Food Recipes: ஹைதராபாத் ஸ்டைலில் சிக்கன் பிரியாணி வேண்டுமா..? உங்களுக்காக ஈஸி ரெசிபி..!
Biryani Recipe: லக்னோ முதல் திண்டுக்கல் வரை பிரியாணியின் சுவை மிகவும் பிரபலமானது. பெரும்பாலும் பிரியாணிகளில் மக்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி என்றால் அவ்வளவு பிரியம். இதன் காரணமாகவே, இந்தியாவில் அதிகம் விற்கப்படும் உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. பிரியாணியை கடைகளில் இருந்தும் ஆன்லைனிலும் மக்கள் ஆர்டர் போட்டு அதிகளவில் சாப்பிடுகிறார்கள். சிலர் அதையும் தாண்டி வீட்டிலேயே பிரியாணி செய்து அசத்துகிறார்கள்.
பிரியாணி என்றால் யாருக்குதான் பிடிக்காது. மூன்று வேளையும் பிரியாணி கொடுத்தாலும், கொஞ்சமும் முகம் சுழிக்காமல் பிரியாணி சாப்பிடுபவர்கள் இந்த உலகில் ஏராளம். லக்னோ முதல் திண்டுக்கல் வரை பிரியாணியின் சுவை மிகவும் பிரபலமானது. பெரும்பாலும் பிரியாணிகளில் மக்களுக்கு சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி என்றால் அவ்வளவு பிரியம். இதன் காரணமாகவே, இந்தியாவில் அதிகம் விற்கப்படும் உணவுகளில் பிரியாணி முதலிடத்தில் உள்ளது. பிரியாணியை கடைகளில் இருந்தும் ஆன்லைனிலும் மக்கள் ஆர்டர் போட்டு அதிகளவில் சாப்பிடுகிறார்கள். சிலர் அதையும் தாண்டி வீட்டிலேயே பிரியாணி செய்து அசத்துகிறார்கள். அந்தவகையில், வீட்டிலேயே இன்று சிக்கன் பிரியாணியை எளிதாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
ALSO READ: Food Recipes: சுவையான ரசமலாய் செய்ய ரெடியா..? பேமிலிக்கு இது கண்டிப்பா பிடிக்கும்!
சிக்கன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் marinate:
1 கிலோ சிக்கன்
2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
1 தேக்கரண்டி காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள்
1 தேக்கரண்டி கொத்தமல்லி தூள்
1 தேக்கரண்டி உப்பு
பிரியாணி:
5 தக்காளி
7 சிறிய வெங்காயம் அல்லது 5 நடுத்தர அளவு
3 பச்சை மிளகாய்
50 கிராம் கொத்தமல்லி இலைகள்
50 கிராம் புதினா இலைகள்
1 தேக்கரண்டி கரம் மசாலா
1 டீஸ்பூன் சிக்கன் மசாலா
1 டீஸ்பூன் பிரியாணி மசாலா
1 டீஸ்பூன் வறுத்த கஸ்தூரி மேத்தி
1/4 கப் தயிர்
1 தேக்கரண்டி நெய்
1 டீஸ்பூன் சீரகம்
1 தேக்கரண்டி உப்பு
1/4 கப் கடலை எண்ணெய்
2 கப் பிரியாணி அரிசி
ALSO READ: Food Recipes: மீண்டும் மீண்டும் சாப்பிட தூண்டும் ஸ்டப்டு கேப்சிகம்.. இதை எளிதாக செய்வது எப்படி..?
பிரியாணி செய்முறை:
- முதலில் சிக்கன் துண்டுகளை தண்ணீரில் நன்கு கழுவி கொள்ளவும். இதற்கு பிறகு, ஒரு பாத்திரத்தில் உப்பு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி கொண்டு, மீண்டும் தண்ணீர் ஊற்றி அலசி கொள்ளவும். சிக்கன் marinate செய்ய ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். பின்னர் மஞ்சள் தூள், வர மிளகாய் தூள் மற்றும் கொத்த மல்லி, உப்பு, தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். இதன்பிறகு, 10-15 நிமிடங்கள் ஊற விடவும்.
- அரிசியை கழுவி 20 நிமிடம் நன்றாக ஊற விடுங்கள். அதற்குள் வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை 1/4 துண்டுகளாகவும் நறுக்கி கொள்ளுங்கள். மேலும், 4 பச்சை மிளகாய் நீள வாக்கிலும், கொத்தமல்லி மற்றும் புதினாவை பொடி பொடியாகவும் நறுக்கி கொள்ளவும்.
- நல்ல பெரிய பாத்திரத்தை வைத்து தேவையான அளவு எண்ணெய், சிறிதளவு நெய் ஊற்றி கொள்ளுங்கள். தொடர்ந்து, பிரியாணி நறுமண பொருட்களை அதில் சேர்த்து வதக்கி விடுங்கள். மற்றொரு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து முக்கால் பாத்திரம் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வையுங்கள். தண்ணீர் சூடானதும் அரிசி மற்றும் உப்பு சேர்த்து கிளறிவிடவும்.
- பிரியாணி மசாலா போட்ட பாத்திரத்தில் வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்டை சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் பச்சை மிளகாய், சிக்கன் மசாலா,கஸ்தூரி மேத்தி, கரம் மசாலா உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தொடர்ந்து சிக்கன் சேர்த்து நன்கு வதங்கும் வரை காத்திருங்கள்.
- மறுபுறம் வெந்து கொண்டிருக்கும் அரிசியில் பிரியாணி நறுமண மசாலா, நெய் சிறிது சேர்த்து முக்கால் பதம் அரிசி வெந்ததும் அடுப்பை ஆப் செய்து வடிகட்டவும். மற்றொரு அடுப்பில் சிக்கன் நன்றாக வெந்ததும் பிரியாணிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வடிகட்டிய அரிசியை போடவும். அரிசியை நன்றாக பரப்பிவிட்டு சமன் செய்தபின், அடுப்பின் கீழ் தோசை கல்லை வைத்து மேலே மூடிபோட்டு தம் போடவும்.
- சிறிது நேரத்திற்கு பிறகு நெய்யை ஊற்றி தம்மை உடைத்தால் சுவையான சிக்கன் பிரியாணி ரெடி.
தயிர் பச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
- தயிர்
- 4 பெரிய வெங்காயம்
- பச்சை மிளகாய்
- கொத்தமல்லி
பிரியாணிக்கு தொட்டுகொள்ள சுவையான தயிர் பச்சடி செய்ய, முதல் பெரிய வெங்காயத்தை நீள வாக்கில் நன்றாக வெட்டி கொள்ளவும். அதில், பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கினால் தயிர் பச்சடி ரெடி.