5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Travel Tips: வெளிநாடு செல்ல ஆசையா? இந்த அண்டை நாடுகளுக்கு எளிதாக சென்று வாருங்கள்!

Foreign Countries: நீங்கள் குறைந்த செலவிலும், விமானத்திலும் செல்லாமல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா தனது எல்லைகளை 7 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் அண்டை நாடுகளாலும். நீங்கள் விமானத்தை பயன்படுத்தாமல், ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று வரலாம். அந்த நாடுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Travel Tips: வெளிநாடு செல்ல ஆசையா? இந்த அண்டை நாடுகளுக்கு எளிதாக சென்று வாருங்கள்!
வெளிநாடு பயணம் (Image: Spencer Platt/Getty Images)
mukesh-kannan
Mukesh Kannan | Published: 01 Sep 2024 18:12 PM

வெளிநாடு பயணம்: எல்லோருக்கும் வெளிநாடு செல்ல வேண்டும் என்ற பெரிய கனவு இருக்கும். ஒருமுறையாவது வெளிநாடு சென்று அங்கே என்னதான் இருக்கிறது என்று ஆராய எல்லாரும் ஒருமுறையாவது நினைப்போம். இருப்பினும், விசா, பாஸ்போர்ட் போன்றவைகளை சரியாக கையாண்டால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும். இது மட்டுமின்றி வெளிநாடு செல்வதற்காக செலவும் மிக அதிகமாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் குறைந்த செலவிலும், விமானத்திலும் செல்லாமல் எந்தெந்த வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்ற விவரத்தை இங்கே தெரிந்து கொள்ளுங்கள். இந்தியா தனது எல்லைகளை 7 நாடுகளுடன் பகிர்ந்துள்ளது. இவை அனைத்தும் இந்தியாவின் அண்டை நாடுகளாலும். நீங்கள் விமானத்தை பயன்படுத்தாமல், ஒரு சில குறிப்பிட்ட நாடுகளுக்கு சென்று வரலாம். அந்த நாடுகளை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ALSO READ: Travel Tips: வீக் எண்ட் லாங் டிரைவ் பிளானா? மும்பையில் இந்த இடங்களை மறக்காமல் விசிட் பண்ணுங்க!

நேபாளம்:

இமய மலைக்கு அருகில் அமைந்துள்ள நேபாளம் மிக அழகான நாடுகளில் ஒன்று. இது இந்தியாவுக்கு மிக மிக அருகில் உள்ளது. இங்கே நீங்கள் விசா இல்லாமல் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். சிறப்பு என்னவென்றால், இங்கு நீங்கள் விமானத்தின் மூலம்தான் செல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. பீகார் வழியாக நீங்கள் எளிதாக நேபாளத்தில் சென்று இயற்கை அழகை ரசிக்கலாம். நேபாளம் சென்றால் பசுமதிநாத் கோயிலுக்கு மறக்காமல் சென்று வாருங்கள்.

மியான்மர்:

இந்தியாவில் கடைசி எல்லைகளில் ஒன்றான மிசோரம் வழியாக மியான்மர் நாட்டிற்கு எளிதாக செல்லலாம். என்ன இங்கு நீங்கள் செல்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் மியான்மர் சாலை விசா கண்டிப்பாக இருக்க வேண்டும். உங்களுக்கு போதுமான நேரம் இருந்தால், நீங்கள் மியான்மர் வழியாக உரிய ஆவணங்களுடன் தாய்லாந்து நாட்டிற்கு சென்று வரலாம். மியான்மர் நாட்டிற்கு செல்ல நவம்பர் முதல் மார்ச் வரை சிறந்த மாதங்களாக பார்க்கப்படுகிறது.

சீனா:

நீங்கள் விமானம் மூலம் பறக்காமல் சீனாவிற்கு கடல் மார்க்கமாக செல்லலாம். கடல் மட்டத்திலிருந்து 14,400 அடி உயரத்தில், நாது லா கணவாய் இந்தியாவின் சிக்கிம் மற்றும் சீனா மற்றும் திபெத்தின் எல்லைகளை இணைக்கிறது. இருப்பினும், நீங்கள் சீனாவுக்கு செல்ல, உரிய ஆவணங்களை பெற வேண்டியது அவசியம்.

பூட்டான்:

இந்தியாவுக்கும் பூடானுக்கும் இடையிலான எல்லை பெயரளவுக்கு உள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள ஜெய்கான் இந்தியா மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் பெருமையை பெற்றுள்ளது. இங்கும் தேவையான அனுமதியை பெற்று கொள்வது அவசியம். இங்கு 15 நாட்கள் இந்தியர்கள் விசா இல்லாமல் பூட்டானை சுற்று பார்க்கலாம்.

மொரிஷியஸ்:

இந்தியப் பெருங்கடலின் நடுவில் அமைந்துள்ள இந்த கடற்கரை நாடு மொரிஷியஸ். புதுமண தம்பதிகள் இங்கு ஹனிமூன் சென்று வர சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் 90 நாட்கள் வரை விசா இல்லாமல் இந்த நாட்டில் தங்கலாம்.

ALSO READ: Travel Tips: தென்னிந்தியாவின் அழகிய சுற்றுலாத் தலம்.. திருவனந்தபுரத்தில் பார்வையிட இவ்வளவு இடங்களா..?

தாய்லாந்து:

தாய்லாந்து தெற்காசியாவின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது, இங்கு நீங்கள் 30 நாட்களுக்கு விசா இல்லாமல் பார்வையிடலாம். உலகம் முழுவதிலுமிருந்து பலர் தங்கள் விடுமுறை கொண்டாட இங்கு வருகிறார்கள். இந்த நாடு இந்தியர்களுக்கான விசா இல்லாத நுழைவு வசதியை 11 நவம்பர் 2024 வரை நீட்டித்துள்ளது.

Latest News