5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Diwali Sweets Recipes: இன்னும் 2 வாரத்தில் தீபாவளி.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?

Diwali 2024: கடைகளில் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமற்றவை என்று நினைத்தால், இவற்றிற்கு பதிலாக தீபாவளிக்கு சுவையான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம். அந்தவகையில், தீபாவளிக்கு செய்யக்கூடிய பால் பணியாரம், ஜிலேபி மற்றும் ரவா லட்டுகளை எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

Diwali Sweets Recipes: இன்னும் 2 வாரத்தில் தீபாவளி.. வீட்டிலேயே சுவையான பால் பணியாரம், ஜிலேபி செய்வது எப்படி?
ஜிலேபி, ரவா லட்டு (Image: freepik)
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 17 Oct 2024 12:13 PM

தீபத் திருநாளான தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய தொடங்கியுள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு தேவையான பட்டாசு, புது துணிகள் போன்றவற்றை வாங்க சந்தைகளில் வாங்க இன்னும் 3 நாட்களில் கூட்டம் அலைமோத தொடங்குவிடும். இவையனைத்தும் மட்டுமின்றி இனிப்பு கடைகளுக்கும் மக்கள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கடைகளில் வாங்கும் இனிப்புகள் ஆரோக்கியமற்றவை என்று நினைத்தால், இவற்றிற்கு பதிலாக தீபாவளிக்கு சுவையான இனிப்புகளை வீட்டிலேயே செய்யலாம். அந்தவகையில், தீபாவளிக்கு செய்யக்கூடிய பால் பணியாரம், ஜிலேபி மற்றும் ரவா லட்டுகளை எப்படி செய்வது என்று இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Diwali Dessert Recipes: உறவினர்களை மயக்கும் உணவை பரிமாற ஆசையா? தீபாவளிக்கு படுஜோரான அல்வா ரெசிபி…!

பால் பணியாரம்

பால் பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

  • பச்சரிசி – 200 கிராம்
  • தேங்காய் – 1
  • உளுந்து – 100 கிராம்
  • அச்சு வெல்லம் – 100 கிராம்
  • எண்ணெய் – 250 கிராம்
  • ஏலக்காய் – 4
  • உப்பு – ஒரு தேக்கரண்டி

பால் பணியாரம் செய்வது எப்படி..?

  1. பச்சரிசி, உளுந்து ஆகியவற்றை தனித்தனியாக ஒரு மணிநேரம் நன்றாக ஊறவைத்து அரைத்து எடுத்து கொள்ளவும். இவை இரண்டும் உருட்டும் பதத்தில் அரைத்து கொள்வது நல்லது.
  2. எடுத்து வைத்துள்ள தேங்காயை துருவி கெட்டியாக தேங்காய் பாலை எடுத்து கொண்டு, அதில் வெல்லம், ஏலக்காய்தூள் சேர்த்து வெல்லம் கரையும் வரை அடுப்பில் வைத்து இறக்கி ஆற விடவும். அதில், சிறிது உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.
  3. அரைத்த பச்சரிசி மற்றும் உளுந்து மாவை ஒன்றாக கலந்து, நன்றாக எலுமிச்சை வடிவத்தில் உருட்டி எடுத்து கொள்ளவும்.
  4. இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அது நன்றாக காய்ந்ததும், அதில் உருண்டைகளாக உருட்டி வைத்திருந்த மாவு கலவைகளை போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
  5. பிறகு ஆறிய தேங்காய் பாலை அகலமான பாத்திரத்தில் ஊற்றி, அதில் வெந்த உருண்டைகளை போட்டு கலந்து ஒரு மணிநேரத்திற்கு ஊறவிடவும். இப்போது, ஊறியவுடன் எடுத்து பரிமாறினால் சுவையான பால் பணியாரம் ரெடி.

ரவா லட்டு

ரவா லட்டு செய்ய தேவையான பொருட்கள்:

  • ரவை – 1 கப்
  • வெள்ளை சர்க்கரை – 3/4 கப்
  • முந்திரி – 12
  • ஏலக்காய் – 3
  • டால்டா – 100 கிராம்

ALSO READ: Food Recipes: பேரிச்சம்பழ அல்வா செய்வது எப்படி..? எளிதாக செய்யக்கூடிய சூப்பர் ரெசிபி!

செய்முறை:

  1.  ஒரு கடாயில் எடுத்து வைத்திருந்த ரவைவை கொட்டி 2 நிமிடம் வறுத்து எடுத்து கொள்ளவும்.
  2. வறுத்து வைத்திருந்த ரவையுடன் வெள்ளை சர்க்கரையையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸாக இல்லாமல் ஒரு முறை மட்டும் ஓட்டி எடுங்கள்.
  3. இப்போது, முந்திரியை பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
  4. கலந்து வைத்திருந்த ரவை மற்றும் சர்க்கரையுடன், நெய்யில் வறுத்த முந்திரி, ஏலக்காய் போட்டு கிளறிக் கொள்ளவும்.
    எடுத்துக் கொண்ட மாவில் நான்கில் ஒரு பாகம் அல்லது அதற்கும் குறைவான மாவை தனியாக ஒதுக்கி வைக்கவும்.
  5. கடாயில் டால்டாவை போட்டு உருக்கி, முக்கால் பாகம் உள்ள மாவில் ஊற்றி (மாவில் ஊற்றும் போது நுரை வர வேண்டும்.) பிசைந்து கொள்ளவும்.
  6. கை சுடும் பதத்தில் பிசைந்து உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
    பிறகு ஒதுக்கி வைத்துள்ள கால் கப் மாவில் போட்டு பிரட்டி எடுத்தால் சுவையான ரவா உருண்டை ரெடி.

ஜிலேபி:

ஜிலேபி செய்ய தேவையான பொருட்கள்:

  • உளுந்து – 250 கிராம்
  • சர்க்கரை – 1 கிலோ
  • அரிசி – 30 கிராம்
  • லெமன் கலர்பவுடர்
  • ரோஸ் எசன்ஸ்
  • டால்டா
  • நெய் அல்லது ரீபைண்ட் ஆயில்

செய்முறை :

  1. உளுந்து மற்றும் அரிசியையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டும் நன்றாக ஊறியதும் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும்.
  2. அகலமான பாத்திரத்தில் சீனியை போட்டு, தண்ணீர் ஊற்றி, எசன்ஸ், கலர் சேர்த்து (தண்ணீரில் சர்க்கரை மூழ்கும் வரை) அடுப்பில் வைக்கவும்.
  3. இப்போது சர்க்கரைபாகு கம்பி பதம் வந்தவுடன் பாகு ஆறாமல் இருக்கும் விதத்தில் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
  4. அரைத்த மாவில் லெமன் கலர்பவுடர்ரோஸ் எசன்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கிவைத்து கொள்ளவும்.
  5. தொடர்ந்து, ஒரு கடாயில் டால்டா அல்லது நெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு கரண்டி மாவை எடுத்து ஜாங்கிரி பிழியும் ரெட்டில் வைத்து கையால் அழுத்தி எண்ணெயில் சுற்றவும்.
  6. நன்றாக சிவக்க வெந்ததும் எடுத்து சீனிப்பாகில் போடவும். கடாயில் ஒரு முறை 5 முதல் 6 வரையிலான ஜிலேபி போட்டு எடுக்கலாம்.
  7. எடுத்ததும் அதை தயாரித்து வைத்திருந்த சர்க்கரை பாகில் போட்டு ஊறவைத்து எடுத்தால் சுவையான இனிப்பான ஜிலேபி ரெடி.

Latest News