Food Recipe: சூப்பர் ஃபுட் சண்டே! முட்டை 85, முட்டை பணியாரம் செய்வது எப்படி?

Egg 85: ஒரு வேகவைத்த முட்டையில் 6 சதவீதம் வைட்டமின் ஏ, 5 சதவீதம் ஃபோலேட், 7 சதவீதம் வைட்டமின் பி5, 9 சதவீதம் பி12, 9 சதவீதம் பாஸ்பரஸ் மற்றும் 22 சதவீதம் செலினியம் உள்ளது. மேலும், வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை முட்டையில் உள்ளன.

Food Recipe: சூப்பர் ஃபுட் சண்டே! முட்டை 85, முட்டை பணியாரம் செய்வது எப்படி?

முட்டை ரெசிபி (Image: Freepik)

Published: 

24 Nov 2024 12:34 PM

மழை மற்றும் குளிர்காலத்தில் அதிகளவில் முட்டை சம்பந்தமான உணவுகளை எடுத்துகொள்வது நல்லது. பருவ மாற்றத்தின்போது, புரதம் நிறைந்த முட்டைகளை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான ஊட்டச்சத்துக்கள் முட்டையில் உள்ளது. ஒரு வேகவைத்த முட்டையில் 6 சதவீதம் வைட்டமின் ஏ, 5 சதவீதம் ஃபோலேட், 7 சதவீதம் வைட்டமின் பி5, 9 சதவீதம் பி12, 9 சதவீதம் பாஸ்பரஸ் மற்றும் 22 சதவீதம் செலினியம் உள்ளது. மேலும், வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, வைட்டமின் பி6, கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை முட்டையில் உள்ளன. இதன் காரணமாகவே, முட்டை சூப்பர் ஃபுட் என்று அழைக்கப்படுகிறது. அந்தவகையில், இன்று முட்டை 85 மற்றும் முட்டை பணியாரம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

முட்டை 85

முட்டை 85 செய்ய தேவையான பொருட்கள்:

  • முட்டை – 2
  • மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 ஸ்பூன்
  • தனி மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • அரிசி மாவு – 1/2 டேபிள் ஸ்பூன்
  • மைதா மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • கார்ன்ஃபிளார் மாவு – 1 டேபிள் ஸ்பூன்
  • எலுமிச்சைப் பழம் – பாதி பழத்தின் சாறு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி தழை – ஒரு கைப்பிடி அளவு
  • புதினா இலை – ஒரு கைப்பிடி அளவு
  • எண்ணெய் – வறுக்க தேவையான அளவு

முட்டை 85 செய்வது எப்படி..?

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துள்ள 2 முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும்.
  2. அதில் சிறிதளவு மஞ்சள் தூள், தேவையான அளவு உப்பு, தனி மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து வைத்துக் கொள்ளவும்.
  3. இப்போது ஒரு குழியான கிண்ணத்தில் சிறிதளவு எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும்.
  4. இதை அடுத்து இட்லி பானையில் வைத்து சிறிது நேரம் வேக வைக்கவும்.
  5. இவை வெந்ததும் தனியாக எடுத்து வைத்து ஆறியவுடன் உங்களுக்கு தேவையான அளவில் சின்னச் சின்ன துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள்.
  6. மீண்டும் ஒரு பாத்திரத்தில் மேலே குறிப்பிட்டுள்ள அளவிலான மைதா மாவு, கார்ன்ஃபிளார் மாவு, அரிசி மாவு, கரம் மசாலா, இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவில் உப்பு, கொத்தமல்லி இலைகள், புதினா இலைகள், எலுமிச்சை சாறு போன்றவற்றை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கரைத்து வைத்து கொள்ளுங்கள்.
  7. இப்போது, வேகவைத்த முட்டைத் துண்டுகளை, கலக்கி வைத்துள்ள முக்கி எடுத்து எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
  8. அவ்வளவுதான் சுவையான முட்டை 85 ரெடி. இதை எலுமிச்சை சாறு பிழிந்தோ அல்லது தக்காளி சாஸூடன் சேர்த்து பரிமாறினால் சுவை தாறுமாறாக இருக்கும்.

முட்டை பணியாரம்

முட்டை பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • முட்டை – 2
  • பெரிய வெங்காயம் – 2 (பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்)
  • பச்சைமிளகாய் – 2 (பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்)
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை – சிறிதளவு (இவை இரண்டையும் பொடியாக நறுக்கவும்)
  • மஞ்சள் தூள் – ஒரு டீஸ்பூன்
  • இட்லி மாவு – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
  • கடுகு – ஒரு டீஸ்பூன்
  • உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்

முட்டை பணியாரம் செய்வது எப்படி..?

  1. ஒரு குண்டா சட்டியில் ஒரு கப் மாவை ஊற்றி இட்லி ஊற்றி கொள்ளவும்.
  2. அந்த இட்லி மாவில் 2 உடைத்த முட்டை, பொடி பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்க்கவும்
  3. தொடர்ந்து, அதே கலவையில் சிறிதளவு மஞ்சள்தூள், உங்களுக்கு தேவையான அளவில் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
  4. இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து கடுகு, வெள்ளை உளுத்தம், கடலைப்பருப்பு சேர்த்துத் தாளித்து கலந்து வைத்து இட்லி மாவில் சேர்த்து மீண்டும் ஒருமுறை கலக்கி கொள்ளவும்.
  5. அடுத்ததாக, அதே அடுப்பில் பணியார சட்டியை வைத்து குழிகளில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
  6. தொடர்ந்து, கலக்கி வைத்துள்ள முட்டை இட்லி மாவுக் கலவையை ஒவ்வொரு குழியிலும் முக்கால் வாசி ஊற்றி வேகவிடவும்.
  7. பாதி வெந்ததும் அதை மீண்டும் ஒரு குச்சி அல்லது பணியார கம்பியால் திருப்பி போடவும்.
  8. இப்போது வெந்ததும் ஒரு குச்சியால் வேகவைத்து எடுத்தால் சூடான முட்டை பணியாரம் ரெடி.
  9. இந்த முட்டை பணியாரத்தை தேங்காய் சட்னி அல்லது கார சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அள்ளும்.
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்