5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipe: சட்டென செய்யக்கூடிய ஃபுட் ரெசிபி! சுறா புட்டு, மீன் வடை செய்வது எப்படி..?

Fish Vadai: சைவத்தை விட அசைவ உணவுகளையே பெரும்பாலனவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களை கொண்டு வித்தியாசமான முறையில் சென்னை மக்களின் வாழ்வோடு இணைந்த சுறா புட்டு மற்றும் மீன் வடை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

Food Recipe: சட்டென செய்யக்கூடிய ஃபுட் ரெசிபி! சுறா புட்டு, மீன் வடை செய்வது எப்படி..?
மீன் வடை – சுறா புட்டு (Image: freepik)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 19 Nov 2024 12:53 PM

சைவமோ, அசைவமோ எந்த உணவு சுவையாக இருந்தாலும் ஒரு பிடி பிடிப்போம். அதிலும், அசைவ உணவு அதீத சுவைகளில் இருந்தால், சாப்பாட்டை ஒரு கை பார்த்துவிட்டுதான் மறு வேலை எதுவாக இருந்தாலும் பார்ப்போம். சைவத்தை விட அசைவ உணவுகளையே பெரும்பாலனவர்களுக்கு மிகவும் பிடிக்கும். அசைவ உணவுகளில் ஒன்றான மீன்களை கொண்டு இந்த ரெசிபி குறிப்புகளில், வித்தியாசமான முறையில் எப்படி சுவையான டிஷ் செய்யலாம் என்பதை பார்ப்போம். அந்தவகையில், இன்று சென்னை மக்களின் வாழ்வோடு இணைந்த சுறா புட்டு மற்றும் மீன் வடை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி! சுவையான தேங்காய் பால் இறால் கறி செய்வது எப்படி..?

சுறா புட்டு

சுறா புட்டு செய்ய தேவையான பொருட்கள்

  • சுறா மீன் – அரை கிலோ
  • சின்ன வெங்காயம் – 200 கிராம்
  • பூண்டு – 10 பற்கள்
    பச்சை மிளகாய் – 4
  • மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய் – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு

சுறா புட்டு செய்வது எப்படி..?

  1. முதலில் சுறா புட்டை தயாரிக்க ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஊற்றி, அதில் சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து சுறாவை நன்றாக வேக வைக்கவும்.
  2. சுறா நன்றாக வெந்த பிறகு சூடு ஆறியதும், அதன் தோல் மற்றும் முள் போன்றவற்றை நீக்கி சதைப் பகுதியை மட்டும் உதிரி உதிரியாக பிய்த்து தனியாக எடுத்து வைக்கவும்.
  3. இப்போது, அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து கொள்ளவும்.
  4. அடுத்ததாக, நான்காக வெட்டி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
  5. தொடர்ந்து, பொடி பொடியாக வெட்டி வைத்த பூண்டு, நறுக்கிய 4 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
  6. இப்போது, வேகவைத்துள்ள சுறாவை சேர்த்து உப்பை சரி பார்த்து கிளறி கொள்ளவும்.
  7. உதிரி உதிரியாக சுறா வெந்து நன்றாக வந்ததும் அதனை அப்படியே இறக்கி வைத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான சுறா புட்டு ரெடி
  8. சுறா புட்டானது முட்டைப் பொடிமாஸ் மாதிரியான சுவையை தரும். இதை எந்த வயதினரும் சாப்பிடலாம். குழந்தை பெற்ற பெண்களுக்கு நல்லது.

ALSO READ: Food Recipe: வித்தியாசமான ஸ்வீட் சாப்பிட ஆசையா? இதோ! பலாப்பழ பாயாசம், கேரட் பிர்னி ரெசிபி..

மீன் வடை

மீன் வடை  செய்ய தேவையான பொருட்கள்:

  • மீன் – அரை கிலோ
  • முட்டை – 1
  • மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • பெரிய வெங்காயம் – 3
  • பச்சைமிளகாய் – 4
  • உருளைக்கிழங்கு – 100 கிராம்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் –  தேவையான அளவு

மீன் வடை செய்வது எப்படி..?

  1. சுறா புட்டுக்கு செய்தது போல், வாங்கி வைத்துள்ள மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்
  2. இப்போது, ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
  3. மீன் நன்றாக வெந்ததும், மீனில் இருக்கும் முள் மற்றும் தோல் நீக்கி நன்கு பிசைந்து கொள்ளவும்.
  4. அதன்பிறகும், உருளைக்கிழங்கையும் நன்றாக  வேகவைத்து, தோல் உரித்து மசித்து எடுத்து வைக்கவும்.
  5. பொடி பொடியாக வெட்டி வைத்த வெங்காயம், பச்சை மிளகாயை தயாராக எடுத்து வைக்கவும்.
  6. வேகவைத்து பிசைத்து வைத்துள்ள மீன், உருளைக்கிழங்கு, உப்பு, முட்டை, மிளகாய்த் தூள், வெங்காயம், பச்சை மிளகாய் போன்ற எல்லாவற்றையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
  7. இப்போது அடுப்பை ஆன் செய்து எண்ணெய் ஊற்றி காயந்ததும், பிசைத்து வைத்துள்ள கலவையை சிறுசிறு வடைகளாகத் தட்டிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
  8. அவ்வளவுதான் சூப்பரான மீன் வடை ரெடி. மாறாக, இதை பொரிப்பதற்கு பதிலாக தோசைக்கல்லில் தட்டி வைத்து கட்லெட் ஆகவும் செய்து சாப்பிடலாம்.

சிக்கன் வறுவல் செய்வது எப்படி..?

  1. கடைகளில் வாங்கி வந்த சிக்கனை நன்கு கழுவி சிறு சிறுத் துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
  2. அதனை தொடர்ந்து, சின்ன வெங்காயத்தை நீளவாக்கிலும், வர மிளகாயை 2 ஆக கிள்ளி எடுத்து வைத்து கொள்ளவும்.
  3. இப்போது, ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வெந்ததும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
  4. இஞ்சி, பூண்டு பேஸ்ட்டின் பச்சை வாசனை போனதும் சிக்கனை சேர்க்கவும்.
  5. பின்பு, கரம் மசாலாத்தூள் ஒரு டீ ஸ்பூன், மிளகுத்தூள் ஒரு டீ ஸ்பூன் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்
  6. இப்போது, தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்
  7. அடுத்ததாக சிக்கன் வெந்து, தண்ணீர் நன்றாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான சிக்கன் மிளகு வறுவல் ரெடி.

Latest News