Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுப்பது எப்படி? என்ன சாப்பிடலாம்..? - Tamil News | Learn how to naturally lower bad cholesterol in your body; health tips in tamil | TV9 Tamil

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுப்பது எப்படி? என்ன சாப்பிடலாம்..?

Bad Cholesterol: உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. இவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறை இரண்டையும் சரியாக பேணுவது அவசியம். அதிகபடியான வறுத்த உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் உங்கள் அதிக கொழுப்பை ஏற்படுத்தும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

Cholesterol Control Tips: உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை தடுப்பது எப்படி? என்ன சாப்பிடலாம்..?

கொலஸ்ட்ரால்

Updated On: 

21 Oct 2024 15:16 PM

கொலஸ்ட்ரால் என்ற பெயரை கேட்டவுடன் நம் மனதில் தோன்றுவது இது உடல் நலத்திற்கு கேடு தரும் என்பதுதான். ஆனால், நமது உடலுக்கு குறைந்த அளவு கொலஸ்ட்ராலும் தேவை. இது நம் உடலுக்கு ஆரோக்கியமான செல்களை உருவாக்க உதவி செய்கிறது. இந்த கொழுப்பு உடலில் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும்போதுதான் இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். கொழுப்பு என்பது ஒரு மெழுகு பொருளாகும். இது இரத்த நாளங்களில் குவிந்து இரத்த ஓட்டத்தை தடுக்கிறது. அந்தவகையில், மருந்துகள் இல்லாமல் இயற்கையான முறையில் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Uric Acid: யூரிக் அமிலம் என்றால் என்ன..? இது ஏன் உடலுக்கு தீங்கு..? முழு விவரம் இங்கே!

கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருங்கள்:

உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. இவற்றை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம். கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறை இரண்டையும் சரியாக பேணுவது அவசியம். அதிகபடியான வறுத்த உணவுகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சியின்மை மற்றும் புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் உங்கள் அதிக கொழுப்பை ஏற்படுத்தும். இவற்றை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

எடை அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

சீரான உடற்பயிற்சி செய்வதன் மூலமும் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். உங்கள் உடலில் சில கிலோகிராம் எடையை குறைப்பது கூட கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும். இது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். ஆளிவிதை, ஓட்ஸ், பார்லி, பீன்ஸ், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது தவிர, முடிந்தவரை பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுங்கள்.

கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்திருக்க சுரைக்காய் சாறு பயனுள்ளதாக இருக்கும். வெறும் வயிற்றில் சுரைக்காய் சாறு குடிப்பதால், அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரலாம். சுரைக்காய் சாறு நம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதில் வைட்டமுன் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி, வைட்டமின் கே, இரும்புச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இந்த சுரைக்காய் சாறு பருகுவது உடல் எடையை குறைக்கவும் உதவி செய்யும்.

என்ன சாப்பிடலாம்..?

கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த சால்மன், டுனா, ஏரி ட்ரவுட், ஹெர்ரிங், மத்தி மீன்களை உட்கொள்வது கொலஸ்ட்ராலைக் குறைத்து இதய நோய் அபாயத்தைக் குறைக்கும்.

புகைபிடித்தல் கூடாது:

புகைபிடித்தல் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு LDL ஐ அதிகரிக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்ட உண்மை. புகைபிடிப்பதை விட்டுவிடுவதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கலாம்.

சிட்ரஸ் பழங்கள்:

ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களிலும் பெக்டின் காணப்படுகிறது. இது ஒரு வகை கரையக்கூடிய நார்ச்சத்து, இது எல்டிஎல் அளவை குறைக்க உதவி செய்கிறது.

எண்ணெயில் கவனம் தேவை:

சமையலுக்குப் பயன்படுத்தப்படும் பாமாயில் மற்றும் தேங்காய் எண்ணெயில் நிறைவுற்ற கொழுப்புகள் நிறைய உள்ளன. இவை உங்கள் உடலில் கெட்ட கொழுப்பு அல்லது எல்டிஎல் கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்யும். எனவே, சூரிய காந்தி எண்ணெய் உள்ளிட்ட சில நல்ல எண்ணெய்களை பயன்படுத்தலாம்.

உங்கள் உணவில் வெண்ணெய், கிரீம், நெய், வழக்கமான கொழுப்புள்ள பால் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களைக் குறைப்பது நல்லது.

ALSO READ: Exclusive: இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறதா? இந்த பிரச்சனைகள் உங்களை ஆபத்தில் தள்ளும் என டாக்டர் எச்சரிக்கை!

கொலஸ்ட்ரால் அளவு:

கொலஸ்ட்ரால் அளவை தொடர்ந்து பரிசோதித்து கண்காணிப்பதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, உடலில் கொழுப்பின் சாதாரண அளவு 100 mg/dl க்கும் குறைவாக இருக்க வேண்டும். அதே நேரத்தில், அதிக கொலஸ்ட்ரால் அளவு 130 முதல் 159 mg/dl  வரை இருக்கலாம் என்உ கூறப்படுகிறது. இதை விட அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TamilTV9 பொறுப்பேற்காது.)

நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்!
தாமரை விதை எனப்படும் மக்கானாவில் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
மோட்டோ போன்களுக்கு அதிரடி தள்ளுபடி வழங்கும் பிளிப்கார்ட்!