5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி..?

Prawn Curry Recipe: இறால் ஒரு அற்புதமான டிஷ். இதன் காரணமாக கடல் உணவு பிரியர்கள் இதை மிகவும் ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். அந்தவகையில் இன்று இறால் வறுவல் மற்றும் தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இதை வெறும் 40 நிமிடங்களில் செய்து, சுவையான டேஸ்ட்டை பெறலாம்.

Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி..?
இறால் ரெசிபி (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 17 Nov 2024 11:08 AM

கடல் உணவுகளை விரும்பி உண்பவர்கள் இறாலின் சுவையை விட்டு வைக்கமாட்டார்கள். இறால் ஒரு அற்புதமான டிஷ். இதன் காரணமாக கடல் உணவு பிரியர்கள் இதை மிகவும் ஆர்வத்துடன் சாப்பிடுகிறார்கள். மீன் வகைகளை விட இறால் அதிக சுவையை தரும் என்பதுதான் உண்மை. அந்தவகையில் இன்று இறால் வறுவல் மற்றும் தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்வோம். இதை வெறும் 40 நிமிடங்களில் செய்து, சுவையான டேஸ்ட்டை பெறலாம். இரண்டு இறால் கறியின் செய்முறையைப் பற்றி உங்களுக்குச் சொல்வோம்.

ALSO READ: Food Recipe: வித்தியாசமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? இதோ! பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி ரெசிபி..

தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி..?

  • தேங்காய்ப்பால் இறால் கறி செய்ய முதலில் மூன்று பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டி கொள்வோம். அதை தொடர்ந்தும், சிறிய துண்டு இஞ்சி, மூன்று தக்காளியையும் நன்றாக வெட்டி எடுத்துகொள்வோம்.
  • அடுத்ததாக, ஒரு கைப்பிடி அளவிலான கருவேப்பிலை, வெள்ளை பூண்டு 8 முதல் 10 பல்,எலுமிச்சை பழச்சாறு சிறிதளவு, மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் ஒரு 5 என்ற அளவில் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு மையாக அரைத்து கொள்ளவும்.
  • மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களில் தண்ணீரை சேர்த்து அரைக்காமல் தேங்காய் பாலை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்வது நல்லது. இப்படி செய்வதன்மூலம் மசாலா தயாராகிவிடும்.
  • இப்போது அடுப்பை ஆன் செய்து 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடாக விடுங்கள். எண்ணெய் சூடானதும் பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து கருவேப்பிலை கருகாமலும், வெங்காயம் பொன்னிறமாக மாறும்வரை நன்கு வதக்கவும்.
  • வெங்காயம் நன்றாக வதந்தியதும், நாம் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்க்கவும்.
  • மசாலா கெட்டியாகும்வரை நன்றாக காத்திருந்து, கெட்டியானதும் 1/2 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 1/2 ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து நன்கு வாசனை வரும் வரை வதக்கவும்.
  • மசாலா நன்றாக வதங்கி பச்சை வாசனை போனதும் கழுவி வைத்துள்ள இறால் சேர்த்து நன்கு கிளறவும். இப்போது தேவையான அளவு உப்பு சேர்ப்பது சரியாக இருக்கும்.
  • இறால் வெந்ததும் அரை கப் அளவிலான தேங்காய் பால் சேர்த்தி, கொதிக்கும் வரை காத்திருக்கவும்.
  • இப்போது, எண்ணெய் பிரிந்து வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான தேங்காய்ப்பால் இறால் கிரேவி ரெடி.

ALSO READ: Food Recipe: வெஜ் பிரியர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்! சூப்பர் டூப்பரான பனீர் பிரியாணி செய்முறை இதோ!

இறால் வறுவல் செய்வது எப்படி..?

  • முதலில் வாங்கி வைத்துள்ள இறால்களை மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து குழாய் தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும். சிறிய இறால்களுக்கு பதிலாக சற்று பெரிய இறால்களை வாங்கி செய்வது தொக்குக்கு கூடுதல் சுவையை தரும்.
  • இப்போது கழுவி வைத்துள்ள இறால்களை ஒரு பெரிய பாத்திரத்தில் மாத்தி 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் உப்பு, 1 டேபிள் ஸ்பூன் கெட்டியான தயிர், பாதியளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு பிசைந்து ஊற வைக்கவும்.
    அடுத்ததாக 1 டேபிள் ஸ்பூன் மல்லி, 1 டேபிள் ஸ்பூன் மிளகு, 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1/2 ஸ்பூன் கடுகு, கால் டீஸ்பூன் வெந்தயம் ஆகியவற்றை ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வதக்கி எடுக்கவும்.
  • இவை அனைத்தையும் ஒரு தட்டில் கொட்டி ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் கொட்டி, அதில் 8 வெள்ளை பூண்டு பற்கள்,  ஒரு புளி சிறிதளவும், 1 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், 6 முந்திரி ஆகியவற்றை சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும்.
  • இப்போது, ஒரு பெரிய கடாயை அடுப்பி வைத்து 2 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து, அது சூடானதும் ஊற வைத்துள்ள இறாலை நெய்யோடு சேர்த்து இரண்டு நிமிடம் பொறித்து எடுக்கவும்.
  • தொடர்ந்து அதே நெய்யில் பொடியாக பொடியாக வெட்டி வைத்துள்ள 2 வெங்காயம், கருவேப்பிலை ஒரு கையளவு சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.  வெங்காயம் கண்ணாடி பதத்தில் வந்ததும், நாம் ஏற்கனவே வறுத்து அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்.
    நெய்யோடு மசாலாவை நன்றாக வதக்கிய பிறகு சிறிது தண்ணீர் தெளித்து பச்சை வாசனை போனதும், பொரித்து வைத்திருக்கும் இறாலை கடாயில் சேர்க்கவும்.
  • வறுத்த இறால்களை சேர்த்த 2 நிமிடத்தில் அடுப்பை ஆப் செய்தால் காரசாரமான இறால் வருவல் ரெடி.

Latest News