Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!
Rasmalai Recipe: பிரபல உணவு வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ் உலகின் டாப் 10 சீஸ் டெசர்ட்ஸ் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இதில் போலந்தின் செர்னிக் முதலிடத்தையும், இந்தியாவின் ரசமலாய் 2வது இடத்தையும் பிடித்தது. அந்தவகையில், இன்று எளிய முறையில் வீட்டிலேயே எப்படி சுவையான ரசமலாய் செய்வது என்று பார்ப்போம். பெரும்பாலானோர் வீட்டில் சரியான ரசமலாய் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், ஆனால் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், சுவையான ரசமலாய் வீட்டிலேயே செய்யலாம்.
ரசமலாய் ஒரு பெங்காலி இனிப்பு உணவாகும். இது பாலில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த இனிப்பு வகை வாயில் போட்டதும் கரைந்து அதீத சுவையை தரும். சமீபத்தில், பிரபல உணவு வழிகாட்டியான டேஸ்ட் அட்லஸ் உலகின் டாப் 10 சீஸ் டெசர்ட்ஸ் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. இதில் போலந்தின் செர்னிக் முதலிடத்தையும், இந்தியாவின் ரசமலாய் 2வது இடத்தையும் பிடித்தது. அந்தவகையில், இன்று எளிய முறையில் வீட்டிலேயே எப்படி சுவையான ரசமலாய் செய்வது என்று பார்ப்போம். பெரும்பாலானோர் வீட்டில் சரியான ரசமலாய் செய்ய முடியாது என்று நினைக்கிறார்கள், ஆனால் சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம், சுவையான ரசமலாய் வீட்டிலேயே செய்யலாம்.
ஒரு முறை நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்கு இந்த ரசமலாய் செய்து கொடுத்தால், மீண்டும் மீண்டும் கேட்டு உங்களை தொந்தரவு செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. ரசமலாய் இப்போது வட இந்தியாவை தாண்டி தமிழ்நாட்டிலும் மிக பிரபலமாகி வருகிறது.
ALSO READ: Food Recipes: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஸ்டப்டு கேப்சிகம்.. இதை எளிதாக செய்வது எப்படி..?
ரசமலாய் செய்ய தேவையான பொருட்கள்:
- 3 லிட்டர் முழு கிரீம் பால்
- 2 டீஸ்பூன் கார்ன்ஃப்ளார்
- 8 கப் தண்ணீர்
- 8 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
- 2 கப் சர்க்கரை
- 10 ஏலக்காய் நசுக்கிய ஏலக்காய்
- சிறிதளவு குங்குமப்பூ
- பிஸ்தா, பாதாம், முந்திரி போன்ற உலர்ந்த நறுக்கப்பட்ட பருப்புகள்
எளிமையான முறையில் ரசமலாய் செய்வது எப்படி..?
- ரசமலாய் செய்யும்போது அடி பிடிக்காமல் இருக்க, அடி கனமான பாத்திரத்தில் பாலை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
- கொதிக்க ஆரம்பித்தவுடன் தீயை குறைத்து அதில் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும். பின்னர் 10 நிமிடம் பாலை நன்றாக சுண்டும் அளவிற்கு காய்ச்சவும்.
- பால் நன்றாக சுண்டியதும் எலுமிச்சை சாறை சேர்க்க தொடங்கவும். பால் முழுவதும் திரிந்து போகும்வரை எலுமிச்சை சாறை சேருங்கள்.
- பின்னர் டீ வடிகட்டி உதவியுடன் பாலில் திரிந்து வெளியேறிய தண்ணீரை வடிக்கட்டவும்.
- சிறிது நேரம் கழித்து, சுத்தமான மஸ்லின் அல்லது காட்டன் துணி மூலம் பாலைக்கட்டியை வடிகட்டி தண்ணீரை முழுவதும் வெளியேற்றுங்கள்.
- பிஸ்தா, பாதாம், முந்திரியை வெந்நீரில் ஊறவைத்து சிறிது நேரம் கழித்து பொடியாக நறுக்கவும்.
- பாலைக்கட்டியில் இருந்து தண்ணீரைப் பிழிந்த பிறகு, அதில் சிறிதளவு கான்ஃப்ளார் சேர்த்து நன்றாகப் பிசையவும், இதனால் இது மிருதுவாகும்
- பின்னர் அந்த பெரியளவிலான பாலாடைக்கட்டியில் இருந்து உங்களுக்கு தேவையான அளவில் உருண்டை தயார் செய்து (உருண்டையில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்) சிறிது தட்டி சமன் செய்யவும்.
- ரசமலாயின் சுவையை அதிகரிக்க, உருண்டையின் நடுவில் பொடியாக நறுக்கிய முந்திரியை வைக்கலாம்.
- அதன்பிறகு பெரிய பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை போட்டு பாகு தயார் செய்யவும்.
- சர்க்கரை சிரப் பிசுபிசுப்பாகத் தொடங்கும் போது, அதில் தயார் செய்து வைத்திருக்கும் ரசமலாய் உருண்டைகளைச் சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேகவைத்தால், உருண்டைகளின் அளவை இரட்டிப்பாக்கும், இனிப்பும் அதிகரிக்கும்.
ரசமலாய் பால் தயார் செய்வது எப்படி..?
- ரசமலாய் உருண்டை தயார் செய்தபின் அதன் பால் தயார் செய்ய, அடி கனமான பாத்திரத்தில் 500 மில்லி பாலை கொதிக்க வைக்கவும். அந்த பால் சூடானதும் ஒரு சிறிதளவு குங்குமப்பூவை சேர்க்கவும்.
- பால் கொதி வந்ததும், தீயை குறைத்து அவ்வப்போது பாலை கிளறிக்கொண்டே இருக்கவும். 10 நிமிடம் கழித்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
- 20 முதல் 25 நிமிடங்களுக்கு பிறகு பால் கெட்டியாக தொடங்கும். அதன்பின், நசுக்கிய ஏலக்காய், பொடியாக நறுக்கிய பிஸ்தா உள்ளிட்ட பருப்பு வகைகளை சேர்க்கவும்.
- சர்க்கரை பாலில் ஊறவத்த ரசமலாய் உருண்டைகளை லேசாக பிழிந்து, தயாரித்து வைத்திருந்த பாலில் போட்டு ஒரு இரவு அல்லது 5 முதல் 6 மணி நேரம் ஊறவைத்து எடுத்தால் சுவையான ரசமலாய் ரெடி.
- உணவை பரிமாறும் முன் கொஞ்சம் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தா, முந்திரி சேர்த்து அலங்கரித்து அனைவருக்கும் பரிமாறவும்.