Fertilizer Making: காய்கறி தோல்களை தூக்கி எறியாதீர்கள்.. செடி வளர்க்க உரத்தை இப்படி ஈசியா செய்யுங்க..!
Waste Vegetables: காய்கறி கழிவுகளை இனி தூக்கி வீசி எறியாமல், வீட்டிலேயே இயற்கை உரம் எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இது, செடிகள் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
செடிகளின் சரியான வளர்ச்சிக்கு, அவ்வப்போது உரங்களை போடுவது மிக மிக முக்கியம். நீங்கள் செடி மற்றும் தோட்டம் வைக்க ஆர்வம் உடையவராக இருந்தால், வீட்டிலேயே தாவரங்களுக்கு கரிம உரங்களை தயாரிக்கலாம். ஒவ்வொரு வீட்டிலும் தினசரி எப்படியும் காய்கறிகளை பயன்படுத்துகிறோம். இவைகளில் எப்படியும் காய்கறிகளின் தோல், மீதவுள்ள காய்கறிகள், பழத்தோல்கள் போன்றவைகளை குப்பை தொட்டியில் வீசுகிறோம். அந்தவகையில், இந்த விஷயங்களின் உதவியுடன் மிகவும் பயனுள்ள வகையில் உரங்களை தயாரிக்கலாம். இது தாவரங்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
இப்படியான சூழ்நிலையில், காய்கறி கழிவுகளை இனி தூக்கி வீசி எறியாமல், வீட்டிலேயே இயற்கை உரம் எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம். இது, செடிகள் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைத்திருக்கவும் உதவி செய்கிறது.
ALSO READ: Ginger Benefits: 14 நாட்கள் தொடர்ந்து இஞ்சி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இவ்வளவு பலன்களா..?
கரிம உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
- மூடியுடன் கூடிய ஒரு பெரிய தொட்டி
- காய்கறி தோல்கள், தேயிலை, உணவு பொருட்கள்
- உலர்ந்த இலைகள் அல்லது சிறிதளவு வைக்கோல்
- மண்
- நீர்
உரம் தயாரிக்கும் முறை:
- உரம் தயாரிக்க முதல் வாங்கி வைத்துள்ள பெரிய பாத்திரத்தை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- அப்படி இல்லையென்றால், உங்கள் வீட்டு பக்கத்தில் தாராளமாக இடம் இருந்தால், 1 க்கு 2 என்ற அடியில் குழி தோண்டலாம். இது பாத்திரத்தை விட சிறந்ததாக இருக்கும்.
- தொடர்ந்து, நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி கழிவுகள், உலர்ந்த இலைகள் அல்லது வைக்கோல், மண் ஆகிவற்றை கொட்டவும். ஒவ்வொரு அடுக்கும் போடும்போது சிறிது தண்ணீர் ஊற்றி கொள்வது நல்லது.
- கழிவு பொருட்கள் 3 என்ற அளவிலும், வைக்கோல் போன்றவை 1 என்ற அளவில் இருப்பது போதுமானது. அதன்பிறகு பக்கெட்டை மூடி வைக்கலாம். மண்ணால் செய்யப்பட்ட கழிவு தொட்டி என்றால் மூடி வைக்க வேண்டிய அவசியம் இல்லை.
- மூடப்பட்ட பக்கெட் என்றால் ஒவ்வொரு 2-3 நாட்களுக்கும் ஒரு முறை திறந்து கொண்டு காற்றோட்டமாக இருக்க விடுங்கள்.
- இப்படியே செய்வதன் மூலம் 2 முதல் 3 மாதங்களில் உரம் தயாராகிவிடும்.
மேலும் சில குறிப்புகள்:
- மண்புழுக்களை உரத்துடன் சேர்ப்பது உரம் வேகமாக தயாரிக்க உதவி செய்யும்.
- நீங்கள் போட்டுள்ள உரமானது கோடை காலத்தில் வேகமாக தயாராகும்.
- குளிர் மற்றும் மழைக்காலத்தில் உரம் தயாராக நேரம் எடுக்கும்.
உரத்திற்கு என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம்..?
- தேயிலை இலைகள்
- பழத்தோல்கள்
- காய்கறி தோல்கள் மற்றும் கழிவுகள்
- முட்டை ஓடுகள்
- காபி கழிவுகள்
- உலர்ந்த இலைகள்
- வேஸ்ட் பிரட்
- காய்ந்த இலைகள்
- பிளாஸ்டிக் அல்லாத காகிதங்கள்
- ஆட்டு புழுக்கைகள்
எந்த கழிவுகளை பயன்படுத்தக்கூடாது..?
- இறைச்சி
- மீன்
- பால்
மண்புழு உரம்:
மண்புழு விவசாயிகளின் நண்பன் என்றும் அழைக்கப்படுகிறது. மண்புழுக்கள் மண்ணின் வளம் மற்றும் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகளை நீண்ட காலத்திற்கு பராமரிக்க உதவுகிறது. முன்பு இவை மண்ணில் ஏராளமாக காணப்பட்டன. தற்போது ரசாயன உரங்களை அதிகளவில் பயன்படுத்துவதால் மண்ணில் அவற்றின் எண்ணிக்கை குறைந்துள்ளது. தற்போது மண்புழு வளர்ப்பு வெர்மிகல்ச்சர் என்றும், கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் மண்புழுக்களை வளர்த்து உரம் தயாரிக்கும் முறை மண்புழு உரம் என்றும் அழைக்கப்படுகிறது.
ALSO READ: Heart health: மழைக்காலத்தில் மாரடைப்பு பிரச்சனை அதிகரிக்கும்.. இதை செய்தால் வராமல் தடுக்கலாம்!
கரிம உரத்தில் பல வகையான உரங்கள் உள்ளன. இதில் மண்புழு உரம் அதாவது மண்புழு உரமும் அடங்கும். மண்புழு உரமானது மண்புழு மற்றும் மாட்டு சாணத்தின் உதவுயுடன் தயாரிக்கப்படுகிறது. மண்புழு உரம் தயாரிக்க சுமார் ஒன்றரை மாதங்கள் ஆகும். இந்த உரம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாது, மண்ணின் வளமும் அப்படியே இருக்கும். மண்புழு உரத்தில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவை போதுமான அளவில் காணப்படுகின்றன. இதன் காரணமாக, தாவரங்கள் வேகமாக வளர்ந்து உற்பத்தியும் அதிகமாக இருக்கும்.
மண்புழு உரம் சத்துக்களை விட அதிகமாக உள்ளது. இது தாவரத்தின் நல்ல வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இது 5 மடங்கு அதிக நைட்ரஜன், 8 மடங்கு அதிக பாஸ்பரஸ், 11 மடங்கு அதிக பொட்டாசியம் மற்றும் 3 மடங்கு மெக்னீசியம் போன்ற பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது.