Children Care: குழந்தைகள் செல்போன் யூஸ் பண்ணுதா? உஷார்.. இவ்வளவு பிரச்னை தேடி வரும்!
Effects Of Mobile Phones: அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானம் செய்ய என அனைத்திற்கும் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன்களை நம்பியே இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் அமைதி அடைந்தாலும், குழந்தைகள் ஏற்படும் பாதிப்புகள் என்னமோ ஏராளம். இதையடுத்து, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு நிலாவை காட்டி சோறு ஊட்டிய அந்த காலம் கடந்து, இப்போது ஸ்மார்ட்போன்களை காண்பித்து சோறு ஊட்டும் அளவிற்கு வந்துவிட்டது. மொபைல் போன்களில் உள்ள யூட்யூப் மூலம் கார்ட்டூன், அனிமேஷன் காண்பித்தால் உணவுகளை சாப்பிடவே ஆரம்பிக்கிறார்கள். சாப்பிடும்போது மொபைல் போன்களை பார்ப்பதோடு விட்டுவிட்டால் பரவாயில்லை. ஆனால், வெளியே போகும்போதும், முடி வெட்டி கொள்ளும்போதும், கடைவீதிகளுக்கு செல்லும்போது என அனைத்து இடங்களிலும் ஸ்மார்ட் போன் கையுமாக உலா வருகின்றன. குனிந்த தலையை நிமிராமல், சுற்றுபுறத்தை கவனிக்காமல் வைத்த கண் வாங்காமல் ஸ்மார்ட் போன்களை உற்று பார்க்கின்றன. அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாதானம் செய்ய என அனைத்திற்கும் பெற்றோர்கள் ஸ்மார்ட் போன்களை நம்பியே இருக்கின்றனர். இதனால் குழந்தைகள் அமைதி அடைந்தாலும், குழந்தைகள் ஏற்படும் பாதிப்புகள் என்னமோ ஏராளம். இதையடுத்து, ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து இங்கே பார்க்கலாம்.
Also read: Bathroom Cleaning: பாத்ரூம் உப்புக்கரையை ஈசியா போக்கலாம்.. இதோ எளிதான சில வழிகள்!
பேச்சு ஆற்றல் வர தாமதம்:
செல்போன்களை குழந்தைகள் அடிக்கடி பயன்படுத்துவதால் பேச்சு ஆற்றல் வர தாமதமாகிறது. எப்போதும் ஸ்மார்ட் போன்களை பார்த்து கொண்டிருப்பதால் குழந்தைகள், யாரையும் பார்ப்பது கிடையாது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கவனிப்பதும் கிடையாது. இதனால், குழந்தைகள் பேச முயற்ச்சிப்பதும் இல்லை, நாம் குழந்தைகள் கூப்பிடும்போது கவனிப்பதும் இல்லை.
கண்களை பாதிக்கும்:
பேச்சு ஆற்றலை தொடர்ந்து, குழந்தைகளுக்கு அடுத்ததாக இந்த ஸ்மார்ட் போன்கள் கண்களை பாதிக்கும். போன் மூலம் வெளிப்படும் கதிர்வீச்சுகள், நேரடியாக குழந்தைகளில் கண்களை பாதிக்கிறது. தொடர்ந்து, குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவதால் பார்வை கோளாறுகள் ஏற்படவும், இளம் வயதிலேயே கிட்டபார்வை ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.
உடல்நல குறைபாடு:
பல மணிநேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு செல்போன் மற்றும் டேப்லெட்டை குழந்தைகள் பார்ப்பதால், முதுகு எலும்புகள் மற்றும் தசைகள் பாதிப்படையும். அதுமட்டுமின்றி சிறு வயதிலேயே உடல் பருமனும் ஏற்படும். இது எதிர்காலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
தனிமை படுதல்:
ஒரு குழந்தை செல்போனிற்கு அடிமையாகிவிட்டால் யார் கூடவும் அதிகமாக பழகமாட்டார்கள். எனவே, எதிர்காலத்தில் அவர்கள் தனிமை படுத்த அதிக வாய்ப்புகள் உண்டு என்று ஆய்வுகள் கூறுகிறது.
மன அழுத்தம் ஏற்படும்:
அதிகமாக குழந்தைகள் படங்கள் மற்றும் கேம்கள் விளையாடுவதன் மூலம் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் குழந்தைகளுக்கு காரணமே இல்லாமல் கோவம் வரும்.
மூளை வளர்ச்சியை பாதிக்கும்:
செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சியை பாதிக்கும். செல்போனில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் நேரடியாக மூளை தாக்கும் அபாயம் உள்ளது. இதனால் அவர்களது மூளைவளர்ச்சியை பெரியதளவில் பாதித்து, மந்தமாக காட்சியளிப்பார்கள்.
also read: Ant Infestation: வீட்டில் எறும்பு தொல்லையா? ஈசியா விரட்ட சிம்பிள் டிப்ஸ்!
மேலும் சில..
செல்போன் பயன்படுத்துவதால் குழந்தைகள் வீட்டுக்குள் இருக்கும் சூழ்நிலை ஏற்படும். இதனால் வெயிலில் இருந்து கிடைக்கும் வைட்டமின்கள் எதுவும் குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை. இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
செல்போன் அதிகமாக பயன்படுத்தும் குழந்தைகளுக்கு தூக்கம் சரியாக இருப்பதில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தை பருவத்தில் சரியான தூக்கம் இருந்தால் மட்டுமே அவர்களது உடல் வளர்ச்சி சரியாக இருக்கும். தூக்கம் கெடுவதால் தலைவலி, கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.