Food Recipe: விதவிதமான புது ரெசிபி.. வாழைப்பூ, வெள்ளரிக்காய் சட்னி செய்வது எப்படி..?

Chutney Recipes: உங்களுக்கு ஆரோக்கியமான வகையில் வாழைப்பூ சட்னி மற்றும் வெள்ளரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று சொல்லி தரப்போகிறோம். இது நிச்சயம் உங்களுக்கு பிடிப்பது மட்டுமல்லாமல், நீங்கள் உங்களது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் செய்ய சொல்லி ரெசிபி தருவீர்கள். இப்போது செய்முறையை தெரிந்து கொள்வோம். 

Food Recipe: விதவிதமான புது ரெசிபி.. வாழைப்பூ, வெள்ளரிக்காய் சட்னி செய்வது எப்படி..?

சட்னி வகைகள் (Image: freepik)

Published: 

14 Nov 2024 12:18 PM

தினமும் மூன்று வேளை உணவு எடுத்துக்கொள்ளும் நமக்கு, இரண்டு வேளைகளில் தோசை அல்லது இட்லி வந்துவிடும். இந்தவகை டிபன்களுக்கு அதிகபட்சமாக சாம்பார் இல்லை என்றாலும், சட்னி நிச்சயமாக இருக்கும். இப்படியான சட்னி வகைகளில் பெரும்பாலும் தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, புதினா சட்னி போன்றவற்றில் ஏதேனும் ஒன்று வந்துவிடும். இப்படி தினம் தினம் இதுமாதிரியான சட்னி வகைகளை சாப்பிட்டு சலித்து விட்டதா..? அப்படி என்றால் இன்று உங்களுக்கு ஆரோக்கியமான வகையில் வாழைப்பூ சட்னி மற்றும் வெள்ளரிக்காய் சட்னி எப்படி செய்வது என்று சொல்லி தரப்போகிறோம். இது நிச்சயம் உங்களுக்கு பிடிப்பது மட்டுமல்லாமல், நீங்கள் உங்களது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் செய்ய சொல்லி ரெசிபி தருவீர்கள். இப்போது செய்முறையை தெரிந்து கொள்வோம்.

ALSO READ:Food Recipe: வெஜ் பிரியர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்! சூப்பர் டூப்பரான பனீர் பிரியாணி செய்முறை இதோ!

வாழைப்பூ சட்னி

வாழைப்பூ சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • வாழைப்பூ – 2 கைப்பிடி அளவு
  • மோர் – 1 கப்
  • எள் – 2 டேபிள் ஸ்பூன்
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உளுத்தம் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன்
  • புளி
  • மஞ்சள் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • வர மிளகாய் – 5
  • கடுகு – சிறிதளவு
  • கறிவேப்பிலை – 1 கொத்து
  • பெருங்காயத்தூள் – சிறிதளவு

வாழைப்பூ சட்னி செய்வது எப்படி..?

  • வாழைப்பூ உடலுக்கு பல வகைகளில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். வாரத்திற்கு ஒருமுறையாவது வாழைப்பூ எடுத்து கொள்வது நல்லது.
  • வாழைப்பூ சட்னி செய்ய 2 கைப்பிடி அளவிலான வாழைப்பூவை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.
  • சுத்தம் செய்துக்கொண்ட வாழைப்பூவை தண்ணீர் அல்லது மோரில் போட்டு தனியாக எடுத்து வைக்கவும்.
  • மோர் அல்லது தண்ணீரில் வாழைப்பூவை போடுவதற்கான காரணம் நிறம் மாறாமல் இருக்கும்.
  • இப்போது, அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் எள் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
  • தொடர்ந்து, அதே கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் வர மிளகாய் சேர்த்து கருகாத வகையில் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.
  • வர மிளகாய் வறுத்தபின், இப்போது அதே கடாயில் இருக்கும் எண்ணெயில் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது எலுமிச்சை பழ அளவிலான புளியை சேர்த்து சிறிது வறுத்து அதையும் தனியாக எடுத்து வைக்கவும்.
  • மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் கழுவி வைத்துள்ள வாழைப்பூவை போட்டு வதக்கவும்.
  • வாழைப்பூ வதங்கும்போது மஞ்சள் தூள் சிறிதளவு, உப்பு தேவையான அளவில் சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து விடவும்.  ஒரு 10 நிமிடங்களுக்கு பிறகு வாழைப்பூவை வதங்கியதும், வறுத்து தனியாக வைத்துள்ள புளி, வர மிளகாய் போன்றவற்றை சேர்த்து மீண்டும் வதக்கவும்.
  • அதன்பின், இவற்றை தனியாக எடுத்து வைத்து ஆறியதும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
  • தொடர்ந்து அதே மிக்ஸி ஜாரில் வறுத்து வைத்துள்ள எள், உளுந்தம் பருப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைக்கவும். அவ்வளவுதான் சுவையான வாழைப்பூ சட்னி ரெடி.
  • உங்களுக்கு கூடுதல் சுவை வேண்டுமென்றால் தேய்காய் சட்னிக்கு தாளிப்பதுபோல் எண்ணெய் , கடுகு, வெள்ளை உளுந்து கருவேப்பிலை, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதன்மேல் ஊற்றி கிளறினால் சுவையாக இருக்கும்.

வெள்ளரிக்காய் சட்னி

வெள்ளரிக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

  • வெள்ளரிக்காய் – 2
  • சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்
  • வெள்ளை பூண்டு – 5 பல்
  • வர மிளகாய் – 5
  • புளி
  • தேங்காய் – பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடி அளவு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு
  • பெருங்காய் தூள் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

ALSO READ: Soup Recipe: மழைக்காலத்தில் இதம் தரும் சூப் ரெசிபி.. நண்டு, காளான் வாழைத்தண்டு சூப் செய்வது எப்படி..?

வெள்ளரிக்காய் சட்னி செய்வது எப்படி..?

  • முதலில் இரண்டு பெரிய வெள்ளரிக்காய் துண்டு துண்டுகளாக வெட்டி எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும். வெள்ளரிக்காய் முத்தியதா என்பதை பார்த்து வாங்கவும்
  • அடுப்பை ஆன் செய்து ஒரு கடாயை வைக்கவும். கடாய் சூடானதும் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், வர மிளகாய், பூண்டு, புளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
    தொடர்ந்து, வெட்டி வைத்துள்ள வெள்ளரிக்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
  • இவை நன்றாக ஆறவிட்டு, மிக்ஸி ஜாரில் மாற்றி கொள்ளவும்.
  • இப்போது, அதே மிக்ஸி ஜாரில் பொடி பொடியாக நறுக்கிய தேங்காய்,  கொத்தமல்லி தழை, பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்றாக மையாக அரைத்து கொள்ளவும்.
  • அவ்வளவுதான் சுவையான வெள்ளரிக்காய் சட்னி ரெடி.
  • இந்த சட்னிக்கு மேல் உங்களுக்கு தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய், கடுகு, கருவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து தாளித்து ஊற்றி கிளறினால் சுவை தாறுமாறாக இருக்கும்,
ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்