Food Recipes: சாப்பிட ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

Guava Chutney: ஒருமுறை இந்த கொய்யா சட்னியை நீங்கள் ருசித்தால், மீண்டும் சாப்பிட தூண்டும். கொய்யாவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உண்மையில், கொய்யாவை கொண்டு சட்னி செய்யும் முறை வெகு சிலருக்கே தெரியும். இந்த சட்னியை நீங்கள் சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி உள்ளிட்டவைகள் வைத்து தாராளமாக சாப்பிடலாம். இந்தநிலையில், கொய்யாவை கொண்டு சட்னி எப்படி செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.

Food Recipes: சாப்பிட ஆசையை தூண்டும் கொய்யா சட்னி.. இப்படி செய்து ருசித்து பாருங்க..!

கொய்யா சட்னி (Image: freepik)

Updated On: 

11 Oct 2024 17:54 PM

பச்சை கொத்தமல்லி, புதினா, தக்காளி, மாம்பழம், சுரைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட சட்னிகளை சாப்பிட்டு இருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டு இருப்பீர்கள். அந்தவகையில், கொய்யா சட்னி பற்றி கேள்வி பட்டு இருக்கிறீர்களா..? ஒருமுறை இந்த கொய்யா சட்னியை நீங்கள் ருசித்தால், மீண்டும் சாப்பிட தூண்டும். கொய்யாவை உட்கொள்வது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். உண்மையில், கொய்யாவை கொண்டு சட்னி செய்யும் முறை வெகு சிலருக்கே தெரியும். இந்த சட்னியை நீங்கள் சாதம், தோசை, இட்லி மற்றும் சப்பாத்தி உள்ளிட்டவைகள் வைத்து தாராளமாக சாப்பிடலாம். இந்தநிலையில், கொய்யாவை கொண்டு சட்னி எப்படி செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.

ALSO READ: Quick Chicken Recipes: வீட்டிலேயே கேஎப்சி, சிக்கன் நக்கட்ஸ் செய்வது எப்படி? எளிதான செய்முறை இதோ!

கொய்யா சட்னிக்கு தேவையான பொருட்கள்:

2-3 நடுத்தர அளவிலான கொய்யா
1-2 பச்சை மிளகாய்
6-7 கருப்பு மிளகுத்தூள்
1 அங்குல துண்டு இஞ்சி
1 டீஸ்பூன் வறுத்த சீரகம்
அரை கப் நறுக்கிய கொத்தமல்லி
1 எலுமிச்சை
அரை ஸ்பூன் கருப்பு மிளகு
சுவைக்கு ஏற்ப உப்பு

கொய்யா சட்னி செய்முறை:

  • கொய்யா சட்னி செய்ய முதலில் கொய்யாவை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • இப்போது கொய்யாவை பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும். கொய்யாவில் அதிக விதைகள் இருந்தால் நீக்கி கொள்ளவும்.
  • அதேபோல், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சுத்தம் செய்து பெரிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  • இப்போது கொய்யா, பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கருப்பு மிளகு, எலுமிச்சை சாறு, பச்சை கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்து கொள்ளவும்.
  • தொடர்ந்து, ஒரு கடாயை எடுத்து கொண்டு அதில் சிறிதளவு எண்ணெய், கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்தபின், ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்திருந்த சட்னி மீது போடவும்.
  • நன்றாக கலக்கியபின் இப்போது இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கலந்த கொய்யா சட்னி தயார்.

சுவையான கொய்யா அல்வா செய்வது எப்படி..?

கொய்யா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

கொய்யாப்பழம் – 5
ஒரு கப் சர்க்கரை
அரை கப் நெய்
முந்திரி பருப்பு
பாதாம்
அரை லிட்டர் பால்
அரை ஸ்பூன் ஏலக்காய்
புட் கலர்

ALSO READ: Food Recipes: பெங்காலி ஸ்டைலில் பெப்பர் சிக்கன்.. சுருக்கென்று சூப்பர் சண்டே ஸ்பெஷல் ரெசிபி!

கொய்யா அல்வா செய்முறை:

  • ஒரு பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும். அது நன்கு சூடாகும் சுண்டும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்
  • இப்போது கொய்யாவை பெரிய துண்டுகளாக வெட்டி கொள்ளவும். கேஸை ஆன் செய்து அதில் ஒரு குக்கரை வைக்கவும்.
  • குக்கர் சிறிது சூடானதும் வெட்டப்பட்ட கொய்யாவை அதில் வைத்து அரை கப் தண்ணீர் வைத்து வேகவைக்கவும்.
  • குக்கரில் விசில் வந்ததும், கேஸை ஆப் செய்து, கொய்யா எடுத்து சிறிது ஆற விடவும். பிறகு, அந்த கொய்யாவை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைக்கவும். அந்த பேஸ்டை வடிகட்டி, விதைகளை அகற்றி கொள்ளவும்.
  • அதன்பின் பாதாம், முந்திரியை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்போது ஒரு பாத்திரத்தில் 2-3 ஸ்பூன் நெய்யை ஊற்றவும்.
  • அதில் பொடி பொடியாக நறுக்கிய பாதாம், முந்திரி சேர்த்து லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும். பிறகு அதே பாத்திரத்தில் அரைத்து வைத்திருந்த கொய்யா பேஸ்டை சேர்த்து கொள்ளவும்.
  • நன்றாக 4 முதல் 5 நிமிடங்கள் கிளறியபின் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை நன்கு கரையும் வரை தொடர்ந்து கிளறி கொண்டே இருக்கவும். அதில் தேவையான அளவு பால் ஊற்றவும்.
  • தொடர்ந்து கிளறியபின் கெட்டியாக வேண்டுமென்றால் சிறிய பவுலில் மைதாவை சிறிதளவு கொட்டி தண்ணீர் ஊற்றி கலக்கி கொள்ளவும்.
  • இப்போது மைதாவை அந்த கலவையில் கலக்கி நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். 4 நிமிடங்கள் கடந்ததும் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • அனைத்து பொருட்களும் நன்றாக கலக்கியதும் சூடான கொய்யா அல்வா தயாராக இருக்கும். இறுதியாக பொடி பொடியாக நறுக்கிய பாதாம் மற்றும் முந்திரியை போட்டு பரிமாறினால் சுவையான கொய்யா அல்வா ரெடி

 

காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
குழந்தை பெற்ற பிறகு தம்பதியினர் செய்ய வேண்டிய விஷயங்கள்!
உங்களின் வருமானம் பற்றி அறியக்கூடாதவர்கள்!
ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை!