ய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Workout Mistakes: உடற்பயிற்சி செய்யும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க.. ரொம்ப ஆபத்து..!
கோப்பு புகைப்படம்
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 27 Jul 2024 12:16 PM

உடற்பயிற்சி: இன்றைய வாழ்க்கை முறையில் உடலை பராமரித்து கொள்வதில் மக்கள் அதிக கவனம் எடுத்து கொள்கின்றனர். இதற்காக சிலர் யோகா, ஜிம், ஃபிட்னெஸ் ட்ரைனிங் சென்டர் உள்ளிட்ட பல இடங்களுக்கு சென்று உடலை கட்டுக்கோப்புடன் வைத்து கொள்கின்றன. உடற்பயிற்சி தினசரி செய்வதன் மூலம், இது உங்களை மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். காலை அல்லது மாலை வேளைகளில் நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது, உங்களது உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வியர்வையாக வெளியேறும். இதனால் நீங்கள் புத்துணர்ச்சியுடன் காட்சியளிப்பீர்கள். உடற்பயிற்சி செய்வதற்கு முன் சில தெரிந்தோ தெரியாமலோ சில தவறுகளை செய்கிறார்கள். அது உடலை வலிமையாக்குவதற்குப் பதிலாக, பிரச்சனைகளில் கொண்டு வந்து விடுகிறது. உடற்பயிற்சி செய்வது எவ்வளவு முக்கியமோ, உடற்பயிற்சிக்கு முந்தைய மற்றும் பிந்தைய விஷயங்கள் தொடர்பான சிறிய விஷயங்களை மனதில் வைத்துக் கொள்வதும் முக்கியம். இதையடுத்து இந்த கட்டுரையில் உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் செய்ய மற்றும் செய்ய கூடாத விஷயங்கள் பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

Also read: Health Tips: சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் இவ்வளவு ஆபத்தா..? அப்போ! எப்போது குடிக்க வேண்டும்..?

உடற்பயிற்சிக்கு முன் வார்ம் அப்:

நீங்கள் தினசரி உடற்பயிற்சி செய்வதற்கு முன், வார்ம் அப் செய்வது மிகவும் முக்கியம். நீங்கள் தசைகள் உடற்பயிற்சிக்கு பக்குவம் ஆகவில்ல என்றால், உடற்பயிற்சியின்போது காயம், பிடிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், தசைகளில் வீக்கம் மற்றும் வலி ஏற்படும்.

தேவையான அளவு தண்ணீர்:

உடற்பயிற்சிக்கு முன்னும், பின்னும் உங்களது உடலுக்கு தண்ணீர் என்பது மிகவும் முக்கியம். ஆனால், அந்த தண்ணீரை எப்போது எடுத்துகொள்ள வேண்டும் என்பதில்தான் கவனம் தேவை. உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் அல்லது உடற்பயிற்சி செய்த பிறகும் உடனடியாக தண்ணீர் குடிக்காதீர்கள். குறைந்தபட்சம் 20 முதல் 24 நிமிடங்களுக்கு முன்பு தண்ணீர் அல்லது ஏதேனும் பானத்தை எடுத்து கொள்ளலாம். இது தவிரம் உடற்பயிற்சியின்போது தண்ணீர் உங்களுக்கு உடனடியாக தேவைப்பட்டால், முதலில் உட்கார்ந்து நீண்ட மூச்சு எடுத்து, பிறகு ரிலாக்ஸ் செய்து, சிப் பை சிப் தண்ணீர் குடிக்கவும். கடக்கு முடக்கு என்று முழுவதுமாக குடிக்க கூடாது.

உணவிலும் கவனம் தேவை:

நீங்கள் உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்றால், சாப்பிடுவதற்கும் உடற்பயிற்சிக்கும் இடையில் குறைந்தது ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும். உடற்பயிற்சிக்கு முன் வயிறு முட்டும் அளவிற்கு உணவும் எடுத்து கொள்ளக்கூடாது. இல்லையெனில், உடற்பயிற்சியின்போது குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படும்

கடினமான உடற்பயிற்சி:

அதிகபடியான உற்சாகம் அல்லது சோகத்தின்போது, மக்கள் கடுமையாக உடற்பயிற்சி மேற்கொள்வார்கள். இதுவும் உங்களது ஆரோக்கியத்தை கெடுக்கும். இதனால், உடம்பில் வலி ஏற்பட்டு தூக்கம், சோர்வுடன் தசை வலியையும் கொடுக்கும்.

Also read: Men Health Tips: பாலியல் விஷயத்தில் ஆர்வம் குறைகிறதா..? ஆண்களே! தினசரி இதை சாப்பிட்டால் மஜாதான்!

சரியான தூக்கம் தேவை:

குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்கிய பின், உங்களது உடற்பயிற்சிக்கான நேரத்தை ஒதுங்குங்கள். அப்படி இல்லையென்றால், உடற்பயிற்சியின்போது தலை சுற்றுதல், மயக்கம் போன்ற பிரச்சனைகளை தரும். எந்த வயதினராக இருந்தாலும், ஒவ்வொரு நபரும் குறைந்தது 8 மணிநேரம் தூங்குவது மிகவும் முக்கியம்.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

Latest News