Food Recipe: வெஜ் பிரியர்களுக்கு ஸ்பெஷல் டிஸ்! சூப்பர் டூப்பரான பனீர் பிரியாணி செய்முறை இதோ!
Paneer Biryani: வெஜ் பிரியாணி, காளான் பிரியாணி போன்றவை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று உங்களுக்கு தோன்றினால், இன்று வித்தியாசமான முறையில் பனீர் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். இது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவது மட்டுமின்றி, சுவையிலும் அடிபணிய செய்யும்.
பிரியாணி என்றால் யாருக்குதான் பிடிக்காது. வாரத்திற்கு ஒருமுறையாவது ஏதாவது ஒரு அசைவத்தை ஆசையாய் வாங்கி பிரியாணி செய்து ஒரு பிடி பிடித்து விடுவோம். அசைவ பிரியர்களுக்கு இது மாதிரியான பிரியாணிகள் மிகவும் பிடிக்கும் என்றாலும், சைவ பிரியர்கள் என்ன பிரியாணி சாப்பிடுவது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கும். வெறுமனே வெஜ் பிரியாணி, காளான் பிரியாணி போன்றவை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்துவிட்டது என்று உங்களுக்கு தோன்றினால், இன்றைக்கு வித்தியாசமான முறை பனீர் பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம். இது உங்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தருவது மட்டுமின்றி, சுவையிலும் அடிபணிய செய்யும்.
பனீர் பிரியாணி:
பனீர் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
- பனீர் – 1/4 கிலோ
- நெய் – சிறிதளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- பிரியாணி இலை – ஒன்று
- பட்டை – ஒன்று
- ஏலக்காய் – 3
- கிராம்பு – 3
- வெங்காயம் – 4
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு
- புனிதா – ஒரு கையளவு
- மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
- மல்லி தூள் – 1/2 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- தக்காளி – 1
- பாஸ்மதி அரிசி – 1/4 கிலோ
- தயிர்
- கொத்தமல்லி – ஒரு கை அளவு
பனீர் பிரியாணி செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள பாஸ்மதி அரிசியை கழுவி 10 நிமிடம் தண்ணீர் மூழ்கும்படி ஊறவைத்து கொள்ளவும்.
- அடுத்ததாக 1/2 கிலோ பனீரை உங்களுக்கு தேவையான அளவில் வெட்டி, அந்த துண்டுகளாக எடுத்து வைத்து கொள்ளவும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து குக்கரை வைத்து சூடானதும் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு கடலை எண்ணெய் ஊற்றவும், அதை தொடர்ந்து, எண்ணெயுடன் சிறிதளவு நெய் சேர்க்கவும்.
- எண்ணெய் மற்றும் நெய் ஒன்றாக கலந்து சூடானதும் ஏலக்காய், கிராம்பு, பட்டை பிரியாணி இலை ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- தொடர்ந்து, நீளவாக்கில் வெட்டி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கவும்.
- பெரிய வெங்காயம் நன்கு வதங்கியதும், இரண்டாக கீறப்பட்ட பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- அதனுடன், ஒரு ஸ்பூன் அளவிலான இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும்வரை வதக்கி கொள்ளவும்.
- அடுத்ததாக, கைப்பிடி அளவு புதினா மற்றும் கொத்தமல்லி தழைகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதங்கியதும் மஞ்சள் தூள் கால் ஸ்பூன், மல்லித்தூள் 1/2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், கரம் மசாலா ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- இப்போது எண்ணெய் பிரிந்து வந்து, பச்சை வாசனை போனதும் ஒரே ஒரு நறுக்கிய தக்காளியை போட்டு மசிய விடவும்.
- தக்காளி நன்கு வதங்கியவும், தயிர் ஒரு கால் கப் அளவில் சேர்த்து கலந்து விடவும்.
- துண்டுகளாக வெட்டி வைத்திருக்கும் பனீரை சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கியதும், ஊற வைத்த பாஸ்மதி அரிசியை கொட்டி ஒரு கிளறு கிளறவும்.
- தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி, உப்பு, காரம் உள்ளிட்டவை சரியாக உள்ளதா என்பதை சோதித்து பாருங்கள்.
- சோதித்து பார்த்தபிறகு, கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து குக்கரை மூடி வைக்கவும்
- பாஸ்மதி அரிசிக்கு ஒரு விசில் போதுமானது. இப்போது விசில் நன்கு அடங்கியதும் திறந்து பார்த்து ஒரு கிளறு கிளறவும்.
- அவ்வளவுதான் சுவையான பனீர் பிரியாணி ரெடி
ALSO READ: Food Recipe: ஆந்திரா ஸ்டைலில் கோங்குரா சிக்கன்.. செம டேஸ்டாக செய்வது எப்படி..?
இதற்கு ஏற்றாற்போல் காளான் வறுவல் செய்வது எப்படி..?
- அடுப்பை ஆன் செய்து கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் சீரகம், சின்ன வெங்காயம் (நறுக்கியது), கருவேப்பிலைகளை சேர்த்து வதக்கவும்
- வெங்காயம் நன்றாக வதங்கியதும், மிதமான தீயில் வைத்து வர மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- அதனை தொடர்ந்து, சிறிதளவு மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்
- இஞ்சி பூண்டு விழுதின் பச்சை வாசனை போனதும், கழுவி நறுக்கி வைத்திருக்கும் காளானை சேர்க்கவும்.
- இப்பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்ததும், சிறிதளவு தண்ணீரை அதில் சேர்த்து கிளறவும்.
- நன்றாக கிளறியபின் 10 முதல் 15 நிமிடங்கள் ஒரு தட்டை போட்டு மூடி வைக்கவும்.
- தண்ணீர் நன்றாக வற்றியதும் கொத்தமல்லி தழை போட்டு இறக்கினால் சுவையான காளான் வறுவல் ரெடி.