Diwali Special Recipes: தீபாவளி ஸ்பெஷல் கார வகைகள்.. காரா பூந்தி, காரா சேவு செய்வது எப்படி..?
Deepavali: குறைந்த நேரத்தில் ஈஸியான முறையில் வீட்டிலேயே சில சாப்பிடும் தின்பண்டங்களை செய்து அசத்தலாம். அந்தவகையில், இன்று வீட்டிலேயே காரா பூந்தி, காரா சேவு மற்றும் சோளமாவு முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது நிச்சயம் உங்களுக்கு சிறந்த சுவையை தருவதோடு, புது அனுபவத்தையும் தரும்.
தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் எல்லாரும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டனர். புது ஆடைகளும், பட்டாசுகளும், இனிப்பு, கார வகைகள் என அனைத்தையும் வாங்கி வைத்து, வீட்டிற்கு வரும் விருந்தினருக்கு கொடுக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். இருப்பினும், கடைகளில் வாங்கும் இனிப்பு மற்றும் கார வகைகள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விலை உயர்ந்ததாக இருக்கும். மேலும், இந்த தின்பண்டங்கள் எத்தனை நாட்களுக்கு முன்பு செய்தது என்றும் நமக்கு தெரியாது. தெரியாத ஒன்றை வாங்கி சிரமம் கொள்வதற்கு, குறைந்த நேரத்தில் ஈஸியான முறையில் வீட்டிலேயே சில சாப்பிடும் தின்பண்டங்களை செய்து அசத்தலாம். அந்தவகையில், இன்று வீட்டிலேயே காரா பூந்தி, காரா சேவு மற்றும் சோளமாவு முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம். இது நிச்சயம் உங்களுக்கு சிறந்த சுவையை தருவதோடு, புது அனுபவத்தையும் தரும்.
ALSO READ: Diwali Sweet: தீபாவளி ஸ்வீட்ஸ் ரெசிபிகள்.. மைசூர் பாக், முறுக்கு செய்வது எப்படி..?
காரா பூந்தி
காரா பூந்தி செய்ய தேவையான பொருள்கள்:
- கடலை மாவு – 1 கப்
- வர மிளகாய் – 4 முதல் 5
- அரிசி மாவு -1 கப்
- முந்திரிப் பருப்பு – 8 முதல் 10
- உப்பு – தேவையான அளவு
- கருவேப்பில்லை – 1 கொத்து
- எண்ணெய் – வறுக்கும் அளவிற்கு தேவை
காரா பூந்தி செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள கடலை மாவையும், அரிசி மாவையும் ஒன்றாக கலந்து, அதில் அதிகளவில் தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்
- ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில், வறுக்கும் அளவிற்கு எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
- எண்ணெய் நன்கு காயந்தவுடன், பூந்தி தேய்க்கும் கரண்டியை (ஜல்லி கரண்டி) எண்ணெய்க்கு மேல் நன்றாக பிடித்து, கரைத்த மாவை ஜல்லி கரண்டி ஓட்டை மேல் ஊற்றிக் கையால் அழுத்தி தேய்த்து விடவும்.
- ஓட்டை வழியாக மாவு வடிந்து பூந்தியாக நன்றாகப் பொன்னிறத்தில் பொரியும் வரை சிறிது நேரம் காத்திருக்கவும்.
- இப்படியாக பாத்திரத்தில் இருக்கும் அனைத்து மாவையும் ஜல்லி கரண்டியின் ஓட்டை வழியாக தேய்த்து, பூந்தியாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
- இப்போது, வர மிளகாயை வறுத்து அரைத்து உப்பையும் பொடி செய்து பூந்தி மேல் தூவி, நன்றாக கலக்கவும். அப்படி இல்லையென்றால், மிளகாய் தூளுடன் உப்பையும் சேர்த்து கலக்கலாம்.
- தொடர்ந்து பூந்தியின் மீது வறுத்த முந்திரி, வறுத்த கருவேப்பில்லை ஆகிய இவற்றையும் தனித்தனியாக தேவையான அளவு சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள்.
- சுவையான சூப்பராக காரா பூந்தி ரெடி.
காரா சேவு
காரா சேவு செய்ய தேவையான பொருள்கள்:
- அரிசி மாவு – 1 கப்
- கடலை மாவு – 1 கப்
- மிளகு – ஒரு கை அளவு
- நெய் – தேவையான அளவு
- உப்பு – தேவைக்கு ஏற்ப
காரா சேவு செய்வது எப்படி..?
- காரா பூந்திக்கு செய்தது போல் கடலை மாவு, அரிசி மாவு நன்கு கலந்து தண்ணீர் விட்டு தோசை பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
- அதே மாவு கலவையில் நெய், மிளகுப் பொடி தேவையான அளவு உப்பு ஆகியவற்றையும் சேர்த்து கொள்ளவும்.
- இப்போது எடுத்து வைத்துள்ள ஒரு கை அளவிலான மிளகை பொடி செய்து கொள்ளவும்.
- ஒரு பெரிய அளவிலான கடாயை எடுத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் நன்கு காய்ந்தவுடன் காரா சேவு அச்சு மூலம் ஜல்லி கரண்டியில் மேல் பிழிந்து கொள்ளவும்.
- பிழிந்து வைத்திருந்த மாவை அப்படியே எண்ணையில் இறக்கி கரண்டியை வெளியே எடுத்து விடவும்.
- சேவு பொன்னிறம் ஆகும் வரும் வரை காத்திருந்து எடுத்தால் சுவையான காரா சேவு ரெடி
- காரா சேவை தீய விடாமல் எடுப்பது நல்லது.
சோளமாவு முறுக்கு
சோளமாவு முறுக்கு செய்ய தேவையான பொருட்கள்:
- வெள்ளை சோள மாவு – 4 கப்
- கடலை மாவு – 1 கப்
- எள் அல்லது சீரகம் – 2 டீஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- வெண்ணெய் – 2 டீஸ்பூன்
- மிளகாய் தூள்
சோளமாவு முறுக்கு செய்வது எப்படி..?
- முதலில் எடுத்து வைத்துள்ள 4 கப் வெள்ளைச் சோள மாவுடன், ஒரு கப் கடலை மாவை நன்றாக கலக்கி கொள்ளவும்.
- தொடர்ந்து, மாவு கலவையுடன் வெண்ணெய், தேவையான அளவு உப்பு, பெருங்காயம், எள் அல்லது சீரகம் ஆகியவற்றை நன்றாக கலக்கி கொள்ளவும்.
- உங்களுக்கு தேவை என்றால் காரத்திற்கு ஏற்ப மிளகாய் பொடியையும் சேர்த்து கொள்ளுங்கள்.
- இப்போது, வழக்கம்போல் மாவை முறுக்கு அச்சில் போட்டுப் பிழிந்து கொள்ளங்கள்.
- அதை எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்தால், சுவையான சோளமாவு முறுக்கு ரெடி.