5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!

Food Recipes: கடை மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர்களைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான புரோட்டீன் பவுடரை வீட்டிலேயே எப்படி செய்து பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

Protein Powder: கடைகளில் வாங்கினால் அதிக செலவா? வீட்டிலேயே புரோட்டீன் பவுடரை செய்வது எப்படி..? செய்முறை இங்கே!
புரோட்டீன் பவுடர் (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 07 Oct 2024 13:12 PM

புரதம் உடலுக்கு மிகவும் முக்கியமானது. இது நம் உடலில் தசையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் புரதம் பெரிதும் உதவுகிறது. ஒரு ஆரோக்கியமான நபர் தனது எடைக்கு ஏற்ப ஒரு கிலோவிற்கு 0.8 கிராம் புரதத்தை எடுத்து கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உடல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள் அல்லது தசைகளை வலிமையாக்க விரும்புபவர்களுக்கு புரதம் அதிகம் தேவையாக உள்ளது. அந்தவகையில், உடற்பயிற்சி கொள்பவர்களில் சிலர் உணவின் மூலம் புரதத்தை உட்கொள்கிறார்கள். சிலர் புரோட்டீன் பவுடர் வாங்கி எடுத்துகொள்கின்றனர்.

விளையாட்டு வீரர்கள் முதல் ஜிம்மிற்கு செல்பவர்கள் வரை அனைவரும் புரோட்டீன் சப்ளிமெண்ட்களை உட்கொள்கிறார்கள். இருப்பினும், சிலருக்கு புரோட்டீன் சப்ளிமெண்ட்களை பிரச்சனைகளை தருகிறது. கடை மற்றும் ஆன்லைனில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர்களைத் தவிர்க்குமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அந்தவகையில், இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய ஆரோக்கியமான புரோட்டீன் பவுடரை வீட்டிலேயே எப்படி செய்து பயன்படுத்தலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Dwayne Bravo Birthday: டி20யில் 600 விக்கெட்.. டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்.. டுவைன் பிராவோ சாகச பயணம்!

புரோட்டீன் பவுடர் செய்ய தேவையான பொருட்கள்:

பாதாம் – 1/2 கப்
பிஸ்தா – 1/2 கப்
வால்நட்ஸ் – 1/2 கப்
சியா விதைகள் – 1/2 கப்
ஓட்ஸ் – 1/2 கப்
பால் பவுடர் – 1/2 கப்
வேர்க்கடலை – 1/2 கப்
சோயாபீன் – 1/2 கப்
பூசணி விதைகள் – 1/2 கப்
ஆளி விதைகள் – 1/2 கப்

புரோட்டீன் பவுடர் செய்வது எப்படி..?

  • முதலில் வேர்க்கடலை, பிஸ்தா, பாதாம், வால்நட் ஆகியவற்றை ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றாமல், மிதமான தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் கருகாமல் வறுத்து எடுத்து ஆறவிடவும்.
  • தொடர்ந்து, பூசணி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள் உள்ளிட்டவற்றை அதே கடாயில் போட்டு வறுத்தபின், சோயாபீன்ஸையும் சேர்த்து வதக்கவும். இப்போது, எல்லா பொருட்களையும் எடுத்து ஆற விடவும்.
  • இப்போது, ஓட்ஸை குறைந்த தீயில் 2-3 நிமிடங்கள் வறுத்து எடுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து ஆற வைத்து கொள்ளுங்கள்.
  • ஆற வைத்த அனைத்து பொருட்களையும் இப்போது ஒன்றாக ஒரு மிக்ஸியில் போட்டு, அரைத்து பொடி செய்து கொள்ளுங்கள்.
  • தொடர்ந்து, அதே பொடியில் பால் பவுடரை சேர்த்து மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைக்கவும்.
  • ஒரு சல்லடை கொண்டு அரைத்த பொடியை சலித்து கொள்ளவும். நன்றாக சலித்து கொண்டபின் மீதியுள்ள கட்டி மற்றும் பொருட்களை மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
  • அரைத்த பொடியை மீண்டும் ஒரு சலித்து, அந்த கலவையில் சேர்த்தால் வீட்டில் தயார் செய்த புரோட்டீன் பவுடர் தயார்.

புரோட்டீன் பவுடர்களை எப்போது எடுப்பது நல்லது..?

புரோட்டீன் பவுரை எப்போதும் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், உடற்பயிற்சிக்கு பின்னர் புரோட்டீனை பவுடர் எடுத்துக்கொள்வது தசைகளுக்கு உடனடியான பலனை தரும். எனவே, உடற்பயிற்சி செய்த 15 நிமிடங்களுக்கு பிறகு இந்த பொடியை தாராளமாக எடுத்து கொள்ளலாம். 2 ஸ்பூன் புரோட்டீன் பவுடரை ஒரு பாட்டிலில் போட்டு 300 மில்லி தண்ணீர் அல்லது 300 மில்லி லிடர் பால் ஊற்றி கலக்கி கொள்ளுங்கள்.

கடைகளில் வாங்கும் புரோட்டீன் ஷேக்கினால் ஏற்படும் தீமைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

எடை கூடும்:

புரோட்டீன் பவுடர்களை எடுத்து கொள்பவர்களுக்கு அதிகளவில் பசி எடுக்காது. இது உங்கள் எடையை குறைக்க பெரிதும் உதவி செய்யும். உடற்பயிற்சி செய்யும்போது இந்த வகை பவுடர்கள் உங்களுக்கு ஆற்றலை தரும். நீங்கள் உடற்பயிற்சி செய்யாதபோது, எடுத்து கொள்ளும் புரதம் கொழுப்பு வடிவில் உடலில் ஒரு இடத்தில் சேமிக்கப்படும். இதன் காரணமாக எடை குறைவதற்குப் பதிலாக அதிகரிக்கத் தொடங்குகிறது.

ALSO READ: Watch Video: நோ லுக் ஷாட்டில் மாஸ் செய்த ஹர்திக் பாண்டியா.. பந்தை பார்க்காமல் பவுண்டரிக்கு விரட்டி கெத்து!

கல்லீரல் பிரச்சனை:

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்புவோர், குறைந்த அளவில் மட்டுமே புரோட்டீன் பவுடர்களை எடுத்து கொள்வது நல்லது. அதிக அளவு புரோட்டீன் ஷேக் குடிப்பது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தீவிர கல்லீரல் நோய் அபாயத்தையும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

செரிமான பிரச்சனைகள்:

அதிக புரோட்டீன் பவுடர்களை உட்கொள்பவர்களுக்கு செரிமான பிரச்சனைகள் இருக்கலாம். புரதம் ஜீரணிக்க நேரம் எடுக்கும் என்பதே இதற்குக் காரணம். இது தவிர, இது உங்கள் செரிமான அமைப்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Latest News