5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Food Recipes: குழம்பு என்ன வைப்பது என்று யோசனையா..? ஆந்திரா ஸ்டைலில் இப்படி பருப்புப்பொடி செய்து அசத்துங்க!

Paruppu Podi: நீங்கள் ஏதேனும் குழம்பு வைக்க சோம்பேறி தனமாக தோன்றும்போது, வெறுமனே ஒரு குக்கரில் அல்லது சட்டியில் சாதத்தை வடித்து, அதில் இந்த பருப்புப்பொடியுடன் எண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். குழம்புகள் இல்லாமல் பொடிகள் சார்ந்த உலர் சட்னிகள் பல தென்னிந்திய உணவு வகைகளில் காணப்படுகின்றன. இந்த பொடி வகைகள் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவை ஆகும். இவை நீங்கள் வெறுமனே சாதத்துடன் கலந்து சாப்பிட்டலாம் பலவிதமான சுவைகள் கிடைக்கும்.

Food Recipes: குழம்பு என்ன வைப்பது என்று யோசனையா..? ஆந்திரா ஸ்டைலில் இப்படி பருப்புப்பொடி செய்து அசத்துங்க!
ஆந்திரா பருப்புப்பொடி
Follow Us
mukesh-kannantv9-com
Mukesh Kannan | Published: 20 Sep 2024 11:00 AM

தினமும் இரவு படுக்கும்போது பெண்களாக இருந்தாலும் சரி, சமைக்கும் ஆண்களாக இருந்தாலும் சரி அடுத்த நாள் காலை என்ன சமைக்கலாம் என்ற குழப்பத்துடன் தூங்க சொல்கின்றனர். உண்மையில் இதுபோன்ற சிந்தனையே இவர்களுக்கு பெரிய மன உளைச்சலை தருகிறது. நாளை காலை இதுதான் சமைக்க போகிறோம் என்றால் பெண்கள் இன்றைய நாள் இரவே இதற்கான பணிகளை செய்து விட்டு, காலையில் ரிலாக்ஸாக வேலையை தொடங்குவார்கள். காலை எழுந்ததும் சாம்பார் வைப்போம் என்று யோசித்தால் நேற்று முன் தினம் செய்த குழம்பு வகையாக இருந்திருக்கும். சரி புளிக்குழம்பாவது வைக்கலாம் என்றாலும், அது நேற்று காலை அவரவர் சமையலறையில் நீங்கா இடத்தை பிடித்திருக்கும்.

இப்படி என்ன சமைப்பது..? என்ன சமைப்பது என்று யோசிக்காமல் நாங்கள் சொல்லும் இந்த விஷயத்தை செய்து வைத்து கொண்டால் நீங்கள் வெறும் சாதத்துடன் அவ்வப்போது கலக்கி சாப்பிடலாம். மேலும், தினசரி என்ன சமைப்பது என்ற மன அழுத்தத்தை உங்களுக்கு தராமல் இருக்கும். அதன்படி, இன்று நாம் பார்க்க உள்ள ரெசிபி ஆந்திரா ஸ்டைலில் பருப்புப்பொடி எப்படி செய்யலாம் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

ALSO READ: Food Recipes: ஹோட்டல் ஸ்டைலில் பன்னீர் அமிர்தசாரி.. வீட்டிலேயே இப்படி செய்து அசத்துங்க..!

ஆந்திரா மெஸ் பருப்புப்பொடி செய்ய தேவையான பொருட்கள்:

  1. துவரம் பருப்பு – 1/2 கப்
  2. வெள்ளை உளுத்தம் பருப்பு – 1/4 கப்
  3. கடலை பருப்பு – 1/4 கப்
  4. மிளகு – ஒரு கையில் கால் அளவு
  5. பொட்டு கடலை – ஒரு கையில் கால் அளவு
  6. வர மிளகாய் – உங்கள் காரத்திற்கு ஏற்ப
  7. பூண்டு – 4 பற்கள்
  8. பெருங்காய தூள் – சிறிதளவு
  9. உப்பு – தேவையான அளவு
  10. காஷ்மீர் சில்லி தூள் – ஒரு ஸ்பூன் அளவு

செய்முறை:

  • ஆந்திரா மெஸ் ஸ்டைலில் பருப்புப் பொடி செய்ய முதலில் கடாயை எண்ணெயை ஊற்றாமல் அடுப்பில் வைத்து, அது சூடானதும் துவரம் பருப்பை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
  • அதன்பின் தொடர்ந்து கால் கப் அளவிற்கு எடுத்து வைத்த வெள்ளை உளுந்தையும் பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • மீண்டும் கால் கப் அளவிற்கு குழம்புக்கு போடும் கடலை பருப்பை போட்டு வறுக்கவும்.
  • அதுகூடவே, ஒரு கையில் கால் அளவு மிளகும் சேர்த்து வறுத்து எடுத்து கொள்ளவும்.
  • தொடர்ந்து, அதே கடாயில் பொட்டுக்கடலை போட்டு வறுத்தவுடன் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய் என்று அழைக்கப்படும் காய்ந்த மிளகாயை போட்டு வறுக்கவும்.
  • பின் அதனை எடுத்து அனைத்தையும் ஒன்றாக ஒரு தட்டில் போட்டு அதன் சூடு குறைக்கும் வரை ஃபேன் அடியில் வைக்கவும்.
  • அதற்குள் எடுத்து வைத்த பூண்டு பற்களை நசுக்கி எண்ணெய் ஊற்றாமல் அதே சூட்டில் வறுத்து, அதனையும் அந்த தட்டி போடவும்.
  • இப்போது, இது கூடவே பெருங்காய தூள், உப்பு உள்ளிட்டவற்றை சேர்த்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து கொள்ளவும். சிறந்து பார்க்கும்போதே உங்களுக்கு நல்ல வாசனை கிடைக்கும்.
  • அதனுடன், ஒரு ஸ்பூன் காஷ்மீர் சில்லி தூளை சேர்த்து மீண்டும் ஒருமுறை அரைத்து எடுத்தால் சுவையான ஆந்திரா மெஸ் பருப்புப்பொடி ரெடி.

ALSO READ: Food Recipes: வெறும் 3 பொருட்கள் போதும்.. மிக எளிதாக மாம்பழ தோய் செய்து அசத்துங்க..!

நீங்கள் ஏதேனும் குழம்பு வைக்க சோம்பேறி தனமாக தோன்றும்போது, வெறுமனே ஒரு குக்கரில் அல்லது சட்டியில் சாதத்தை வடித்து, அதில் இந்த பருப்புப்பொடியுடன் எண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிட்டால் சுவை தாறுமாறாக இருக்கும். குழம்புகள் இல்லாமல் பொடிகள் சார்ந்த உலர் சட்னிகள் பல தென்னிந்திய உணவு வகைகளில் காணப்படுகின்றன. இந்த பொடி வகைகள் ஆந்திரப் பிரதேசத்தை சேர்ந்தவை ஆகும். இவை நீங்கள் வெறுமனே சாதத்துடன் கலந்து சாப்பிட்டலாம் பலவிதமான சுவைகள் கிடைக்கும்.

கண்டி பொடி:

பருப்புப் பொடி என்று அழைக்கப்படும் கண்டிப்பொடி என்பது வறுத்த பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு, பூண்டு ஆகியவற்றை கொண்டு வீட்டில் தயாரிக்கப்படும் பருப்பு பொடியாகும். இவற்றையே மேலே ரெசிபியாக பார்த்தோம்.

எள் பொடி:

எள் விதைகள், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, சிவப்பு மிளகாய் தூள் ஆகியவற்றை வறுத்தால் சுவையான எள் பொடி ரெடி.

வேர்கடலை பொடி:

ஆந்திரப் பிரதேசத்தின் மற்றொரு சிறப்பாக இந்த வேர்கடலை பொடியை சொல்லலாம். இது தயாரிக்க வேர்க்கடலை, கொத்தமல்லி விதைகள், சீரகம், வர மிளகாய், புளி மற்றும் பூண்டை வறுத்து அரைத்தால் சுவையான வேர்கடலை பொடி ரெடியாகிவிடும்.

Latest News